Friday, November 11, 2016

குப்பைத்தொட்டியில் 500, 1000....



No automatic alt text available.



சென்னையில் குப்பை தொட்டியில் கோணிப்பையில் கட்டி வீசப்பட்ட 1000/500 ரூபாய் நோட்டுகளை அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


ஏன் வீசவேண்டும், வங்கியில் மாற்றினால் என்ன?


இதுதான் கருப்புபணம் கணக்கில் காட்டமுடியா பணம். காட்டினால் சிறைக்கு செல்ல வைக்கும் பணம்





கருப்பு பண வேட்டை அதிகாரிகளுக்கு எளிதாகி போனது, இப்பொழுதெல்லாம் குப்பை தொட்டி, கூவநதி கரை, சாலையோரம் என சாவகாசமாக அள்ளிகொண்டு அரசு கஜானாவில் சேர்த்துவிடுகின்றார்கள்

ஹாயாக அலுவலகத்தில் இருந்த வருவாய் சம்பந்தபட்ட அதிகாரிகளை எல்லாம் குப்பை பொறுக்க விட்டாயிற்று,

காரணம் குப்பை பொறுக்கும் தொழிலாளர்கள் எல்லாம் இது குப்பை என ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை தொடுவதில்லை

இனி வரித்துறை அலுவலக மீட்டிங்க் இப்படி இருக்கும்

"வந்த தகவலின் படி இன்று ரெய்டு நடக்கும் இடங்கள், கூவம் நதிக்கரை, மாம்பலம் குப்பை தொட்டி, பல்லாவரம் குப்பை தொட்டி......" என

ஆக இந்திய மக்களே குப்பை கொட்ட போகும் இடங்களில், அங்கு கோணிப்பை வைத்துகொண்டு கிளறிகொண்டிருப்பவரை கொஞ்சம் மரியாதையாக பாருங்கள்

காரணம் அவர்கள் எல்லாம் ஆபீசர்களாக இருக்க கூடும்.

இன்னும் குப்பையில் கொட்டாதவர்கள் கருப்பு பணத்தினை என்ன செய்வார்கள் என நினைக்கின்றீர்கள்?

விரைவில் வருகின்றது கார்த்தீகை தீபம், சிம்பிள் சொக்கபனையாக கொழுத்திவிடலாம்

வேறு என்ன செய்யமுடியும்? பதுக்கி வைத்திருப்பதை எப்படி வெள்ளையாக்க முடியும்?

நிச்சயம் மோடி செய்திருப்பது மிக பெரும் தைரியமான நடவடிக்கை.

இம்மாதிரி காரியங்களை செய்ய பெரும் தைரியம் வேண்டும், என்ன ஆனாலும் சந்திக்கும் மனம் வேண்டும்,

கூட்டணி இம்சைகள் இல்லாதது மோடிக்கு மிக பெரும் பலம்.

ஓரளவு கருப்புபணத்தினை இது கட்டுபடுத்தும், இனி பதுக்கவும் அஞ்சுவார்கள். இதுவரை கருப்பு பணத்தினை ஒப்படையுங்கள் என மோடியும், ஜெட்லியும் கதறியபொழுது பவர்ஸ்டாரினை பார்ப்பது போல பார்த்த இந்தியா இனி அப்படி இருக்கும்?

ஒரு அறிவிப்பு கொடுத்தாலே அரண்டுவிட மாட்டார்களா?

இருந்தாலும் வருங்காலத்தில் இதனை அறவே ஒழிக்க என்ன செய்யவேண்டும்?

குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கல்வி முறையில், வரிகட்டுவதால் ஏற்படும் நன்மைகள், கருப்பு பண தீமைகளை ஒரு பாடமாகவே பயிற்றவேண்டும். கொலை, கொள்ளை மட்டும் சமூகதீமை அல்ல, கருப்பு பணமும் மிக பெரும் சமூக தீமையே என சொல்லி உருவாக்க வேண்டும்.

இன்னொன்று ஆளுக்கொரு ஆடிட்டர் என வைத்திருக்கின்றார்கள். அந்த ஆடிட்டர்களின் பிராதான பணி, எப்படி எல்ல்லாம் தப்பிக்கலாம் என பதுக்கல்காரர்களுக்கு ஐடியா கொடுப்பது

இரு நாட்களாக இவர்கள் காட்டில் சுனாமி சுழன்றடிப்பது போல வருமானம் என்கின்றார்கள்.

இவர்கள் மீது ஒரு கட்டுப்பாட்டினை கொண்டுவரவேண்டும்

அரசிற்கு செல்லும் பணங்களை தடுக்க‌ கள்ளகணக்கு எழுத சொல்வதே இவர்கள்தான்,

அதாவது குற்றங்களுக்கு துணைபோவது என்பது இதுதான், இது குற்றமாகாதா?

மருத்துவர், வழக்கறிஞர், இன்ஞ்சினியர் என பலரும் சமூகத்திற்கு கேடு விளைவித்தால் தண்டிக்கபடும் தேசத்தில்...

எங்காவது ஒரு ஆடிட்டர் சிக்கி பார்த்திருக்கமுடியுமா?

அடுத்த அடி அங்கே அடித்தால், மோடியினை அப்படியே அந்த நாற்காலியில் வைத்துவிடலாம்.











கொசுறு






ரூபாய் நோட்டில் தாஜ்மஹால் சின்னத்தை போடவேண்டும்! - சரத்குமார்

என்னது? அவ்வளவு தைரியம் வந்துவிட்டதா?,

எவ்வளவு தைரியம் இருந்தால் போயஸ் கார்டன் வீட்டின் படத்தினை விட்டுவிட்டு , தாஜ்மஹால் படத்தினை போட வேண்டும் என சொல்லியிருப்பார்.??


அவர் அப்பல்லோவில் இருந்து வரட்டும் அதன் பின் தெரியும்




 




No comments:

Post a Comment