Thursday, November 17, 2016

என்னதான் நடக்குது...



டெல்லியில் பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு


# அமெரிக்க டாலருக்கு இந்திய சில்லறை கிடைக்கவில்லை என்பதனை சொல்ல வந்திருப்பாரோ?


# டிரம்ப் தேர்வானவுடன் அடித்து ஓடி இந்தியாவிற்கு வந்திருக்கின்றார் பில்கேட்ஸ் என்றால், ஏதோ புகைகின்றது








தோல்வியால் துவண்டுவிட்டேன்: ஹிலாரி உருக்கமான பேச்சு.


தோல்வியில் துவண்டு விட்டீரா அம்மா? இதற்குதான் தமிழகம் வரும்பொழுது கோபாலபுரம் வந்துவிட்டு செல்லவேண்டும் என்பது, அவரை கண்டு அரைமணிநேரம் பேசியிருந்தால் ஆயிரம் தோல்விகளை தாங்கும் பலம் வரும்


சந்தேகமிருந்தால் சென்னை அமெரிக்க தூதரகத்தில் விசாரித்து கொள்ளலாம்.





இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் இருந்தவரை சந்தித்தால் அரசியல் எப்படி புரியும்?





இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இருக்கும் காஷ்மீர் பிரச்சனையை தீர்த்து வைத்தால் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என பாகிஸ்தானின் வெளி விவகாரத்துறை ஆலோசகரான சர்தாஜ் அஜீஸ் கூறியுள்ளார்.


பயவுள்ள எப்படி கோர்த்துவிடுகின்றது, காஷ்மீரில் மூன்றாம் நாடு தலையீடு வேண்டும் என்பதையெல்லாம் அமெரிக்கா மறந்து வெகுநாள் ஆகின்றது, டிரம்ப் கூட தீவிரவாதத்தினை ஒழிக்க இந்திய உதவி தேவை என பகிரங்கமாக சொன்னவர்


இதில் இந்த கிழட்டு நரி எப்படி எல்லாம் திட்டமிடுகின்றது, மிஸ்டர் அஜீஸ், காஷ்மீர் சிக்கலுக்கு ஒரு தீவினை நவாசும், மோடியும் பேசி தீர்த்து அந்த நோபல் பரிசினை இருவரும் பங்கிட்டால் என்ன?




எதற்கு டிரம்பிற்கு அப்பரிசு செல்லவேண்டும்??
அதாவது ஒரு தீர்வுக்கும் நாங்கள் வரமாட்டோம், முடிந்தால் டிரம்ப் நோபல் பரிசினை வாங்கட்டும் என சீண்டிவிடுகின்றாரோ???







 

No comments:

Post a Comment