
பணம் கிடைக்குமென்றால் வெள்ளையர்கள் எதற்கும் தயார், உயிரை பணயம் வைத்து அக்காலத்தில் கடலில் அலைந்ததும் அதற்கே
பின்னாளில் உலகமெல்லாம் காலணி அமைத்ததும் அதற்கே
அதுவும் அந்த காலணி நாடுகளின் குறுநில மன்னர்களை வெள்ளை பெண்மணிகள் மணந்துகொண்டதும் ரகசியம் அல்ல
அன்றைய இந்திய பணக்காரர்களின் செல்வத்து மயங்கி வந்து வெள்ளை பெண்கள் ஏராளம், இன்றும் ஐரோப்பாவில் அக்கால மங்கையர் அள்ளசென்ற இந்திய மகாராஜா வீட்டு வைரங்கள் உண்டு
அதன் பின் அறிவியலிலும், ஆயுதத்திலும் பணம் சேர்த்தார்கள்
கச்சா எண்ணெய்க்காக அரேபியாவில் நடிக்கும் எத்தனையோ வெள்ளைக்காரர்கள் உண்டு, அப்படியே நைசாக அரேபிய சுல்தானின் சொத்துக்கள் தங்கள் நாட்டில் குவியும்படி பார்த்தும்கொள்வார்கள்.
சிரியாவில் மக்களாட்சி வேண்டும் என சொல்லும் அமெரிக்கா அதனை சவுதியிலோ, ஓமனிலோ, கத்தாரிலோ சொல்லுமா? ஒருநாளும் சொல்லாது, அவர்கள் வேடம் அப்படி.
எங்கெல்லாம் சுரண்டி சம்பாதிக்க வாய்ப்பு உண்டோ, அங்கெல்லாம் அவர்கள் வேடம் போட அவர்கள் ரெடி
இப்பொழுது இந்திய காப்பீட்டு துறை பணமும், சீனாவினை சமாளிக்க இந்திய உதவியும் , இந்தியாவின் பெரும் சந்தையும் அவர்கள் கண்ணை உறுத்துகின்றன
இதோ ஓபாமா குத்துவிளக்கினை ஏற்றிவிட்டார் , எல்லாம் மோடி சாதனை என புலம்புகின்றன
நல்லவேளையாக மோடிதான் குத்துவிளக்கினை கண்டுபிடித்தார் என இன்னும் சொல்லவில்லை
குத்துவிளக்கு என்ன? பணம் கிடைக்குமென்றால் அமெரிக்க அதிபரை குட்டிகரணம் அடிக்கவைக்கவும் அமெரிக்க தொழிலதிபர்கள் ரெடி
அமெரிக்க அதிபர்கள் அதற்கும் தயாராகவே இருக்கின்றனர்.
அவர்கள் அப்படித்தான், ஒரு காலத்தில் சதாம் உசேனுடனும், ஜெயவர்த்தனேயுடனும், பாகிஸ்தான் அதிபர்களுடனும் நடிக்காத நடிப்பினையா நம்மிடம் நடித்துவிட போகின்றார்கள்??
அவர்கள் குணம் புரிந்தால் இந்த குத்துவிளக்கிற்கெல்லாம் குதிக்க மாட்டீர்கள்.
ஈழத்தில் மட்டும் கொஞ்சம் எண்ணெய் வளம் இருந்திருந்தால் எப்பொழுதோ ஒபாமா வேட்டி கட்டி அஜித்குமார் ஸ்டைலில் "தல தீபாவளி.. " என ஆடவந்திருப்பார்
பட்டாசு வைக்கும் வேலையினை அமெரிக்க ராணுவம் பார்த்துகொள்ளும்
ஆனால் நமக்கு அதனை எல்லாம் காணும் யோகமில்லை, சீமானின் ஆட்டத்தினைதான் பார்க்க முடிகின்றது, நமது கொடுப்பினை அப்படி.
No comments:
Post a Comment