Tuesday, November 1, 2016

படத்தினை வைத்து வாக்கு கேட்போம்: தம்பிதுரை




த‌மிழக அம்மா மருத்துவமனையில் எப்படி இருக்கின்றார்கள் என தெரியாது, ஆனால் அவரின் வாழ்க்கையினை எழுகிறேன் என பலர் கிளம்பிவிட்டார்கள்


இப்பொழுது அவர் திரையுலகிற்கு வந்த காண்டம் எழுதுகின்றார்கள், அதில் சக்கரவர்த்தி ராமசந்திரன் படலம் வருகின்றது


காஷ்மீருக்கு பறந்து அவர் ஜெயலலிதாவினை எங்கோ அழைத்து சென்றார்(படபிடிபு தளத்திற்கு), பல இடங்களில் ஜெயலிதாவினை கட்டுக்குள் வைத்திருந்தார் என்றெல்லாம் எழுதி தள்ளுகின்றார்கள்





அவர் இன்று கோட்டையில் ஆட்சியில் இருந்திருந்தால் இப்படி எழுதுவார்களா தெரியாது

சரி இதற்கு கட்சிக்காரர்கள், அதுவும் நீதிபதிக்கெல்லாம் கண்டன போஸ்டர் அடிப்பவர்கள் யாரும் சத்தம் காட்டியதாக தெரியவில்லை

ஒரு கண்டனமும் இல்லை

மகா சிக்கலாக சம்பந்தபட்ட இருவரும் கட்சி பிம்பங்கள், அவர்கள் திடீரென போராடவும் முடியாது,

எப்படி? எம்ஜிஆர் என்பவரையே திட்ட முடியாதல்லவா?

ஆக ஜெயலலிதா கதையினை எழுதுகிறேன் என எங்கோ செல்கின்றார்கள், கண்டிக்க யாருமில்லை, இது இன்னும் தொடரலாம்

பொதுவாக ஒன்று சொல்லலாம்

திமுகவினர் நிரம்ப வாசிப்பவர்கள், கவனித்தால் தெரியும்

அதிமுகவினர் பெரும்பாலும் வாசிப்பது குறைவு, இப்பொழுது அது பட்டவர்த்தனமாக தெரிகின்றது. காரணம் வாசித்திருந்தால் பொங்கி இருப்பார்கள்

திரையிலே மயங்குபவர்கள் அவர்கள், கட்சியின் அடித்தளமே அதுதான்

சரி எப்பொழுது பொங்குவார்கள்?

இனி அம்மா கதைகள் எல்லாம் எழுதபட்டு முடித்தபின், அதனை படமாக அல்லது சீரியலாக எடுக்கின்றோம் என கிளம்புவார்கள் அல்லவா?

(திரிஷா அதற்காகத்தான் முன்னமே சொல்லிவிட்டார். ஆனால் அம்மணிக்கு அன்றே ஐஸ்வர்யா ராய் இருவரில் ஜெயலலிதாவின் இளமைகாலமாக நடித்தது தெரியவில்லை :) )

அன்று பொங்குவார்கள், அவர்களுக்கென்ன எல்லாம் படமாக பார்த்தால்தான் புரியும் போல‌

ஜெயலலிதா படத்தினை வைத்து வாக்கு கேட்போம் என தம்பிதுரை சீரியசாகத்தான் சொல்லியிருக்கின்றார், அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது






No comments:

Post a Comment