தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு, யாரோ சிலர் பில்லி சூனியம் வைத்ததுதான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை லண்டன் பத்திரிகைக்கு ஒரு தமிழக ஜோதிடர் சொன்னாராம்,
அந்த லண்டன் பத்திரிகை என்ன செய்திருக்கவேண்டும்? லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேலினை பிடித்து உண்மையினை சொல் என உலுக்கி இருக்கவேண்டும்
அதனை விட்டு ஜெயலலிதாவிற்கு பில்லி சூனியம் வைத்தது யார் என ஆராய்ச்சியில் இறங்கி இருக்கின்றது
வைத்தது திமுக அல்லது உட்கட்சி என்றுவேறு பட்டியல் செல்கிறது,
எப்படியோ சசிகலா புஷ்பா பெயர் இன்னும் வரவில்லை
உச்சமாக கலைஞர் உடல்நலமில்லாமல் போனதற்கு பில்லிதான் காரணம் என்கிறாராம் அந்த ஜோதிடர் , அதற்கு காரணம் யார் என சொல்லவில்லை, சீமான் வைகோ என நீங்களாக கற்பனை செய்ய கூடாது ஆமாம்
லண்டனிலும் தமிழக பத்திரிகை பாதிப்பு வந்துவிட்டதுதான் மகா சோகம்.
இதனை நினைத்தால் சிரிக்கத்தான் தோன்றுகின்றது
இவை எல்லாம் உண்மையெனில் காங்கிரசார் 20 வயதிலே கலைஞரை தொலைத்திருப்பார்கள்,
நால்வகை வேதமோ, கூட இவர்கள் எழுதிய 40 வகை வேதங்களாலும் அவரை அசைத்துகூட பார்க்கமுடியவில்லை
பில்லி சூனியத்திடமே பில்லியர்ட்ஸ் ஆடுவார் நமது கலைஞர்.
தொழில் துறையில் தமிழகம் பின்னுக்கு தள்ளபட்டது : செய்தி
கடந்த ஆண்டுதானே 2 லட்சம் கோடி முதலீடு வந்ததாக சொன்னார்கள், அது எப்படி மறைந்தது?
அவர்களிடம் கேட்பது யார்? கேட்டாலும் சொல்லவா போகின்றார்கள்??
ஒரு காலத்தில் கட்சி கணக்கு கேட்டு புதுகட்சி தொடங்கிய உத்தம கட்சி அது, கணக்கு வழக்கில் மகா சுத்தமாக இருப்போம் என்றுதான் ஆட்சிக்கு வந்தார்களாம்
2 லட்சம் கோடி முதலீடு என்னாயிற்று?
ஒருவேளை கரகாட்டம், மயிலாட்டம், தவில் மேளத்திற்கு செலவாகி இருக்குமோ?????
No comments:
Post a Comment