Thursday, November 17, 2016

மோடிக்கும் ஜேட்லிக்கும் பணக்கசப்பு இல்லை மனக்கசப்பு

நாடே குழப்பத்தில் இருக்கிறதென்றால், அரசின் குழப்பம் அதனைவிட அதிகம் இருப்பது போல செய்திகள் வருகின்றன‌


அதாகபட்டது கரன்சி பிரச்சினையில் மோடிக்கும் ஜேட்லிக்கும் பணக்கசப்பு இல்லை மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டதாம், ஆரம்பத்திலே இது புகைந்தது, அதாகபட்டது அறிவிப்பு முறைப்படி நிதியமைச்சர் ஜெட்லியால்தான் முன்மொழியபட்டு பிரதமரால் நிறைவேற்றபட்டிருக்கவேண்டும்


ஆனால் பிரதமர் இன்னும் அவரின் திடீர் ஆலோசகர்கள் என பலர் தாமாக வந்து அறிவிப்பு செய்யும் சமயம் அருண் ஜெட்லியினை காணவில்லை, அப்பொழுதே பல கண்கள் அவரை தேடின, ஆனால் காணவில்லை




இப்பொழுது விஜய்மல்லையா தொடர்பான சில விவகாரங்களில் அவரும் குழப்பமான அறிக்கைகளை வெளியிட மோதல் முற்றிற்று என தூண்டி விடும் அறிக்கைகள் வருகின்றன‌


ஒன்று சொல்லலாம்


மத்திய அரசில் மோடி முகம் தவிர சொல்லகூடிய முகம் இரண்டுதான் ஒன்று ஜெட்லி இன்னொன்று சுஷ்மா


ஸ்ருமிதிராணி தன் அதிரடியால் பிரபலமாக அவரையும் முக்கில் வைத்தாயிற்று, அவரை இப்பொழுதெல்லாம் காண முடிவதில்லை


ஸ்ருமிதி ராணி விரட்டபட்டபின் சுஷ்மாவின் வேகமும் குறைந்தது, இன்று அவரும் நோயாளியாகி படுத்துவிட்டார், அப்பல்லோ போல மர்மமில்லை, சிறுநீரம் மோசம் என அறிவிக்கை வந்தாயிற்று


ஒரே அடையாளம் தற்போது அருண் ஜெட்லிதான், ஓரளவு திறமையானவர், குறிப்பிட்டு சொல்லகூடிய ஓரே அடையாளம் அவர்தான்.


அவரையும் கழற்றிவிட்டால் பாஜக அரசு 4 டயர் மற்றும் கியர்பாக்ஸினை கழற்றிவிட்டு வெறும் இன்சினை மட்டும் வைத்து ஓட்டிவிடலாம் என கருதுவதற்கு சமம்


என்ன நினைக்கின்றார்கள்? மோடி தவிர யாரும் வெளிதெரியகூடாது என்கின்றார்களா? வேறு யாரும் முடிவெடுக்க கூடாது உத்தரவா என தெரியவில்லை, ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிகின்றது


பாஜக ஒருவிதத்தில் பரிதாபமான கட்சி, நிதியமைச்சர் அவர்களுக்கு நல்ல விதத்தில் அமைவதே இல்லை.நரசிம்மராவுக்கு மன்மோகனும், மன்மோகனுக்கு சிதம்பரமும் மிக அழகாக அமைந்தார்கள்


ஆனால் வாஜ்பாய்க்கு முன்பு யஷ்வந்த் சின்ஹா அமைந்து பெரும் குழப்பம் வந்தததெல்லாம் வரலாறு, அந்த வரலாறு திரும்பாமல் இருப்பது மோடியின் கரங்களில்தான் இருக்கின்றது


ஆக மத்திய அரசே, ஜெட்லியினையும் இந்த சு.சாமி போன்ற குழப்பவாதிகளால் கழற்றிவிட்டால் அதன் பின் இந்த அரசினை சோமாலியா அதிபர் கூட மதிக்கா நிலை வரலாம், அமெரிக்கா சென்றால் டிரம்ப் வாயால் மட்டும் சிரிக்கமாட்டார்


அந்த கட்சியில் இவர்களை விட்டால் சொல்லிகொள்ளும்படி யார் இருக்கின்றார்கள்?


சுஷ்மா இல்லை, ஸ்ரிமதி ராணி சரியில்லை என சொல்லியாயிற்று, ஜெட்லியோடும் தகறாறு எனில் என்னாகும்?


ஒருவேளை தமிழிசையினை அந்த இடத்திற்கு கொண்டு வந்துவிடுவார்களோ? கொண்டு வைத்தால் எப்படி இருக்கும்?


இந்தியர் தலையெழுத்து எப்படியும் மாறலாம் யார் கண்டது



No comments:

Post a Comment