Saturday, November 19, 2016

நாட்டுப் பற்றில்லா மக்களின் சுதந்திரத்தால் எந்த குடியரசும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை!

நாட்டுபற்றில்லா மக்களின் சுதந்திரத்தால் எந்த குடியரசும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை


இந்தியா தனிநபர் சுதந்திரம் மிக்க நாடு என்பதில் சந்தேகமில்லை, யாரும் எந்த மதத்தின் பின்னாலும், எந்த கட்சியின் பின்னாலும் செல்லலாம், யாருக்கும் கொடி பிடிக்கலாம், எந்த நடிகன் நடிகையினையும் கொண்டாடலாம் , யாருக்கும் பாதிப்பு தராத எந்த நல்ல தொழினையும் செய்யலாம்.


எந்த தடையும், எந்த பிரச்சினையும் இங்கு இல்லை. தனி நபர் சுதந்திரம் என்பது உச்சத்தில் இருக்கும் நாடு இந்தியா, சட்டம் அப்படித்தான் அனுமதித்திருக்கின்றது.




தன் உரிமை பாதிக்கபட்டால் எந்த நீதிமன்றத்தையும் எப்பொழுதும் தட்டவும் எல்லா இந்தியனுக்கும் உரிமை உண்டு


ஆனால் அச்சுதந்திரம் கருப்பு பணம் பதுக்கவும், நாட்டு பொருளாதாரத்தினை அழிக்கும் இந்த கொடுமைகளை செய்யவும் வழிவகுத்தால் எப்படி?


120 கோடி மக்களையும் திருப்திபடுத்தும் ஆட்சி என்பது நடக்க கூடிய விஷயமே அல்ல‌


நாட்டிற்காய் சில விஷயம் நடக்கும்பொழுது எதிரிகட்சிகள் அதனை அரசியலாக்கும்பொழுது ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்?


எமர்ஜென்சி அறிவித்துவிட்டு தன் போக்கில் வேலையினை செய்யவேண்டும்


எந்த நாடு அமைதியாக முன்னேறிற்று? எல்லா நாடுகளிலும் மக்களுக்கு ஒரு கடிவாளம் போட்டபின்னேதான் முன்னேறிற்று.


சீனா, சிங்கப்பூர் என இன்று உச்சம் தொட்டிருக்கும் நாடுகள் எல்லாம் மக்களின் சுதந்திரம் என்பது வேறு, நாட்டுபற்று என்பது வேறு என்பதனை மிக அழகாக வரையறுத்திருக்கின்றன‌


இந்தியாவும் அதிரடி காட்டவேண்டிய நேரமிது, தனிநபர் சுதந்திரம், தனிநபர் வாழ்க்கை எனும் முறையில் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கின்றார்கள்


நாடாளுமன்றத்தை முடக்குகின்றார்களாம், பெரும் பேரணி அது இது என கிளம்புகின்றார்களாம்


நாட்டின் நலத்திற்கான திட்டத்தில் குளிர்காயும் எதிர் கட்சி உதிரி கட்சிகளின் செயல் கண்டனத்திற்குரியது


மத்திய அரசு என்ன சிந்திக்கின்றதோ தெரியவில்லை, பேசாமல் எமர்ஜென்சி என அறிவித்துவிட்டு இந்த இம்சைகளை அடக்க்கலாம்


சீனாவில் மாவோ, டினாமன் ஸ்குவரில் டெங், இன்னும் வட கொரிய அதிபர்கள், சிங்கப்பூர் லீயின் சில கடுமையான சட்டங்கள் அல்லது அமெரிக்கா போல 3ல் ஒரு பங்கு வரி என்றா இங்கு மக்களை அடக்கி வைத்திருக்கின்றோம்


அல்ல, அளவுக்கு மீறிய சுதந்திரமே இந்நாட்டின் பெரும் சாபக்கேடு. அந்த சுதந்திரத்தில்தான் இத்தனை கட்சிகள், இத்தனை குழப்பம், இத்தனை ஆர்ப்பாட்டம்


இத்தேசம் தேசமாக இருக்கவேண்டும் என்றால் மக்களின் மாபெரும் சுதந்திரம் சில கட்டுப்பாடுகளுக்குள் வந்தே தீரவேண்டும்


இல்லை என்றால் 120 கோடி துண்டுகளாக கூட தேசம் உடையும், அப்படித்தான் ஆளாளுக்கு என் பணம் என் தங்கம் என கிளம்பியிருக்கின்றார்கள்


ஒரு பெரும் அதிரடி சட்டத்தால் இவர்களை அடக்காமல் ஒரு மாற்றமும் இந்நாட்டில் சாத்தியமில்லை


செய்யலாம், நமது நாடு நமது உரிமை. யார் வந்து கேள்வி கேட்டுவிட முடியும்?


கருப்புபண ஒடுக்கம் என கொஞ்சம் வெற்றியில் இருக்கும் மோடி முழுவெற்றி பெற, கடுமையான சட்ட அறிவிப்புக்கள் தேவை


வாழ்க பாரதம், வந்தே மாதரம்.



No comments:

Post a Comment