Monday, November 21, 2016

தமிழகமே தயாராகு, அம்மா திரும்பும் நேரம் நெருங்கிவிட்டது...

நீங்கள் என்னைக் கண்டித்தது என்பது, ஒரு தாய் தன் மகளைக் கண்டித்தது போலத்தான். நீங்கள் இல்லாத காலங்களில் என்னெல்லாம் நடந்தது தெரியுமா?" : முதல்வருக்கு சசிகலா புஷ்பா எம்பி நீண்ட கடிதம்


அதாகபட்டது நீங்கள் என் அம்மா, நீங்கள் அடித்தெல்லாம் பாசமான அடி, அவ்வளவுதான். நீங்கள் இல்லா நேரம் ஒரு மகளாக உங்களை சுற்றி நடந்ததை சொல்கிறேன் என உருகியிருக்கின்றார் எம்பி


என்னை என்ன செய்யமுடியும் என சவால் விட்ட எம்பி, பார்லிமென்டில் ஜெயா மீது பெரும் சர்ச்சை கிளப்பிய அதே எம்பி.




அவனவன் அம்மா என காலில் விழ தயாராக, இவரோ நான் உங்கள் மகள், அம்மா மகளை அடிப்பது சகஜம், இன்னமும் என்னை போட்டு நீங்கள் சாத்தலாம் எனும் அளவிற்கு இறங்கிவிட்டார், அதனைத்தான் சொல்ல வருகின்றார்.


இவ்வளவு நாளும் விடைதெரியா கேள்வி ஒன்றிற்கு விடை கிடைத்த தருணமிது, அதாவது ஜெயலலிதா நலம்பெற்றுள்ளார் என்பதற்கு இதனை விட என்ன ஆதாரம் வெண்டும்?


விரைவில் ஜெயா பணிக்கு திரும்புவார் என்பதனை தமிழர்கள் உணர வேண்டிய சிம்பாலிக் செய்தி இது.


ஆக தமிழகமே தயாராகு, அம்மா திரும்பும் நேரம் நெருங்கிவிட்டது











ரூபாய் நோட்டு பிரச்சனை பற்றி விவாதிக்க தயார்: எதிர்க்கட்சிகள் தயாரா? அருண்ஜெட்லி கேள்வி

நிதியமைச்ச்சர் அழைக்கின்றார், உருப்படியான விவாதத்திற்கு தகுதியான நபர்கள் உண்டு, மன்மோகன் சிங் போல உண்டு. ஆனால் செல்வார்களா என்றால் செல்லமாட்டார்கள்

விஷயம் அறிந்தவர்கள் செல்லமாட்டார்கள்


யார் செல்வார்? அநேகமாக திருமாவும், சீமானும் சென்று முஷ்டி தூக்கி முழங்கலாம்.







காங்கிரஸ் பாஜக மீறி டிரம்ப் போல ஒருவர் இந்தியாவில் ஆட்சிக்கு வரவேண்டும் : திருமா



அட இந்தியா இருக்கட்டும். திமுக அதிமுக தாண்டி ஒருவர் முதல்வராக வரவேண்டும் என இன்னொருமுறை உரக்க சொல்லுங்கள் பார்க்கலாம்,

சொல்லிவிட்டுத்தானே இப்படி தனியாக திண்ணையில் அமர்ந்திருக்கின்றார்.


தமிழகத்திலே இப்படி நிலை இருக்க, அன்னார் தேசிய அரசியலை மாற்றபோகின்றாராம்.







No comments:

Post a Comment