Friday, November 18, 2016

மோடிக்கு முஷாரப் பாராட்டு




மோடிக்கு முஷாரப் பாராட்டு : செய்தி


அட பரிதாபமே, அன்று இந்திராவினை சூனியக்காரி, கிழவி என்றெல்லாம் கொதித்து சொன்ன ஜியா உல்ஹக்கின் வார்த்தையில் தெரிந்தது இந்திய பயம், இந்திய வெறுப்பு


அவர்கள் திட்டினால் இந்தியா சரியான திசையில் செல்கிறது என பொருள், வாழ்த்தினால் நாம் நாசமாகிகொண்டிருக்கின்றோம் என பொருள்.





இன்று மோடியின் நடவடிக்கை, பெரும் அர்த்தமுள்ளாதாக இருந்து அது இந்தியாவின் எதிர்காலத்தினை மாற்றும் திட்டமாக இருந்தால் நிச்சயம் முன்னாள் ராணுவ ஜெனரல் இப்படி சொல்லமாட்டான்

வாஜ்பாய் காலத்தில் கார்கிலில் ஊடுருவி மூக்கறுபட்டவன் இந்த முஷாரப், அந்த வன்மம் அவன் மனதில் என்றும் உண்டு. கார்கில் தோல்வியினை மறைக்க அதிபரானாலும் நாட்டு மக்கள் ஏற்றுகொள்ளவில்லை, தேர்தலில் விரட்டினார்கள்

இன்றும் இந்தியா என்றால் வயிறு எரியும் நபர்களில் முதன்மையானவர் இந்த முஷாரப்

இதில் இவர் மோடியினை திட்டியிருந்தால் அது நல்ல அறிகுறி, வாழ்த்தி அல்லவா தொலைத்துவிட்டார், இதுதான் சரியில்லை

எதிரி என்று நம்மை பார்த்து புன்னகைகின்றானோ, அன்றே நமக்கு ஏதோ ஆகிவிட்டது என்பது வெகு சுலபமாக புரிந்துகொள்ள கூடியது.

சரி பாகிஸ்தானிய முன்னாள் அதிபரை திடீரென சீனுக்கு கொண்டுவந்திருக்கும் தந்தி டிவி, இந்த ராஜபக்சே அல்லது கோத்தபாய போன்றவர்களை எப்பொழுது கொண்டுவரும்?

அப்படி ராஜபக்சே பேசுவாரா?

பேசினால் அங்கிளும், வைக்கோவும் வேல்முருகனும் விடுவார்களா?

நவம்பர் 26ல் ராஜபக்சே தந்தி டிவியில் பேசினால் எப்படி இருக்கும்?









மக்களின் வயிற்றுப் பசியோடும், வறுமையோடும் விளையாடிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம் : வீரமணி சீற்றம்

பாருங்கள் மோடி, இந்த வீரமணி எல்லாம் சீறுவதற்கா வாய்ப்பு கொடுத்து கொடுத்திருக்கின்றீர்கள்? சட்டத்தோடு சட்டமாக டிரஸ்டுகளுக்கும் சில கட்டுபாடுகளை விதியுங்கள்

அதன்பின் வீரமணி எப்படி கத்துவார்?, டிரஸ்ட் அறங்காவலர்கள் எவ்வளவு பசியோடும் வறுமையோடும் இருக்கின்றார்கள் என்பது அப்பொழுதாவது உலகிற்கு தெரியட்டும்.







No comments:

Post a Comment