Wednesday, November 30, 2016

மருத்துவமனையில் பிரபலங்கள்...

முதல்வர் அப்பல்லோவிலும், அவரின் குருநாதர் சோ ராமசாமியும் அப்பல்லோவில் அனுமதிக்கபட்டுள்ளார்


சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.


கலைஞர் கருணாநிதி நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன‌




நாட்டினை ஆட்டிவைக்க அவர்களுக்கொரு காலம் இருந்தது என்றாலும் மருத்துவர் கைகளில் விழவும் ஒரு காலம் இருக்கின்றது


மருத்துவமனையில் இருக்கும் இந்த பிரபலங்களின் மனநிலை எப்படி இருக்கும்?


ஆட்சியும் அதிகாரமும் திரும்ப வேண்டும், கண்டிப்பாய் வேண்டும் என்றா இருக்கும்? நலம் பெற்று திரும்பினால் போதும் என்றுதான் கெஞ்சிகொண்டிருக்கும்.


ஆண்ட காலமும், அவர்கள் கோலோச்சிய காலமும் கனவுபோல தெரியும்,


மருத்துவமனையின் இந்நொடியே உண்மை என தோன்றும், அந்த வலி மிக ரணமானது,


எத்தனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம்?, எத்தனை தேசங்களை அடக்கி வைத்தோம், இன்று இந்த நோயினை வெல்ல முடியாத வாழ்வா இது? என்றெல்லாம் மனம் சில கணம் யோசிக்கலாம்


எல்லா மானிடரும் ஒரு எல்லைக்குட்பட்டவரே, அதிகாரம் முதல் வாழ்நாள் வரை எல்லாம் ஒரு வரையரைக்குள் மட்டுமே.


மகா கொடுமையானது காலம், யாரை உயர்த்தி வைக்கின்றதோ அவர்களை முடக்கியும் வைக்கின்றது, தூக்கியும் கடாசுகின்றது.


இரக்கமற்ற எந்திரம் போன்றது காலம், அதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல.






 ஒரு மனிதருக்கு அதுவும் முதியவருக்கு நோய் வருவது இயற்கையானது


ஆனால் அந்த நோயோ, தளர்ச்சியோ கட்சி சம்பந்தமான பதவி அறிவிப்புகள் வெளியிட்டபின் வருவதுதான் ஏன் என தெரியவில்லை.

ஸ்டாலின் என் அரசியல் வாரிசு என சொன்னவுடன் கடந்தமுறை சென்றார், இம்முறை நேற்று ஏதோ செயல்தலைவர் பதவி என ஒன்றை அறிவித்துவிட்டு இன்றும் சென்றிருக்கின்றார்.


விரைவில் நலம் பெற்று வரட்டும்

விரைவில் திரும்பும் தலைவர் ஏதும் கட்சி அறிவிப்பினை அறிவித்து அது சர்ச்சையானால் அடுத்து என்ன நடக்கும் என ஓரளவு யூகிக்கலாம்

சென்னையில் மருத்துவமனைகளுக்கு பஞ்சமில்லை.







முதல்வருக்கு நீர்சத்து குறைபாடு ஆஸ்பத்திரியில் அனுமதி
எதிர்கட்சி கலைஞருக்கு அதே நீர்சத்து குறைபாடு அவரும் அனுமதி

தமிழகம் முழுக்க குடிக்க‌ நீரில்லாமல் மக்கள் கடும் வேதனை, அவர்களுக்கும் நீர் குறைபாடு


என்ன தமிழகமோ, எங்கு எங்கு நோக்கினும் நீர்சத்து அல்லது நீர் குறைவு,

டாஸ்மாக் தவிர. அதற்கு ஒரு குறையுமில்லை










இன்று உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினமாம்



எல்லா போலி சாமியார்களும் அவர்களின் அடிப்பொடிகளும் கவனத்தில் கொள்ளவேண்டிய‌ நாள் இது.


 









சொன்னாரு டொனால்ட் ட்ரம்பு

இனி வர்த்தகத்தில் ஈடுபடமாட்டேன், அமெரிக்க அதிபராக நாட்டினை வழிநடத்துவேன் : டொனால்டு டிரம்ப்

இப்படியே தமிழக அரசியல்வாதிகளும் தங்கள் பழைய தொழிலான நடிப்பு, மேடை முழக்கம், வசனம் எழுதுதல் போன்றவற்றை தலைமுழுகிவிட்டு உண்மையான மக்கட் பணியாராக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?




 

No comments:

Post a Comment