Tuesday, November 22, 2016

நளினி புத்தகம் என்றால் யார் வெளியிடுவார்?



Image may contain: 2 people , text


சிறையில் பிரியங்காவுடன் நடந்த சந்திப்பு பற்றி நளினி புத்தகம் எழுதியிருக்கின்றார்


நளினி புத்தகம் என்றால் யார் வெளியிடுவார்? அவர்களேதான்


வரும் 24-ஆம் தேதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவன், சீமான் ஆகியோரால் இந்தப் புத்தகம் வெளியாகவிருக்கிறது.


இருகட்டும்


அதில் நளினி பிரியங்காவிடம் தன் நிலையினை விளக்கி சொன்னாராம், தானும் தன் கணவனும் குற்றமற்றவர் என நிரூபித்து வாதாடினாராம்


கேட்டுகொண்டிருந்திராம் பிரியங்கா


நாங்கள் மட்டுமல்ல, இன்னும் பலர் நிரபராதி (வைகோவாக இருக்குமோ) என நளினி சொல்ல, அவர்களை பற்றி நீங்கள் ஏன் பேசுகின்றீர்கள் என சீறிய பிரியங்கா, அப்படியானால் நீங்கள் எல்லோரும் நிரபராதி, செத்துபோன என் தந்தை குற்றவாளியா என சீறிவிட்டு நகர்ந்தார் என செய்திகள் இருக்கின்றனவாம்


சரி புத்தகம் வரட்டும் பார்க்கலாம்


2009ல் பிரியங்கா நளியினை சந்தித்ததும், பின் அவர் அதனை ஒப்புகொண்டதும் முன்பு நடந்தவை


தான் நிரபராதி என சொல்கின்றாராம் நளினி, தன்னை வஞ்சகமாக கொலையில் சிக்க வைத்துவிட்டார்கள் என பிரியங்காவிடம் சொன்னதுதான் புத்தக சுருக்கம்


சரி நளினி


உங்களை வஞ்சகர்கள் ஏமாற்றி இருக்கலாம், ஆனால் உங்களின் மகளை லண்டனில் டாக்டருக்கு படிக்க வைத்தது அந்த வஞ்சகர்களா? அல்லது வேலூர் சிறை கூலியா


அப்படிபட்ட பெரும் படிப்பினை கொடுக்க அவர்களுக்கு என்ன அவசியம்? யாரோ தங்கள் இனத்தின் பெரும் போராளியாக உங்களை பார்க்காமல் எப்படி சாத்தியம்?


சரி நீங்கள் நிரபராதியாகவே இருந்து தொலையுங்கள்


ஆனால் நீங்கள் கைதாகி அடுத்த 18 ஆண்டுகள் மாவீரர் உரை வாசித்தானே பிரபாகரன், ஒரு இடத்தில் ஒரே ஒரு இடத்தில் இந்த முருகன், நளினி குற்றமற்றவர்கள், பேரரிவாளன் இன்னோசென்ட், நானும் குட்பாய். இந்த கொலைக்கு நாங்கள் காரணமல்ல என சொன்னனா?


அவன் வாய்திறந்திருந்தால் இந்த சிக்கல் உங்களுக்கு வருமா?


அந்த கொடும் அமைதியினை பற்றி, உங்கள் சிறை கும்பலை அறவே கண்டுகொள்ளா பிரபாகரன் பற்றி நீங்கள் ஏன் புத்தகம் எழுதவில்லை?


அதனை எல்லாம் எழுதமாட்டீர்கள்


உங்களை தூக்கிலிருந்து காப்பாற்றி வைத்திருக்கும் அந்த குடும்பத்த்து பெண் வந்து சந்தித்தால் பக்கம் பக்கமாக எழுதுவீர்களா நளினி?


சொல்லவேண்டியதை சொல்லமாட்டீர்கள், எதனை செய்ய கூடாதோ அதனை செய்வீர்கள்


உங்கள் கணவன் சாமியாரகிவிட்டானாம், ஞானம் கிடைத்திருக்கின்றது பெரும் அமைதி


ஆனால் நீங்கள் திருந்தமாட்டீர்கள், அப்படி திருந்த நினைத்தாலும் இந்த வை.கோ, சீமான் கும்பல் உங்களை திருந்த விடாது


வைகோவினை நம்பி அந்த புலிதலைவனே அழிந்த நிலை உங்களுக்கு தெரியுமல்லவா? இன்னும் உதாரணாம் வேண்டுமென்றால் விஜயகாந்தினை பாருங்கள்


சிந்தியுங்கள் நளினி,


உங்கள் மீதான தமிழக‌ பரிதாபத்தை நீங்களே வெறுப்பாக மாற்றிகொண்டிருக்கின்றீர்கள், இது ஒருகாலமும் உங்களுக்கு விடிவு தராது


பிரபாகரனை கண்டித்து பெரும் அறிக்கை விடாமல் உங்களுக்கு விடுதலையே இல்லை, ஒரு காலமும் இல்லை


நீங்கள் நிரபராதி என்றால் அதனை செய்யலாமே, ஏன் செய்யவில்லை?


இந்த தயக்கம்தான் உங்கள் விடுதலையின் பெரும் தடை அம்மணி.


அந்த அற்புதம்மாளும் இவ்வகையில் சிந்தித்தால் நல்லது,















No comments:

Post a Comment