Thursday, November 17, 2016

நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இந்தியா வருகிறார்...

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இந்தியா வருகிறார்.


சரி ஏன் அவசரமாக வருகின்றார்?, இனி பாகிஸ்தான் கள்ளநோட்டு அடிப்பது சிரமம், அப்படி அடித்தாலும் இந்தியா எப்பொழுது இப்படி அறிவித்து நிலமையினை சிக்கலாக்கும் என தெரியாது, ஒருவேளை அந்த நிலையினை ஆராய வருவாரோ??


பாகிஸ்தானியர் குதர்க்கமானவர்கள், பாகிஸ்தானிய பினாமிகள் பெயரில் இந்தியாவில் வங்கியே தொடங்கினால் என்ன? என சிந்தித்தாலும் சிந்திக்கலாம்.




பாகிஸ்தான் பினாமிக்கு ஆட்களா இல்லை , தேசம் பற்றி சொன்னால் என்னோடு மல்லுகட்டும் ஏராளமான இந்தியர் பற்றி இப்பொழுதே சொல்ல முடியும்.


சரி அவர் வரட்டும்,


கொஞ்சம் பழைய கரன்சி கொடுத்து மாற்ற ஏதாவது ஒரு வங்கி வாசலில் விடுவோம், மனிதர் அலறிகொண்டு பாகிஸ்தானுக்கு பறந்து இந்தியர்கள் பாவம், இனி சண்டை எல்லாம் வேண்டாம், இதனை விடவா அணுகுண்டு தாக்குதல் கொடுமை? என ஓடியே விடுவார்.


அப்படியே நமது ஆலோசகர்களையும் பெஷாவர் பக்கம், வர்சிஸ்தான் பக்கம் அனுப்பினால் நம்மவர்களுக்கும் அவர்கள் மேல் அனுதாபமே வரும், அணுகுண்டு வீசும் ஆசையெல்லாம் வராது.


தினசரி தற்கொலை தாக்குதலில் சாகும் பாகிஸ்தானியரை கண்டால், இதில் நாமும் யுத்தம் நடத்தி இவர்களை கொல்லவேண்டுமா என்றே ஒதுங்க தோன்றும்,


எல்லையில் நம்மவர் 5 பேரை அவர்கள் கொன்றால், அவர்கள் பொதுமக்கள் 50 பேர் அவர்கள் மத தீவிரவாதிகளாலே கொல்லபடுகின்றனர்


அந்த மத தீவிரவாதிகளை விடவா பாகிஸ்தானில் நாம் அழிவு ஏற்படுத்திவிடமுடியும்? அவர்களே அவர்களை அழித்துகொள்வார்கள்


இருநாட்டிலுமே அப்படி ஆயிரம் மக்கள் நல பிரச்சினைகள் இருக்கின்றன, இருநாட்டிலும் சீரமைக்க வேண்டியது எவ்வளவோ இருக்கின்றது


ஆனால் இந்தியரை விட பாகிஸ்தானியர் வாங்கியிருக்கும் சாபம் மிக அதிகம்.


இந்தியாவில் நடப்பது கருப்பு பண விளையாட்டு,


பாகிஸ்தானில் நடப்பது மதரீதியான ஆயுத விளையாட்டும் அதனுடனான ராணுவ விளையாட்டும் தினசரி கொடூர சாவுகளும்.






இந்தியாவில் கரன்சி குழப்பம் இப்படி இருக்க, பாகிஸ்தானியர் வித்தியாசமாக யோசிப்பார்கள்


"எத்தனையாயிரம் கள்ளநோட்டு அடித்து இந்தியாவில் புழக்கத்தில் விட்டோம், ஒரு சத்தமும் மக்களிடமிருந்து ஒரு எதிர்ப்பும் வரவில்லை. மும்பை குண்டுவெடிப்பே கருப்பு பணத்தில்தான் நடந்தது, ஒரு சத்தமுமில்லை


இந்தியாவில் குழப்பமில்லை என முகத்தை தொங்க போட்டு அமர்ந்தோம்




ஆனால் கள்ளநோட்டை மதிப்பிழக்க வைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும்பொழுது, இந்தியாவில் ஒருவித அரசுக்கெதிரான குரல்களும் பலவிதமான எதிர்ப்பு சத்தங்களும் கேட்கின்றன‌


இப்படிபட்ட விசித்திரமான வெற்றி எங்காவது கிடைக்குமா?


கள்ளநோட்டு அடித்து உருவாக்கமுடியாத இந்திய சிக்கலை, கள்ளநோட்டை செல்லாக்காசாக்கும் இந்திய அரசின் முயற்சியில் உருவாக்கிவிட்டோம்."


எப்படிபட்ட ராஜதந்திரம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ கணக்கு,


அவர்களே எதிர்பாரா விபரீத திருப்பங்களை இந்திய மக்கள் கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்.









No comments:

Post a Comment