Wednesday, November 16, 2016

கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் இணையத்துல‌...

20% சதவீத மக்களுக்காக எடுக்கும் நடவடிக்கைக்கு 80% சதவீத மக்களை பற்றி அரசு கவலைபட்டிருக்க வேண்டும் : நடிகர் விஜய்

எத்தனை ஐ.ஏ.எஸ் எத்தனை நிபுணர்களை கொண்டு வகுக்கபட்ட திட்டத்திற்கு, 4 டைரக்டர்களையும் சில நடன இயக்குனர்களையும் தவிர் ஏதும் தெரியாத இவர் ஆலோசனை சொல்கின்றாராம்

சரி, கொஞ்சநாளாக அமைதியாக இருந்த அண்ணன் ஏன் இப்பொழுது முணுக ஆரம்பிக்கின்றார்?, தலைவா படம் வரும்பொழுது புரட்சி தலைவி அம்மா என அழுதது மறந்துவிட்டதா? அல்லது அந்த சிங்கம் நோயில் வீழ்ந்ததென்று இவர் பேச ஆரம்பித்திருக்கின்றாரா?

வெளிநாட்டு செய்தி நிறுவணங்கள் 82% சதவீத மக்கள் மோடியினை ஆதரிப்பதாகவே செய்தி வெளியிட்டு அரண்டு நிற்கின்றன, சென்னையும் தமிழகத்தின் 4 ஊரும் இந்தியா அல்ல‌

இதில் இவர் ஆலோசனை சொல்வாராம், எந்த கவிஞன் எழுதினான் என தெரியவில்லை ஆனால் இவருக்கு பொருத்தமான வரிகள்

"கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் இணையத்துல‌
இவன் போல ஒரு கிறுக்கன் பொறந்ததில்ல..."




தமிழகத்தில் எல்லோரும் பதற்றத்தில் இருக்கின்றார்களாம், யாரும் நிம்மதியாகவே இல்லையாம் எல்லொரும் தூக்கமின்றி, உணவின்றி ஒரு மாதிரியாக அலைவதாக இணையமெல்லாம் முழங்குகின்றார்கள்

எப்படி சொல்லமுடியும்?

தமிழக அமைச்சர் பெருமக்கள் எவ்வளவு நிம்மதியாக இருக்கின்றார்கள், அமாவசை பயமில்லை, விடிந்தால் அமைச்சராக இருப்போமோ? என்ற அச்சமில்லை. எவனும் மேலிடத்தில் போட்டு கொடுத்துவிடுவானோ என நடுக்கமில்லை


மிகுந்த நிம்மதியாக நாற்காலியில் ஹாயாக அமர்ந்திருக்கின்றார்கள்

அதாவது பிரச்சினை என்பது அவர் அவர் மனம் பொறுத்தது, வேண்டுமானால் அவர்களையோ அல்லது சசிகலா புஷ்பாவினையோ பாருங்கள்,

அந்த நிம்மதி உங்களுக்கும் கிடைக்கும், நிம்மதியே பிரதானம்.




 

No comments:

Post a Comment