Friday, November 25, 2016

பாரத கர்ணனின் இன்றைய உருவம் மன்மோகன் சிங்



Image may contain: beard, hat and one or more people


 முழு நல்லவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள், வந்தாலும் முழு நல்லவர்களாக இருக்கமாட்டார்கள், பெரும் சமரசம் செய்யவேண்டியது அரசியல் என்றான் ரூசோ


அரசியல்னு வந்துட்டா ஆயிரம் சமரசம் செய்யணுமுங்க, அது நம்ம அடையாளத்த மறைச்சுபோடுமுங்க அதனால நா அரசியலுக்கு வரலீங்க என கொங்கு தமிழில் சொன்னார் பெரியார்


இன்று மன்மோகன் சிங்கினை அப்படித்தான் பார்க்கவேண்டி இருக்கின்றது


பெரும் பொருளாதார மேதை, கிட்டதட்ட 20 டாக்டர் படங்களை ஆய்விற்காக வாங்கியவர், அமைதியானவர், இந்தியாவின் தூண்களான சீக்கிய வம்சத்தின் பெரும் அடையாளம் என அவருக்கு இருக்கும் இமேஜ் மிக பெரிது


தொடக்க கால மன்மோகன் சிங் அரசியல்வாதி அல்ல, ஆனால் 1971ல் இருந்தே இந்திய பொருளாதார ஆலோசகர். ராஜிவிற்கு பின்னரான காலங்களில் அவர் உச்சம் பெறுகின்றார், அமைச்சராகின்றார்


1990களுக்கு பின் உலக நாடுகளுக்கு இந்திய சந்தையினை திறந்துவிட்டது அவரால், இன்றிருக்கும் பெரும் வேலை வாய்ப்பிற்கும் விஸ்வரூபமெடுத்திருக்கும் இந்திய பொருளாதார சந்தைக்கான வாய்ப்பு அவராலேயே கொண்டுவரபட்டது


நல்ல திறமையாளர், ஆனால் பிரதமர் பதவியில் அவரை கூட்டணி எனும் பெயரில் பாடாய் படுத்தினார்கள். எத்தனையோ ஊழல்களை அவரால் கட்டுபடுத்தமுடியவில்லை


பல இடங்களில் கண்களை மூடிகொண்டுதான் ஆட்சிநடத்தினார்


2008 உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்த தேசத்தை அவர் காத்தார் என்பது அவரின் பெரும் முத்திரை


அப்படிபட்ட பெரும் பிம்பமான மன்மோகன் சிங், அரசியல் விளையாட்டில் களமிறக்கபட்டார்


நேற்று அவர் பேசியது சுருக்கமாக இருந்தாலும், சில இடங்களில் நிர்வாக குழப்பம் என சொன்னாலும், மனதை கல்லாக்கி கொண்டு அவர் எழுப்பிய வினா ஒன்று உண்டு


எந்த தேசம் மக்களின் பணத்தினை எடுக்கவிடாமல் செய்தது?


இதுதான் கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம்


உலகில் எத்தனை நாடுகளில் மக்களின் பணம் ஒரே நாளில் நிரந்தர மதிப்பிழந்து குப்பை ஆகியிருக்கின்றது


1998ல் இந்தோனேசியா ஒரே நாளில் புரட்டபட்டது, சில ஆப்ரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கபட்டு ஒன்றும் இல்லாமல் ஆனது


ரஷியாவில் சோவியத் பிளவின் போது வங்கியே திவாலாகி மக்கள் பணமெல்ல்லம் கோவிந்தா ஆனது


சமீபத்தில் கீரிஸில் நடந்தது என்ன?


இன்று சுவிஸ் பேங்க், பனாமா பேங்க் என பதுக்குபவர்கள் (இந்தியரும் உண்டு) எல்லாம் எதற்காக பதுக்குகின்றார்கள்? அனுபவபட்டவர்கள், தங்கள் நாடு திடீரென பறிக்கும் என அஞ்சுபவர்கள் அங்கே குவிக்கின்றார்கள்


ஆக எல்லா நாடுகளும் செய்ய கூடிய விஷயம்தான், அடித்து பறிக்கும் நாடுகளும் உண்டு, மறைமுகமாக வரி என சுரண்டும் நாடுகளும் உண்டு.


இந்தியா அப்படி அல்ல, நம் நியாயமான பணத்தின் ஒரு பைசா கூட அரசு எடுக்கவில்லை, கணக்கினை காட்டி மாற்றிகொள் என்கின்றார்கள்


லட்சகணக்கான் டிப்பாசிட் எல்லாது அன அறிவித்தார்களா? அல்லது எல்லா வங்கி பணமும் அரசுக்கே என பறித்தார்களா?


இது எல்லாம் மன்மோகனுக்கு தெரிந்தும் மறைக்கின்றார், இங்குதான் நிலக்கரி ஊழலிலும், அலைகற்றை ஊழலிலும் சூழ்நிலை கைதியாக தெரிந்த மன்மோகன் முகம் மறுபடியும் தெரிகின்றது


எவ்வளவு நீண்ட அனுபவம் கொண்டவர் மன்மோகன் சிங்


கொஞ்சம் நினைவுகளை சுழற்றுங்கள் மன்மோகன்


இந்திரா இந்திய பணமதிப்பினை கணிசமாக குறைத்தபொழுது இத்தேசத்தின் விலைவாசி சட்டென ஏறவில்லையா? அப்பொழுது நீங்கள் எங்கிருந்தீர்கள்?


வங்கபோரின் பொழுது நாட்டின் பொருளாதாரம் எப்படி எல்லாம் பாதிக்கபட்டது, இத்தேசத்து மக்கள் கொட்டி கொடுத்து காப்பாற்றவில்லையா? அரிசி முதல் உப்பு வரை கிடைக்காவிட்டாலும் வாழ்க இந்தியா என அவர்கள் சிரமம் பொறுத்தது தெரியவில்லையா?


மிசா கொடுமை எவ்வளவு காலம் நீடித்தது? அதில் இந்தியா என்ன அழிந்ததா? அல்லது ஆப்கன் போல சீரழிந்ததா? மனதை தொட்டு சொல்லுங்கள், தேசம் அதன் பின் எழும்பவில்ல்லை?


போபல் விபத்திற்கு காரணமான ஆண்டர்சன் எப்படி தப்பினார்? அம்மக்களுக்கு இன்றுவரை கிடைத்திருக்கும் நஷ்ட ஈடு என்ன? அவர்கள் பாதிக்கபடவில்லையா? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?


23 ஆண்டுகளுக்கு முன்பு செல்லுங்கள் மன்மோகன்சிங்


காட் ஒப்பந்தம் வேண்டாம், தாராளமயமாக்கல் வேண்டாம் அது இந்திய விவசாயத்தை அழிக்கும், விலைவாசி கூட்டும், பணம் மதிப்பில்லமல் ஆகும் என இந்திய முழுக்க கலவரம் வெடித்ததே


நிதியமச்சரான நீங்கள் கொஞ்சமாவது கண்டு கொண்டீர்களா?


இது நாட்டின் நலனுக்கான செயல் என டர்பனை காதோடு சேர்த்துகட்டிக்கொண்டு அமைதியாக இல்லை


அதன் பின் நடந்தது என்ன?


மொத்த உலகமும் இந்தியாவில் நுழைந்தது, வேலை வாய்ப்பு பெருக பெருக இந்திய கரன்சி மதிப்பிழந்தது. அது பெட்ரோல் விலையில் தெரிய தெரிய விலைவாசி கூடியது, கரன்சி சரிவில் தங்க விலை தகிர்த்தது, விவசாயம் வீழ்ந்தது.


ஆனால் வேலைவாய்ப்பு பெருகியிருக்கின்றது ஒப்புகொள்கின்றோம், ஆனால் வாழும் வாய்ப்பு பெரும் சவாலாக மாறிவிட்டதல்லவா? அதாவது உங்கள் நோக்கம் நல்லதாயிலும் எத்தனை பக்க விளைவுகளை கொண்டுவந்துவிட்டது


அன்று தாராளமயமாக்கல் வேண்டாம் என இந்த தேசம் எப்படி எதிர்த்தது? இதே பாராளுமன்றத்தில் எத்தனை வாதங்கள் வந்தன? மக்கள் கதறபொகின்றார்கள், தேசம் சுடுகாடாய் போக போகின்றது என கதறும்பொழுது என்ன சொன்னீர்கள்?


நாட்டு நலன் காக்க பொறுத்துபாருங்கள் என சொல்லிவிட்டு அமரவில்லையா?


இன்று மோடியும் அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கின்றார், பொறுத்து பார்க்கலாம் அல்லவா?


அன்று 1993ல் உங்கள் சீர்திருத்தம் பலன் கொடுக்க 15 ஆண்டு ஆனது, அதன் பின்னமே இத்தனை வளர்ச்சிகள், கூடவே பல எதிர்பாரா விலையேற்ற கொடுமைகள்


அப்படி மோடியின் திட்டமும் பலன் கொடுக்கலாம், பொறுத்து பார்க்கலாம் அல்லவா?


தாராளமயமாக்கலில் உங்களுக்கு ஒரு நியாயம் , பண நடவடிக்கையில் மோடிக்கு ஒரு நியாயமா?


பண மதிப்பினை குறைத்த இந்திரா, மக்கள் உரிமைகளை மீறிய இந்திரா, தாராளமயமாக்கலை கொண்டுவந்த நீங்கள் எல்லாம் நாட்டுபற்றோடு செய்தீர்கள் என்றால், மோடி செய்வது மட்டும் மக்கள் அழிப்பு திட்டமா?


அதாவது உங்களுக்கே தெரிகின்றது மிஸ்டர் மன்மோகன் சிங், உங்கள் மனதின் ஆழத்திலிருந்து நீங்கள் பேசவில்லை, சில முகங்களுக்காக உங்கள் உதட்டிலிருந்து சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டு சென்றிருக்கின்றீர்கள்


இந்த நாடு என்றுமே சிக்கலை கடந்து செல்லும்


வெள்ளையன் இரு துண்டாக உடைக்கும் பொழுது கஜானா காலி, நாடு கடந்தது


பெரும் பஞ்சம் உண்ண அரிசி கோதுமை இல்லை அப்படியும் பாகிஸ்தானுட‌ போரிடும் பொழுதும் ஆயுதம் வாங்க பட்ஜெட் இலலை, நாடு தாங்கியது


சீன வஞ்சகம் மறுபடியும் போர் என இத்தேசம் தாங்கியது.


இந்திராவின் பண மதிப்பு குறைப்பு, வங்கப்போர், அணு ஆயுதம் என பல சிக்கல் இத்தேசம் தாங்கியது


அதன் பின் எமர்ஜென்சி, அய்யகோ இனி இந்தியாவில் தொழிலே இல்லை என உலக கம்பெனிகள் ஓட்டமெடுக்கும் போதும் இந்தியா தாங்கியது


சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் என எத்தனையொ நல்ல தலைவர்களை இழந்தும் இத்தேசம் ஓடிகொண்டிருக்கின்றது, ஆக தேசம் அழியபோகின்றது என நீங்கள் சொல்வது சரியல்ல.


சூழ்நிலைகள் சிலறை சிக்க வைக்கும் மிஸ்டர் சிங்.


எல்லா தலைவர்களும் மனிதர்களே, சில தவறுகள் நடக்கும்


சீனாவினை தவறாக எடைபோட்டு சிக்கினார் நேரு


தமிழகமெங்கும் அணைகட்டி, ஆலைகட்டி,பள்ளி கட்டிய பெருமகன் காமராஜர்தான் சீமை உடைமரன் எனும் பெரும் சிக்கலில் தமிழ்நாட்டினை சிக்க வைத்தவர், அவரை அறியாமல் மாட்டினார்.


இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகவேண்டும் என நீங்கள் கொண்டுவந்த தாராளமயமாக்கலும், காட் ஒப்பந்தமுமே இன்றைய இந்தியாவினை தாங்கி நிற்கும் வளர்ச்சி. இன்றைய இளைஞர்கள் எனக்கு 90கே அவனுக்கு 70 கே என பல்லாயிரங்களில் சம்பளம் வாங்கும் வளர்ச்சி


ஆனால் விலைவாசி? டாலருக்கு நிகரான கரன்சி வீழ்ச்சி? வீட்டு விலை? தண்ணீர் பாட்டில் வியாபாரம்?, விவசாய நிலை?


இவை எல்லாம் யாரால் விளைந்தது மிஸ்டர் மன்மோகன் சிங், நிச்சயம் உங்களால்.


அப்படி மோடியும் கருப்புபணம் ஒழிய சில நடவடிக்கைகளை எடுக்கின்றார், சில சர்ச்சைகள் வரும் நல்ல அனுபவஸ்தரான நீங்கள் அதற்கு வழிகாட்ட வேண்டுமா? அல்லது ராகுலின் முறைப்பிற்கு பயந்து உளறவேண்டுமா?


நாட்டுபற்றுள்ள சீக்கியன் இப்படி செய்வானா?


என்றுமே உங்கள் மீது எங்களுக்கு பெரு அபிமானமும் மரியாதையும் உண்டு, அப்துல் கலாம் போன்ற பதவி ஆசை இல்லா, மதவெறியில்லா, ஆரவாரமில்லா மிக அமைதியான மேதைகளில் நீங்கள் ஒருவர்


ஆனால் அங்குசத்திற்கு கட்டுபடும் யானை போல நீங்கள் இத்திட்டத்தினால் பொருளாதாரம் படுக்கும், நாடு 50 நாளில் நாசமாகும் என சொன்னதுதான் வருத்தம்


நாசமாகட்டும்


எத்தனையோ முறை பொருளாதாரம் நாசமான தேசம்தான், பின் துள்ளி குதித்து எழும்பியிருக்கின்றது


கருப்பு பண ஒழிப்பிலும் அப்படி நடந்தால் இத்தேசம் மறுபடியும் எழுந்து நிற்கும்


காலம் காலமாக எத்தனையோ கொள்ளையர்களால் அடித்து நொறுக்கபட்ட தேசமிது. ஆப்கன், அரேபிய இஸ்லாமிய மன்னர், வெள்ளையர், இன்றைய சில கள்ள அரசியல்வாதிகள் வரை உறிந்து துப்பட்ட தேசம்தான்


ஆனல் கொஞ்சநாளில் தன்னை புதுப்பித்துகொண்டு எழும்பிவிடும், இந்நாட்டின் தன்மை அப்படி


அப்படி இந்நடவடிக்கையால் பொருளாதாரம் படுத்தாலும் கொஞ்சநாளில் எழும்பிவிடும், பல்லாயிர ஆண்டு பாரத வரலாறு அதனைத்தான் சொல்கின்றது


இந்தியா வீழ்வது போல் தெரியும் நாடு, வீழாது மிஸ்டர் மன்மோகன்சிங் , இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்தபின் அதனை ஏன் அரசியலாக்குகின்றீர்கள்?


சூழ்நிலை கைதி அல்லது செஞ்சோற்று கடன் என்பதற்கு இன்றைய முழு வடிவம், அல்லது பாரத கர்ணனின் இன்றைய உருவம் மன்மோகன் சிங்


அவரின் நேற்றைய உரை அதனைத்தான் சொல்கின்றது.
















கொசுறு

வானம் பொழிகின்றது, பூமி விளைகின்றது உனக்கேன் வரி என கட்டபொம்மன் வசனம் பேசினால் கைதட்டலாம்,

இங்கே இந்திய பிரதமரை பார்த்தே இப்படி கேட்டால் என்ன செய்யலாம்??

இவர்களை எல்லாம் அப்படியே கண்டெய்னரில் ஏற்றி ஐஎஸ் இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்


வரியே கட்டாமல் வாழ்வது என்றால் எந்த நாடு சாத்தியம்?

அரபுநாடுகள் முன்பு சாத்தியம், இப்பொழுது பொருட்களின் விலைவாசியினை கூட்டி சுதாரித்துகொண்டார்கள், மறைமுக வரி

வேறு எந்தநாட்டிலும் சாத்தியமே இல்லை, பிடித்து நசுக்கி விடுவார்கள்

சம்பாதிக்கும் பணமெல்லாம் எனக்கே என கட்டபொம்மன் வசனம் பேசுபவர்கள் ஒன்று அமேசான் காட்டுக்கோ அல்லது அந்தமான் பழங்குடி மக்களிடமோ சென்று வசிக்கலாம்

ஆடைக்கு கூட வரியில்லை, ஏன் ஆடையே இல்லா அற்புத வாழ்வு அது




.













No comments:

Post a Comment