Monday, November 21, 2016

2.0 : ஒரு முன்னோட்டம்...

https://youtu.be/NQZqbrO7ub8


ரஜினிகாந்தின் அடுத்த ரோபோ படம் வரபோகின்றதாம், வரட்டும்


ஹாலிவுட் இயக்குநர்கள் எடுக்காத விஞ்ஞான ரோபோ படத்தினை ச‌ங்கர் எடுத்துவிடபோவதில்லை, சராசரி ஹாலிவுட் படங்களிலே ரோபோ முதல் ஏலியன்ஸ் வரை பார்த்துவிட்டு போகலாம்.


ரஜினியின் ரோபோ ஹிட் ஆக முதல் காரணமே வில்லன் ரஜினி, நிச்சயமாக ரஜினி மிகசிறந்த வில்லன் நடிகர். அப்படி ஒரு வில்லத்தனமான நடிகன் தமிழகத்தில் சாத்தியமில்லை, அவ்வகையில் சொல்லலாம் மிக சிறந்த வில்லன் நடிகர்.





அவரே 1980 களின் தொடக்க கால பேட்டிகளில் சொல்லியிருந்தார், " நம்பியாருக்கு பின் பெரும் வில்லன் என பெயர் பெறவேண்டும் என்பதுதான் என் கனவு"

ஆனால் தமிழக விதியோ அவர் நம்பிய ராகவேந்திரர் சதியோ அவர் கதாநாயகனாக மாறி , சூப்பர் ஸ்டாராக மாறி அவரின் பிம்பம் முழுமையாக மாறிவிட்டது.

தமிழகத்திற்கு ஒரு சூப்பர்ஸ்டார் கிடைத்தாரே ஒழிய, நம்பியாருக்கு பின் பெரும் வில்லன் அடையாளமொன்று கிடைக்காமலே போய்விட்டது, அது ரஜினிக்கான இடம்.

பதினாறு வயதினிலே, அவர்கள், மூன்று முடிச்சு, நெற்றிக்கண் போன்ற படங்களுக்கு பின்னால் சுத்தமாக தொலைந்துபோன ரஜினியினைத்தான் ரோபோவில் மீட்டெடுத்து வில்லனாக நிறுத்தினார் சங்கர், படத்தின் பலமே அதுதான்

இப்பொழுது அதனை விட்டுவிட்டு அக்சய் குமாரை கொண்டு நிறுத்தியிருக்கின்றாராம், இதன் விளைவு பின்னால் தெரியும்.

சராசரி ரஜினி ரசிகன் விரும்புவது ரஜினியினைத்தான், அவரின் பல பரிமாண நடிப்பினைத்தான், தொழில்நுட்பத்ததை அல்ல‌

https://youtu.be/YIt2HYFzNjE

படம் பர்ஸ்ட்லுக் என ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்கள், பார்த்தால் இதற்கு ஏன் ரஜினி படம்? ஹாலிவுட் படம் ஒன்றை பார்த்த்தால் தீர்ந்தது விஷயம் என்றிருக்கின்றது

எந்திரன் எனும் ரோபோவின் முதல் பாக கதைக்கு சுஜாதா சொந்தக்காரர், ஆனால் என்னமோ படத்தின் டைட்டிலில் ஒரு இடத்தில் கூட அவர் பெயர் வரவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை

ஒரு தள்ளாட்டம் ஜாம்பவான்களிடம் தெரிகின்றது, சுஜாதா இல்லாத மணிரத்னம் தள்ளாடி தள்ளாடி பின் சுதாரித்து தனக்கு தெரிந்த காதல் கதையில் படமெடுத்துவிட்டு கொஞ்சம் ஆசுவாசபடுத்திகொண்டிருக்கின்றார்

சங்கருக்கும் அதுவே "ஐ" யில் நடந்தது, குறிப்பிட்டு சொல்ல ஒன்றுமே இல்லாத படம் அது, அதனை விட அதற்கு பின் வந்த விஜய்சேதுபதி படங்கள் எவ்வளவோ சிறப்பானவை

அந்த ரோபோ முதல்பாகத்தின் வெற்றி ரஜினியின் வில்லன் வேடத்தால் கிடைத்தது, அதுவே ரஜினியின் இயல்பான நடிப்பு.

சுஜாதாவின் கதையும் இருந்தது.

இதில் அப்படி ரஜினி வில்லன் இன்றி, மாற்றியிருந்தால் நிச்சயம் படம் "கபாலி.." வரிசைக்கு செல்லலாம்.

https://youtu.be/Cr6xIDB2eIQ



No comments:

Post a Comment