Tuesday, November 22, 2016

இடைத் தேர்தல் முடிவுகள்...

ஒரு வழியாக வெற்றி கனியினை அல்ல, வெற்றி மாத்திரையோ வெற்றி ஊசியினையோ , வெற்றி செயற்கை சுவாசத்தையோ காணிக்கையாக அப்பல்லோவிற்கு அனுப்பிவிட்டார்கள்.

வழக்கமாக நடு நசியில் அப்பல்லோவிலிருந்து வரும் முதல்வரின் அறிக்கை, இன்று இரவும் மகா உற்சாகமாக வரும்.

எப்படி வரும்?


இந்த நிலையிலும் கலைஞரை நம்பாமல் என்னை நம்பும் மக்களுக்கு கோட்டான கோடி நன்றி.





ஒரு தோல்வியினை ஒப்புகொள்ளாமல் எப்படி சமாளிப்பது என்பதை திமுகவினரிடம்தான் கற்றுகொள்ளவேண்டும்


அன்று திருமங்கலத்தில் இடைதேர்தலில் வென்றால் அது ஜனநாயகம், அதே இன்று தஞ்சை, அரவகுறிச்சியில் தோற்றால் அது மோசடி, பண்நாயகம் என ஏக சாக்குபோக்குகள்


அதிமுகவின் ஒரே முகம், ஒரே பலம் ஜே, அவரே அப்பல்லோவில் அடைக்கலமாகிவிட்டார், தன் நிகர் எதிரி (ஜே கூட அவருக்கு எதிரி எனும் தகுதியாளர் இல்லைதான்) இல்லாததால் கலைஞரும் பெரும் தீவிரம் காட்டவில்லை




ஆக இடைத்தேர்தல் என்பது அம்மா இல்லாத அதிமுகவிற்கும், ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கும் நடந்த ஒரு போட்டி


இதில் என்ன முடிவு வந்திருக்கின்றது என்பது தெரியும்,


கலைஞர் களமிறங்கா திமுக இப்படி பேட்ஸ்மேன் இல்லாத கிரீஸிலே ஸ்டெம்பினை கழற்ற வழியில்லா பவுலர்களால் நிரம்பியது என்பது புரியும்.


பன்னீர் செல்வம் தலமையிலான வியூகத்தை கூட‌ கலைஞரின் கட்சியினரால் முறியடிக்க முடியவில்லை எனும்பொழுது, .சில விஷயங்களை ஒப்புகொள்ளுங்கள்


இதனை ஒப்புகொள்ளாமல், எவ்வளவு நடிப்பு. எவ்வளவு ஆர்ப்பாட்டம்


சில இடங்களில் ஓவர் ஆக்டிங்காக தெரிகின்றது உடன்பிறப்புக்களே






தஞ்சை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 26 வோட்டுக்கள் கிடைத்திருக்கின்றன‌


ஒரு மனநல குழுவினை அனுப்பி இந்த 26 பேருக்கும் சிகிச்சை அளித்தால் அந்த நோயின் தாக்குதலில் இருந்து தஞ்சையினை முற்றிலும் விடுவிக்கலாம்.








No comments:

Post a Comment