Tuesday, November 22, 2016

அய்யோ மெல்ல திராவிடம் இனி சாகும் ...




தேசியவாதமும், ஆன்மீகமும் கலந்த மண் தமிழகம்.


பெரியார் எனும் ஒரு போராளியினால் அது தனித்துவிடபட்டிருந்தது, அரசியலுக்காய் அவரின் சீடர்கள் தடுமாறி போக மறுபடியும் தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றது.


கலைஞர் எனும் பெரும் சூறாவளியும், சினிமா மோகமுமே திராவிட கட்சிகள் பலம்பெற முதல் காரணம்.





ஒய்ந்துவிட்ட கலைஞரும், விடைபெறும் சினிமா மாயையும் கொண்டது தற்போதைய தமிழக சூழல், அதில் தேசிய கட்சிகள் பலம்பெறுவதில் ஆச்சரிய‌மில்லை.

அய்யோ மெல்ல திராவிடம் இனி சாகும்

இடைத்தேர்தல் முடிவு அதனைத்தான் சொல்கின்றது.

எவனாவது மதவாத பாஜக பலம்பெறுகிறது என சொல்வானால் அது பெரும் பொய், மதவாதத்தை ஒருநாளும் ஏற்றுகொள்ளாதது தமிழகம், ஆனால் இந்திய தேசியவாதம் என்பது தமிழருக்கு என்றுமே மிக விருப்பமான ஒன்று, ஒரு பெரும் மாயை அதனை தடுத்திருந்தது

அந்த மாயை உடைந்துகொண்டிருக்கின்றது, இனி வருங்காலம் பதில் சொல்லும்







கொசுறு 




ஏராளமான பெண் தோழிகளை கொண்டிருந்தார் மதன், அவர்கள் மூலமே இவ்வளவு நாளும் அகப்படாமல் தப்பி இருந்திருக்கின்றார் என மூவேந்தர் மதன் பற்றி ஏராளமான செய்திகள்

மதன் எனும் பெயரினை வைத்திருந்தால் பின் எப்படி இருப்பார்?

பெயர் ராசிப்படி சில விஷயங்கள் நடக்கத்தான் செய்யும் என்பதை இனியாவது நம்பவேண்டும் :)







No comments:

Post a Comment