Thursday, November 10, 2016

டிரம்ப் வெற்றியிலிருந்து தமிழர்கள் பாடம் படிக்கவேண்டும் : பெ.மணியரசன்

டிரம்ப் வெற்றியிலிருந்து தமிழர்கள் பாடம் படிக்கவேண்டும் : பெ.மணியரசன்

அதாகபட்டது டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கருக்கே என பேசினாராம், அமெரிக்கர் நலம் காப்பேன் என சவால் விட்டாராம், அதனால் அமெரிக்கர்கள் அவரை வெற்றிபெற வைத்தார்களாம், அப்படி தமிழர்களும் தமிழ் உணர்வில் பொங்கி எழுந்து தமிழ்தேசம் கோரி இறையாண்மை காக்கவேண்டுமாம்

கோமாவில் இருந்து திடீரென கண்விழித்த ஒருவனாலோ அல்லது கட்டு கட்டாய் ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாமல் கிடக்கும் அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கபட்டவனாலோ மட்டுமே இப்படி எல்லாம் சிந்திக்க முடியும்


அமெரிக்கா என்பது என்ன? தமிழகம் தமிழ் உணர்வு என்பதென்ன?

அமெரிக்கா குடியேறிகள் நாடு, எல்லா இனங்களும் இருக்கின்றன, வெள்ளை இனம் கொஞ்சம் பெரும்பான்மை தவிர, கருப்பர் ஆசியர் என எல்லா இனமும் உண்டு

அதில் அமெரிக்க நலனை காப்பேன் என சொன்ன டிரம்பினை மக்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள், அவரும் இனி நான் மொத்த அமெரிக்காவின் தலைவர் என பொறுப்பாக பேச தொடங்கிவிட்டார்

ஒருவேளை அமெரிக்கா வெள்ளையருக்கே மற்ற இனமெல்லாம் கிளம்புங்கள் என பேசதொடங்கினாலாவது இவர் சொல்வதில் அர்த்தமிருக்கலாம், டிரம்ப் இப்பொழுதெல்லாம் மகா பொறுப்பாகிவிட்டார்

இதில் அமெரிக்கா போல தமிழரும் இனமானம் பெறவேண்டும் என்பது எப்படி பொருந்தும்?

அமெரிக்கர் டிரம்பினை வெற்றிபெற செய்தது போல, தமிழர்கள் என்னையோ சீமானையோ வெற்றிபெற செய்யவேண்டும் என்ற ரீதியில் அன்னார் பேசியிருக்கின்றார்

அமெரிக்க அமைப்பிற்கும் இந்திய அமைப்பிற்கும்தான் பல்லின மக்கள் வாழும் நாடு என்ற தத்துவம் பொருந்துமே தவிர, அமெரிக்காவிற்கும் தமிழருக்கும் எப்படி பொருந்தும்?

வேண்டுமானால் இப்படி சொல்லலாம்

அமெரிக்காவினை உலக அரங்கில் உயர்த்துவேன், தீவிரவாதம் களைந்து அமெரிக்காவினை காப்பேன், எல்லோருக்கும் வேலை வாய்ப்பினை உறுதிசெய்வேன் என சொன்ன டிரம்ப் பின்னால் அமெரிக்கர் செல்வது போல, இந்தியாவும் நல்ல தலைவன் பின்னால் செல்லவேண்டும்

அமெரிக்காவில் வெள்ளையர், கருப்பர், ஆசியர் எல்லாம் ஒன்றாக அமெரிக்கர் எனும் உணார்வில் இருப்பது போல, தமிழராகிய நாமும் இந்தியர் எனும் உணர்வில் ஒன்றித்திருக்கவேண்டும்

இதுதான் பொருந்த கூடியது, ..

அதனை விட்டுவிட்டு அமெரிக்கா போல தமிழருக்கு மானம், உணர்வு வரவேண்டும், தமிழ்தேசம் வேண்டும் என்றால்

அன்னாருக்கு தேவை தமிழ்தேசம் அல்ல, மாறாக சிறையோ அல்லது மனநல மருத்துவமனையோ தான்.

No comments:

Post a Comment