Sunday, November 27, 2016

வைகோ : கைக்குள் ஏதும் கடிதம் இருக்குமோ?





Image may contain: 1 person , close-up





இப்பொழுதெல்லாம் இந்த கோபாலசாமி எனும் மர்ம மனிதரிடமிருந்து சில விஷயங்கள் வெளிவருகின்றன‌


அதில் முக்கியமானது புலிகள் கலைஞருக்கு எழுதிய கடிதம் என்னிடம் இருக்கின்றது, புலிகள் ராஜிவிற்கு எழுதிய கடிதம் என்னிடம் இருக்கின்றது என மனிதர் ஒரே அழிச்சாட்டியம்


எப்படி இவரிடம் சிக்கியது? அதுவும் புலிகள் இவரை கொடுத்த கடிதத்தை, ஒரு முதல்வருக்கும் பிரதமருக்கும் கொடுத்த கடிதத்தை பிரித்து படித்து, அதனை பிரதியும் எடுப்பது எவ்வளவு பெரும் அயோக்கியதனம்..





சில விஷயங்கள் கடுமையானது, இவர் அந்த கடிதங்களை ராஜிவிடமும் கலைஞரிடமும் கொடுத்தாரா? இல்லை தானே வைத்துகொண்டு பிரபாகரனை சிக்க வைத்தாரா என்பது வரை விபரீத விஷயம் இது.

ஆக மநகூ தலைவர்களே, ஏதும் கடிதம் இவரிடம் கொடுத்திருந்தால் இன்றே நீங்கள் அறிவித்துவிடுதல் நலம். இல்லை என்றால் இந்த தபால்பெட்டி எப்பொழுது அறிவிக்குமோ தெரியாது

மகா பயங்கர பொய்களை அவிழ்க்கின்றார்

டெல்லி அசோகா ஹோட்டலில் இருந்து பிரபாகரன் "இந்தியா என் முதுகில் குத்திவிட்டது" என பிரபாகரன் என்னிடம் சொன்னார் என முதலில் 1987ல் சொன்னதும் இவர்தான்

இன்று பிரபாகரன் அப்படி சொல்லவே இல்லை என்பவரும் இவர்தான்

இந்த வைகோவினை விட ஆபத்தானது ஆனந்த விகடன் எனும் விஷம்

அதுதான் இந்த ஈழவிவகாரங்களில் புலிகளுக்கு ஆதரவாக பொளந்து கட்டுவது, வைகோவின் பேட்டியினை அதுதான் வெளியிட்டுருக்கின்றது, அதில் வைகோ சொல்கிறார்

இந்திய கடற்படை புலிகள் கப்பலை தடுத்தபொழுதெல்லாம் நான் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம் வாஜ்பாயினை தொடர்புகொண்டு அதனை விடுவித்தேன் என பெருமை பேசியிருக்கின்றார்

இந்த வைகோதான், அதே வாஜ்பாயிடம் ஆனையிறவில் தோற்ற சந்திரிகா யாழ்பாணத்தை புலிகள் மீட்கபோகும் நேரத்தில் உதவி கேட்டு, வாஜ்பாய் அரசும் புலிகளை எச்சரித்து அவர்கள் பின்வாங்கும் போது பார்த்துகொண்டிருந்தவர்

30 ஆண்டுகால போராட்ட வரலாற்றில் ஆயுதத்தில் ஈழம் அமைய இருந்த ஒரே வாய்ப்பு அது, அதனை சந்திரிகா வாஜ்பாய் மூலம் சரிக்க, அந்த அரசில அமைதியாக இருந்தவர் இதே வைகோ

இதனை எல்லாம் ஆனந்த விகடன் மறைக்கின்றது, அதிலொரு ஆனந்தம் அதற்கு

வைகோ ஒரு பொய்யர் என்றால், விகடன் அதனை மறைக்கும் இன்னொரு மகா பொய் மீடியா

ஆனந்தமிழந்த விகடனில், வைகோ அவிழ்த்திருப்பது பெரும் வஞ்சக பேட்டி, ஆனால் அவரே வசமாக சிக்கிகொள்ளும் பேட்டி

புலிகள் எழுதிய கடிதம் எல்லாம் எப்படி இவர் கையில் சிக்கியது, பிரதி எப்படி எடுத்தார்?? அல்லது மொத்தமாக மறைத்தாரா?

ஆனையிறவில் புலிகள் வெற்றிகொடி நாட்டியபொழுது வாஜ்பாய் அரசு களமிறங்கிய பொழுது இவர் அமைதியாக இருந்தது ஏன்?, இவர் என்றல்ல இந்த நெடுமாறன் , ஈழ கும்பலே மகா அமைதியாக இருந்தது ஏன்?

இதிலென்ன சந்தேகம், நாமாக ஒரு முடிவுக்கு வரலாம். இவர்கள் யாரும் உண்மையில் புலிகள் ஆதரவாளர்களோ அல்லது ஈழ அபிமானிகளோ அல்ல‌

மாறாக புலிகளை நம்ப வைத்து, கழுத்தறுத்து யாருக்கோ உதவிய உளவாளிகள்.

 







No comments:

Post a Comment