தர்மதுரை படத்தை பாராட்டி கடிதம் எழுதினார் மு.ஸ்டாலின்
சாட்டை, அப்பா போன்ற படங்கள் வரும்பொழுது அன்னார் வெளிநாட்டில் இருந்தார் என நம்பிகொள்ளுங்கள்,
அதனால் மனிதர் இப்பொழுதான் தமிழ்படங்கள் பார்க்க தொடங்கி இருக்கின்றார் என நம்புவோம்.
எத்தனையோ பிரச்சினைகளுக்கு அவர் தந்தையாவது மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன், மத்திய பிரதேசத்திற்கு கடிதம் எழுதினேன் என சமாளிப்பார்
இவர் சினிமா டைரக்டருக்கு கடிதம் எழுதிகொண்டிருக்கின்றார் , ஏன் அந்த டைரக்டரை கடிதம் எழுதிதான் பாராட்டவேண்டுமா? எதிர்கட்சி தலைவர் அழைத்தால் வரமாட்டாரா?
இன்னும் யார் யாருக்கு கடிதம் எழுதபோகின்றாரோ தெரியவில்லை
கலைஞர் நான் மந்திரிகுமாரி படம்பார்த்தேன் என்கிறார், இவர் தர்மதுரை படம் சூப்பர் என்கிறார்
எதிர்கட்சி எவ்வளவு பொறுப்பாக மக்கள் பணி ஆற்றிகொண்டிருக்கின்றது, கொடுத்துவைத்த தமிழகம் இது
அடுத்தால் என்ன நடக்கும்?
அழகிரி நிச்சயம் யாருக்கோ ஒரு டைரக்டருக்கு கடிதம் எழுதிகொண்டிருப்பார் எப்படி?
"அண்ணனை தம்பி நயவஞ்சகமாக ஏமாற்றியதாகவும், அதற்கு குடும்பம் துணைபோனதாகவும் ஒரு சூப்பர்ஹிட் படம் எடுக்கவேண்டும்.."
No comments:
Post a Comment