Thursday, November 10, 2016

புதிது புதிதாக ஆடை அணிகின்றார், புதிது புதிதாக கரன்சி அடிக்கின்றார்

நாட்டின் பொருளாதாரத்தை மாற்றுவது என்றால், கரன்சியினை மாற்றுவது என யார் சொல்லிகொடுத்தார்களோ தெரியவில்லை


புதிது புதிதாக ஆடை அணிகின்றார், புதிது புதிதாக கரன்சி அடிக்கின்றார், அடுத்து என்ன புதுப்பிப்பார் என தெரியவில்லை


சரி இந்திய பணமதிப்பு சர்வதேசத்தில் எப்படி இருகின்றது என்றால் சரிந்துகொண்டே இருக்கின்றது




புது கரன்சிக்கு இந்தியா மாறிவிட்டது என்பதற்காக டாலருக்கு நிகரான மதிப்பு குறையவா போகின்றது??


விலைவாசி குறையவா போகின்றது?


கோடாரியினை கூர் திட்ட வேண்டும் என்று சொன்னால், அதன் கைபிடிக்கு பல வண்ணம் பூசிவிட்டு கோடாரி கூர்மையாகிவிட்டது என்ன்றால் ஏற்றுகொள்முடியுமா?


காரின் இஞ்சினை பழுதுபார்க்க வந்தவர், காருக்கு வர்ணம் பூசிகொண்டிருந்தால் எப்படி இருக்கும்?


மோடி அதனைத்தான் செய்துகொண்டிருக்கின்றார்.


காலில் புண் என சிகிச்சைக்கு வந்தவனிடம் அலங்கார செருப்பினை கொடுத்து என்னாக போகின்றது?


சிகிச்சை முக்கியமா அலங்கார செருப்பு முக்கியமா?


கால் சரியானால் நடக்க செருப்பு வேண்டாமா என்பார்கள் மோடி ஆதரவாளர்கள்


முதலில் புண்ணை ஆற்றவேண்டாமா? என கேட்டால் நாம் காங்கிரஸ்காரர்கள், இந்திய தேச துரோகிகள் என வரிந்து கட்டுவார்கள்


இந்தியா வல்லரசாவது உனக்கு பிடிக்கவில்லையா என்கிறார் ஒருவர், அடபரிதாபமே வல்லரசுக்கு இலக்கணம் தெரியாதவனெல்லாம் பேசிகொண்டிருக்கின்றான்


அணுகுண்டு வைத்திருப்பவன் எல்லாம் வல்லரசு என்றால் இன்றைய தேதிக்கு வடகொரியாதான் வல்லரசு


பணம் வைத்திருப்பவன் வல்லரசு என்றல் ஜெர்மன் தான் வல்லரசு


வல்லரசு என்பதன் தன்மை வேறு, இந்தியா அதனை எட்ட நெடுநாள் ஆகும்


முதலில் வளரும் நாடு என்ற நிலையிலிருந்து வளர்ந்த நாடு எனும் நிலையினையாவது எட்டட்டும், வல்லரசு கனவெல்லாம் பின்னர் பார்க்கலாம்.






கொசுறு


பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே! கோவில் உண்டியல் கருப்புப் பணமும் தடுக்கப்படுமா? கி.வீரமணி


இவருக்கு கவலை எங்கிருக்கின்றது பார்த்தீர்களா?


கோயிலில் இருப்பது கருப்பு பணமாம், ஆனால் இவரிடம் பெரியார் கொடுத்து வைத்திருப்பது எல்லாம் சுத்தமான பணமாம்.




முதலில் இந்த அறக்கட்டளைகளை எல்லாம் முடக்கி எல்லாம அரசுடமை என சட்டம் கொண்டுவரவேண்டும், அன்று அன்னாரின் நிலை நடுரோடு ஆகும்,


பின் என்ன செய்வார்? அதே தான், கோயில் வாசலில்தான் அமர்ந்திருப்பார்











"பிரதமரின் நடவடிக்கை வரவேற்கதக்கது, மத்திய அரசு நன்கு சிந்தனை செய்து, ஏழைகள் பாதிக்கப்படாமல் தங்கள் வாழ்க்கையை எப்போதும் போல் நடத்திட மத்திய அரசு உதவவேண்டும் : கலைஞர்

மனிதருக்கு எப்பொழுதுமே தொலைநோக்கு பார்வையில் பேச கூடியவர், அவருக்கு சொத்து என இருப்பது கோபாலபுரம் வீடும் இரு மனைவிகளுமே , அதுவும் வீட்டையும் தன் காலத்திற்கு பின் தமிழகத்திற்கு கொடுத்துவிட்டார்.

திருக்குவளை வீட்டையும் அறக்கட்டளைக்கே கொடுத்துவிட்டார்


(குடும்பத்தாருக்கு ஏகபட்ட சொத்து இருக்கலாம், அவர்களும் இவரைப்போல ஏழையாக இருக்க என்ன இருக்கின்றது?)

இப்பொழுது சிக்கல் என்னவென்றால் அவ்வப்போது நடக்கும் விழாக்களில் இவருக்கு பண மாலை வழங்கபடும், அப்படி வழங்கபடும் பொழுது இவரினை ஏழை, எளிய மக்கள் எனும் பிரிவிற்குள் மத்திய அரசு கொண்டுவரவேண்டும் என்பதே இவரின் கோரிக்கை

ஆக பிரதமர் இந்த ஏழை தலைவர் போன்றவர்களுக்கு கருணை காட்டட்டும்.

அதாவது இம்மாதிரி விழாக்கள் வழக்கம் போல் நடக்க மத்திய அரசு கருணை காட்டட்டும்

(ஓரளவு கலைஞரை பற்றி புரிந்திருப்பதால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றவுடன், கலைஞர் புரட்டிபார்த்து கண்ணீர் விட்டபடம் இவைகளாகத்தான் இருக்கும்..)

 








Stanley Rajan's photo.

Stanley Rajan's photo.Stanley Rajan's photo.














No comments:

Post a Comment