Saturday, November 19, 2016

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி.....

மோடியின் நடவடிக்கைகளை உலகம் கவனிக்கின்றது, பல நாடுகள் உன்னிப்பாக பார்க்கின்றன. முன்பு இதே நடவடிக்கையினை எடுத்து தோல்வியுற்ற நாடுகள், அக்காலம் வேறு இக்காலம் டிஜிட்டல் காலம் எனவே பொறுத்திருநதுதான் பார்க்கவேண்டும் பலனளிக்கலாம் என கருத்து சொல்கின்றது.


ஒரு மிகப்பெரும் நாட்டில் இந்த திட்டம் எப்படி சாத்தியம் என்ற வயிற்றேரிச்சலில் சீனா ஏதோ புலம்புகின்றது, காரணம் பொருளாதாரம் படுத்து, சமீபத்தில் பணமதிப்பினை கூட குறைத்த தேசமது.


பல நாடுகள் மிக நுட்பபமாக கவனிக்கின்றன, திட்டம் வெல்லும் என்பது பின்னால் தெரியும். ஆனால் இப்படி ஒரு துணிகர திட்டம் இந்தியாவில் சாத்தியமா? என ஆச்சரியபடுகின்றன.




இந்தியாவின் பொருளாதார நிபுணர்கள் எல்லோரும் அமைதி, ஒரு சிலர் கட்சிக்காக கடமைக்கு சில வார்த்தைகளை சொல்லிவிட்டு அமைதியாகின்றனர், இதோ டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு இழக்கின்றது, மதிப்பு இழப்பு இருக்கத்தான் செய்யும்.


ஆனாலும் விவரம் அறிந்தவர்கள் அமைதி காக்கின்றனர், அவர்களுக்கு உண்மை நிலவரம் புரிகின்றது.


ஆக ஓரளவு பொருளாதார பிரச்சினைகள், பண பரிவர்த்தனைகள் அறிந்தவர்கள், நிபுணர்கள் அமைதி காக்க, கத்திகொண்டிருப்பவர்கள் யார்?


சில தமிழக நடிகர்கள், திராவிட கொழுந்துகள், சீமான், வேல்முருகன், திருமாவளவன் வடக்கே மம்தா


இவர்கள் எல்லோரும் பொருளாதாரத்தை கரைத்து குடித்த புலிகள் அல்லவா? கத்திகொண்டே இருக்கின்றார்கள்


கான மயிலாட கண்டிருந்த வான்கோழி.....



No comments:

Post a Comment