Tuesday, November 1, 2016

கமல் - கௌதமி பிரிவு : உலகம் எதிர்பாரா சோகம்

https://youtu.be/oDkQagA1l40


அய்யகோ, உலகம் எதிர்பாரா சோகம் நிழந்துவிட்டது, கச்சா எண்ணெயும், சிரிய பிரச்சினையும் உலகினை மிரட்டும் காலத்தில் இப்படி ஒரு பெரும் சோகமா? இனி உலகம் மீள முடியுமா?


இனி இந்த தேசத்தின் 110 கோடி மக்களின் எதிர்காலம் என்னாவது? தேசத்தினை விடுங்கள்


8 கோடி தமிழர்களின் எதிர்காலம் என்ன? தமிழகம் இப்படிபட்ட சோகத்திலா சிக்கி தவிக்கவேண்டும்




இந்த செய்தி அமெரிக்க தேர்தலில் ஏற்படுத்தபோகும் தாக்கமென்ன? ஹிலாரி இனி எப்படி வெல்லுவார்?


இனி காவேரி வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? அணுவுலைகள் வந்தால் என்ன மூடினால் என்ன? இந்த பருவமழை பெய்தால் என்ன? பெய்யாவிட்டால் என்ன?


இப்படியா தமிழனின் காதுகளில் இடிதாக்க வேண்டும், அந்த மாபெரும் துயரசெய்திதான் இப்பொழுது சுழன்றடிக்கின்றது


மனதினை கல்லாக்கிகொள்ளுங்கள் கர்பிணிகள், நோயாளிகள் இதற்கு மேல் படிக்கவேண்டாம்


அதாவது இந்நாட்டின் பொருளாதாரத்தை தாங்கி நிற்குக் கவுதமியும், மிகபெரிய ராஜதந்திரியாக உலகிற்கே சவால் விட்டவருமான கமலஹாசனும் பிரிந்துவிட்டார்களாம்


ஆம் பிரிந்தே விட்டார்களாம்,


திடீரென கவுதமிக்கு ஒரு மகள் இருப்பதும், அவளுக்கு எதிர்காலம் என ஒன்று படீரென்று வர இருப்பதும் கவுதமிக்கு அககண்களிலும், புறகண்களிலும் தெரிந்துவிட்டதாம்.


கமல் நடிப்பில் சிவாஜியின் வாரிசு என்றார்கள், அவரோ ஜெமினி கணேசன் இடத்தினை பிடித்தே தீருவது என கங்கணம் கட்டியிருக்கின்றார்


அடுத்த ஜோடியுடன் இணையும்பொழுது ஜெமினியின் சாதனையினை சமன் செய்து, பின் நிச்சயம் உடைப்பார்


வாணி எனும் முன்னாள் மனைவி சொன்னது நினைவுக்கு வருகின்றது


"கமல் மிகசிறந்த கலைஞர், நல்ல அறிவாளி, ஆனால் அவரோடு வாழ்வதென்பது மிக சிரமான விஷயம்"


இருக்கட்டும்


ஆனால் இருவருக்கும் விவாரத்து என அறிவிக்கவில்லையாம், திருமணம் செய்தால்தானே விவாரத்து, விவாகமே ஆகவில்லை எனில் எப்படி ரத்து?


இந்த உறவு பிரிந்ததற்குத்தான் ஆளாளுக்கு அலறி ஒப்பாரி வைத்துகொண்டிருக்கின்றார்கள்



No comments:

Post a Comment