Tuesday, November 1, 2016

மோடி எத்தனை மோடியடி!

https://youtu.be/Ti1C-9i_NQE

இந்தியர்கள் மதம் மற்றும் ஜாதி பெயரால் வேறுபாடு பார்க்கக்கூடாது : பிரதமர் மோடி


ஆம் பிரதமராக இப்படி சொல்வார் பிரதமர், இதற்கு நாம் கைதட்டவேண்டும், எல்லோரும் மகிழ்வார்கள்


நாளையே கட்சி தலைவராக மதவாதம் பேசி, சாதி கட்சிகளோடு கூட்டணி கட்சிகளோடு கூட்டணி வைக்கபோவதும் இவர்களே,


மதவாதம் பேசி, மசூதியினை இடித்து ஆட்சிக்கு வந்ததும் இவர்களே, சரி இது பற்றி எல்லாம் நாம் பேசகூடாது


மதவாத பாஜக மோடி, சாதி வாரி கட்சிகளுடன் கூட்டணி வைத்த மோடி , அந்நிய நாட்டில் சென்று எமது நாடு மதசார்பற்ற நாடு எனும் மோடி, சவுதி சென்று இஸ்லாமிய முறையில் வணக்கம் செலுத்திய மோடி, ஜப்பானில் டிரம்ஸ் வாசித்த மோடி


அயோத்தி விவகாரத்தை அவ்வப்போது சிலரால் கிளறிவிடும் மோடி,இட ஒதுக்கீடு சர்ச்சை மோடி திடீரென சமத்துவம் பேசும் மோடி, சிவசேனாவின் அங்குசத்திற்கு கட்டுபடும் இந்துத்வா மோடி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கோலுக்கு கட்டுபடும் சேவா சங்க மோடி


இப்படி ஏகப்பட்ட மோடிக்கள்


மோடி எத்தனை மோடியடி

No comments:

Post a Comment