Thursday, November 10, 2016

வெள்ளையன் நாடு பிடிப்போம் என கனவில் கூட நினைக்கவில்லை!



No automatic alt text available.


வெள்ளையன் சாக்கினை தூக்கிகொண்டு முதலில் மிளகோ, கிராம்போ வாங்கத்தான் இந்தியாவிற்கு கப்பல் ஏறினான், நாடு பிடிப்போம் என கனவில் கூட நினைக்கவில்லை...


முதலில் சமத்தாக வியாபாரம் செய்தவனை, சண்டைக்கு உதவிக்கு அழைத்து, அவனுக்கு எல்லாம் சொல்லிகொடுத்து அவர்கள் இந்நாட்டை ஆளலாம் எனும் அளவிற்கு அவனை கெடுத்தது இந்நாட்டு மக்கள் சத்தியமாக அவர்களே..


வரலாறு அப்படித்தான் சொல்கிறது, அப்பாவியாக வந்த வெள்ளையனுக்கு இப்படி எல்லாம் செய்யலாம் என ஆசைகாட்டி ஆளவைத்தது சாட்சாத் இந்தியர்களே





பின் வெள்ளையர்கள் வெளியேற 300 வருடம் ஆயிற்று

ஒருபக்கம் மிஷினரி வெள்ளையர்கள் வந்தார்கள், அணைகளும் ஆஸ்பத்திரியும் பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டினார்கள், முதலில் சேவையாக தொடங்கினார்கள்

பின்னாளிலும் அது தொடர்ந்தது, சுதந்திரம் பெற்றபின்னும் தொடர்ந்தது

அவர்கள் சில இந்தியர்களை உதவிக்கு வைத்திருந்தார்கள், அந்த இந்தியர்கள் வெள்ளயருக்கு ஆலோசனை சொன்னார்கள்

"இப்படி இலவசமாக செய்ய நீங்கள் என்ன கிறுக்கா.., இண்டர்நேஷனல் ஸ்கூல் தொடங்குங்கள், இண்டர்நேஷனல ஆஸ்பத்திரி தொடங்குங்கள், இன்னும் என்னவெல்லாமோ தொடங்குங்கள், நீங்களும் சம்பாதியுங்கள் நாங்களும் சம்பாதிக்கின்றோம்....."

அப்படி டிரஸ்டுகள் எல்லாம் பெரும் கல்விநிலையங்களை கொள்ளை சம்பாத்தியத்தில் நடத்திகொண்டிருக்கும் காலமிது

இந்த கொள்ளை இன்னும் தடுக்கபடவில்லை, அடித்து விரட்டபடவில்லை

டிரஸ்ட் எனும் வரி இல்லா அநியாயத்தில் இவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாளாதது, முக்கியமாக இயேசுவே என வரும் வெள்ளையனுக்கு, அவர் கிடக்கின்றார் இங்கு பணம் இருக்கின்றது அதனை பாருங்கள் என‌ ஐடியா கொடுத்து கெடுப்பதே நம்மவர்கள்தான்

உறுதியாக சொல்லலாம், சேவை செய்ய வரும் வெள்ளையனையும் , வெளிநாட்டு காரனையும் இவர்கள் கெடுத்துவிடுகின்றார்கள்

சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிவிட்ட மோடி, இந்த கோடிகணக்கான பணங்களை குவித்திருக்கும் டிரஸ்டுகள் மீதும் கவனத்தை திருப்பவேண்டும்

அது காஞ்சி மடமோ, வீரமணி டிரஸ்டோ அல்லது கிறிஸ்தவ டிரஸ்டோ எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டுவரும் பெரும் தைரியமான நடவடிக்கையினை அவர் தொடங்கவேண்டும்

அப்பொழுது ஏராளமான கருப்புபணம் மீட்கபடுவதுடன் கல்வி கொள்ளையும், மருத்துவ கொள்ளையும் வரி ஏய்ப்பும் தடுக்கபடும்

வரி கட்டு என்றால், இதோ அந்த டிரஸ்டுக்கு கொடுத்தேன், இந்த டிரஸ்டுக்கு கொடுத்தேன் என ஜகா வாங்குவதெல்லாம் செல்லாது, நீ இங்கு வரி கட்டு, பின் எதற்கு அரசு இருக்கின்றது என முதுகிலே மிதிக்கலாம்

மோடி தொடர்ந்து அதிரடிகளை நிகழ்ந்த்த இந்த அறகட்டளை எனும் வங்கிகள் மேல் கவனத்தை திருப்பட்டும்

பெரும் கருப்புபணம் அங்கே தான் புழங்கிகொண்டும், உறங்கிகொண்டும் இருக்கின்றது











கொசுறு







முன்பெல்லாம் நள்ளிரவில் பேய்களுக்குத்தான் பயப்படவேண்டும், இப்பொழுதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு பயப்படவேண்டி இருக்கின்றது

இந்த இரவு என்ன சட்டம் போட்டு தொலைக்க போகின்றார்களோ?

தமிழக நிதியமைச்சர் பன்னீர் செல்வம் என்ன செய்கிறார்?, இந்த பணபரிவர்த்தனை பற்றி அவரின் ஆலோசனை அல்லது நிலைப்பாடு என்ன?


இதுவரை ஏதும் தகவல் வந்ததாக தெரியவில்லை, வருவதாகவும் தெரியவில்லை. பிடித்து கேட்டால் மாண்புமிகு இதய தெய்வம்.... என கீறல் விழுந்த ரெக்கார்டாக சொன்னதையே திரும்ப சொல்லும் ஆபத்து உண்டு

எதையெல்லாமோ செல்லாது என சொல்லிகொண்டிருக்கும் தேசமிது...

.....ம்ம்ம்ம் தமிழன் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்









கொசுறு

 யாரோ ஒரு இயக்குனர் ஒரு தமிழ்படத்தில் ஆயிரம் ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுக்களை செல்லாமல் ஆக்கவேண்டும் கருப்புபணம் ஒழியும் என வசனம் வைத்தாராம்

உடனே "சிக்கென பிடித்தேன் சினிமா உன்னை.." என மோடி அந்த காரியத்தினை செய்தே விட்டாராம்

நல்லவேளையாக 1978ல் மொராரஜி தேசாய் இப்படி செல்லாத நோட்டு அறிவிக்கபடும்பொழுது இயக்குநர் இல்லை, மாறாக இவரின் தாத்தா யாராவது மொரார்ஜிக்கு ஆலோசனை கொடுத்திருக்கலாம்


சரி தமிழக இயக்குநர்களே

இந்த மத்திய அரசு கட்டுபாட்டில் வரும் ரூபாய் நோட்டிற்குத்தான் வசனம் எழுதுவீர்களா?

மாநில அரசின் கட்டுபாட்டில் வரும் மின்சாரம், டாஸ்மாக் போன்றவற்றிற்கு எல்லாம் ஏன் நீங்கள் வசனம் எழுதுவதில்லை?

மாநில அரசிற்கு என்றாவது யோசனை சொல்லியிருக்கின்றீர்களா?

சொல்லி பாருங்களேன், இவ்வளவிற்கும் சினிமாவால் அமைந்த அரசு அது, மத்திய அரசினை போல அல்ல,

சில படங்களில் வசனம் வைக்கலாமே

"வெளிநாட்டில் டிரைவர் இல்லாமல் கார் இயங்குகின்றது, ரயில் இயங்குகின்றது

நமது மாநிலத்தில் முதல்வர் இல்லாமல் அரசே இயங்குகின்றது"

இம்மாதிரி எவ்வளவு எழுதலாம்

இரு வருடமாக கண்காணித்து, எப்பொழுது செய்யலாம் என சிந்தித்து அவர் ஏதோ நாட்டிற்கு செய்ய நினைத்து ஒரு அறிவிப்பினை செய்திருக்கின்றார்

அதற்கு ஆலோசனையினை இவர்கள் சினிமாவில் கொடுத்தார்களாம், இவர்களை எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டுகட்டாலே அடிக்கவேண்டும்







 கொசுறு






வேசிகள் கூட நோட்டுக்களை வாங்க மறுக்கின்றனர் மனுஷ்யபுத்திரன் கவிதை .


வங்கியில் சென்று பணத்தை நோட்டை கொடுக்க சொன்னால் இவர் எங்கு சென்று "நீட்டி"யிருக்கின்றார் பார்த்தீர்களா?


மனிதர் எழுதுவது எல்லாம் "துய்யல் எழுத்து" வகை எழுத்துபோல,




பின் வேசி என்பவள் அதற்கான கூலியினை நோட்டுபிரச்சினையின்றி வாங்கத்தான் முயற்சிப்பாள்


செல்லாத நோட்டுக்களால் மனிதர் பிரச்சினையில் சிக்கிவிட்டாராம், இவரை போலவே பலர் சிக்கிவிட்டதை பார்த்தாராம், உடனே கவிதை எழுதுவிட்டாராம்


இவர் முதலில் 1000, 500 ரூபாய் நோட்டுக்களை கட்சி தலமையிடம் "கட்சி நிவாரண நிதி" என கொடுத்து பார்த்தால் என்ன?


ஒருவேளை வேசிக்கு விவரம் தெரியாது என ஏமாற்றிவிட நினைத்தாரோ?


(மயிலிறகினை எடுத்து மையில் தொட்டு பெண்ணின் மார்பில் எழுதுவது துய்யல் எழுத்து எனப்படும்)











No comments:

Post a Comment