Friday, November 11, 2016

ஒரே ஒரு பெரியார்தான்....

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு முன்பு எதிர்த்தது பின் ஜெயலலிதா அப்பல்லோவில் அடைகலமானதும் எல்லாம் நடைபெறுகின்றது என பலர் குதிக்கின்றார்கள், முதலாவது குதிப்பவர் மு.க ஸ்டாலின்


அப்படி திராவிட கட்சியினர் என்ன திட்டத்தை எதிர்த்தார்கள்? எதனை மாற்றினார்கள்?


கச்சதீவினை கொடுக்கும் போது தடுத்தார்களா?, இல்லை அணுவுலைகள் அமையும் போது தடுத்தார்களா?, நெய்வேலி சுரங்கம் அமையும் போது, கன்னடன் அணை கட்டும்போது எல்லாம் எதனை தடுத்தார்கள், அமைதிபடை இலங்கை செல்லும்போது தடுத்தார்களா?


ஒன்றையும் தடுத்ததுமில்லை, தடுக்கபோவதுமில்லை


இன்று எல்லாம் அரசியல், எல்லாம் சுயநலம், எல்லாம் மாய விளையாட்டு


அன்று மற்ற எல்லா மாநிலமும் இந்தியாவில் அமைதியாக இருக்க தமிழகம் மட்டும் பல விஷயங்களில் கடுமையான எதிப்பு காட்டிற்று, பெரும் பிரளயங்களை அது நடத்திற்று


எப்படி சாத்தியமாயிற்று


அன்று பெரியார் என்றொருவர் இருந்தார், மிக துணிவான போராட்டங்களை நடத்தினார், நான் கடவுளின் பூசாரி என்னிடமே கேள்வியா என்றால் "கடவுளே பிராடு, நீ அவன விட பிராடு போடா" என சொல்லும் தைரியம் அவருக்கு இருந்தது


அந்த தைரியத்தை அவர்தான் கொடுத்தார். அந்த தமிழகம் பின்பு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த காலம் வரை அப்படித்தான் இருந்தது


தமிழகத்தை சமாதானபடுத்த பெல் போன்ற தொழிற்சாலைகளும், இன்னும் பல நல்ல விஷயங்களும், அணைகளும், கல்வி சாலைகளும் அன்றுதான் பெருகின‌


காரணம் பெரியார் நெருப்பாக இருந்தார், பிரிந்து சென்றாலும் அவர் கட்டளை இட்டால் மத்திய அரசினை எதிர்க்க கலைஞர் போன்றோரும் இருந்தனர்


கவனியுங்கள், தனி ஆளாக நின்றாலும் பெரும் சக்தியாகவே அவர் நின்றார்


அவர் உடல்நலம் தளர தளர என்னவெல்லாமோ மாறி, அவர் பற்றவைத்த நெருப்பு அணைந்தே விட்டது


இன்று கலைஞரோ, ஜெயாவோ பன்னீர் செல்வமோ அடுத்து வருவதாக சொல்லும் மு.க ஸ்டாலினோ மத்திய அரசுக்கு பணிவதை தவிர ஒன்றும் செய்யமுடியாது


பின்னாளைய அணுவுலை, மீத்தேன், நியூட்ரினோ என எல்லாம் வந்து குவிந்தது பெரியார் வீழ்ந்தபின்னர்தான்


காரணம் பெரியார் எனும் நெருப்பு அப்படி, காங்கிரசோ யாரோ, டெல்லி கட்சிகள் என்றாலே அவர் பிராமண எதிர்ப்பு என ஓட அடித்தது அப்படி


மற்ற மாநிலங்களை பாருங்கள், இன்றும் ஆளும் கட்சிகளில் "அவாளின்" ஆதிக்கமே உண்டு, அவை எல்லாம் மத்திய அரசுடன் இணக்கமாகவே செல்லும், பெரும் எதிர்ப்பு என வெகு சிலவற்றை தவிர ஏதும் பார்க்கமுடியாது, பின்னாளைய சிவசேனா கூட மதத்தில் கலந்ததே


ஆனால் பெரியார் மதம், சாதி என எந்த அடையாளமுமின்றி மானுடம் எனும் தன்மையால் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்க்கினார்.


உண்மையில் பெரியார் வழியில் சீடர்கள், அவரை போலவே உருவாகி இருந்திருந்தால் தமிழகம் இவ்வளவு மோசமாயிருந்திருக்காது, அதன் தனிதன்மை காக்கபட்டுகொண்டே இருந்திருக்கும்


ஒரே ஒரு பெரியார் தான் உருப்படியாக இருந்தார், பின் அவரின் சீடர்கள் என கிளம்பிய வீரமணி, கலைஞர், மகோரா, ஜெயா, பன்னீர் செல்வம் என திராவிட கட்சியினர் எப்படி என சொல்லி தெரியவேண்டியதில்லை


ஆக தமிழக திராவிட கட்சிகளே, நீங்கள் இருவருமே டெல்லியினை எதிர்த்து ஒரு புல்லும் புடுங்க மாட்டீர்கள்


தமிழகத்தில் எங்களை ஆதரியுங்கள்,நாங்கள் டெல்லியில் யாரையாவது ஆதரித்து ஆட்சியில் கமிஷன் வாங்கிகொள்கின்றோம் என்று நீங்கள் வியாபாரியாகிவிட்டீர்கள்


வியாபாரி எந்த உரிமையினை மீட்டு கொடுப்பான்? அவனுக்கு லாபமே முக்கியம்.


தேசிய கட்சிகளை எப்படி எதிக்க வேண்டும், எதில் அடிக்க வேண்டும், எந்த வேறினை அறுக்கவேண்டும் என்பது உங்களுக்கு மறந்துவிட்டது, அதாவது பெரியாரை மறந்து விட்டீர்கள்.


அந்த எதிர்ப்பு என்பதை எப்படி செய்யவேண்டும், எப்படி போராடவேண்டும், எப்படி ஓட அடிக்கவேண்டும் என்பது பெரியார் ஒருவருக்கே தெரியும்,


அதற்கு மிக பெரும் தைரியம் வேண்டும், அவரின் தைரியத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உங்களுக்கு வராது


ஏன் வராது??


ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அப்படி உங்களை மாற்றிவிட்டது,


ஆனால் அது இன்று செல்லாக்காசு ஆனது போல இந்த திராவிட இம்சைகளும் ஒரு நாள் ஆகும்


காரணம் பெரியாரின் உண்மையான சீடனாக‌, அவரின் உருவாக்கம் என ஒரு பயலும் இங்கு இல்லை.

No comments:

Post a Comment