Sunday, November 20, 2016

அச்சம் என்பது மடமையடா : திரை விமர்சனம்

https://youtu.be/7Oz-8Vj_JfY

 



வெகு நாளைக்கு பின் சிம்பு உருப்படியாக ஒரு படம் நடித்திருக்கின்றார், இப்படியே அடங்கி நடித்தால் நன்றாகத்தான் இருக்கின்றது


கதை வெகு பிரமாதம் என்றேல்லாம் சொல்வதற்கில்லை, வழக்கமான கவுதம் படம். மனிதர் கேமரா இல்லாமல் படமெடுத்தாலும் துப்பாக்கியும் போலிசும் இல்லாமல் படமெடுக்கமாட்டார் அல்லவா?


அப்படி தன் முந்தைய படம் பலவற்றை கலந்து கொடுத்திருக்கின்றார், போரடிக்காமல் செல்கிறது.





குறிப்பிட்டு சொல்லக்கூடியது நாயகி மஞ்சிமா மோகன், சாயலில் கொஞ்சம் பழைய குஷ்பூவினை லேசாக நினைவுபடுத்துகின்றார், அதற்காக குஷ்பூ போல அழகு என்றெல்லாம் சொல்ல முடியாது.

குஷ்பூவின் வாரிசு என்றெல்லாம் ஒருவரும் இல்லை, வரவும் மாட்டார்கள்.

ரகுமான் வேறு பரிணாமத்திற்கு சென்றுவிட்டார், ஆனால் சில பாடல்களில் மிக அழகாக தன்னை நிரூபிக்கின்றார். குறிப்பாக "அவளும் நானும்" கிளாசிக் பாடல்

மலையாளி என்றாலும் கவுதம் பாரதிதாசனின் மிக அழகான கவிதையினை பாடலாக்கியிருப்பது பாராட்டதக்கது. ஒரு தமிழ் இயக்குநருக்கும் இது தோன்றவில்லை என்பதுதான் ஆச்சரியம்

ஆனால் அந்த அருமையான பாடலை சும்மா ஒலிக்கவிட்டது பெரும் கொடுமை. வேறு காட்சிகளில் பயன்படுத்தியிருக்கலாம்.

மற்றபடி கவுதம் படங்களின் அதே மேல்தட்டு மலையாள ஆங்கில‌ வாசனை இந்த படமெல்லாம் வருகின்றது.

"அச்சம் என்பது மடமையடா
தமிழ்திரை மலையாளி உடமையடா"







No comments:

Post a Comment