Wednesday, November 16, 2016

மோடியை குற்றம் சொல்பவன், உலக நாடுகளை காணுதல் நல்லது




Image may contain: 1 person


மோடியின் நடவடிக்கையினை குற்றம் சொல்பவன் எல்லாம் உலக நாடுகளை காணுதல் நல்லது. ஐரோப்பிய நாடுகளில் வரி என்ன? அமெரிக்காவில் வரி என்ன?


அரபு நாடுகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு, இஷ்டம் போல எண்ணெய் பணத்தில் ஆடினார்கள், இன்று கச்சா எண்ணெய் விழுந்ததும் மலங்க விழிக்கின்றார்கள். வரி வசூலிப்பின் முறையான நிர்வாகமும் எவ்வளவு அவசியம் என அறிந்து பல புதிய வரிகளை விதிக்க தொடங்கிவிட்டார்கள்


ஒவ்வொரு நாடும் வரி எனும் கொடுமையில் மிக கறாறாக இருந்து மக்களை கசக்கி பிழிந்து பணக்கார நாடாக மின்னுகின்றன,


இந்தியாவில் வரியும் குறைவு அதனை கட்டாமல் பதுக்கி வைக்கும் அட்டகாசமும் அதிகம்,


இந்தியாவில் மொரார்ஜி தேசாய் நிதிசீர்கேட்டை களைய நினைத்தார், ஆனால் ஆட்சி பலமில்லை அவரது அரசு கவிழ்க்கபட்டது.


அதன் பின் யாரும் வலுவான ஆட்சி அமைக்கவில்லை, எல்லோரும் அங்கு 10 எம்பி இங்கு 20 எம்பி என கடன் வாங்கி ஆட்சி செய்தனர். எல்லா முடிவும் எடுக்க மகா அச்சம்


மோடிக்கு அசுரபலம் வாய்த்தது, அதனால் சில நடவடிக்கைகளை மகா துணிச்சலாக எடுக்கின்றார். சிரமம்தான், சில முடக்கம்தான். ஆனால் என்ன செய்ய? சீரமைப்பினை செய்ய வேண்டிய காலம் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டோம் இனியாது செய்யவேண்டும் அல்லவா?


இதில் ஆளாளாளுக்கு மோடியினை கண்டிக்கின்றார்களாம், பிரபாரனின் காட்டாட்சியினை பொற்காலம் என சொல்லிவிட்டு இவர்கள் மோடியினை கண்டிப்பதுதான் விசித்திரம்


ஈழ மக்களில் புலிகளில் கட்டுபாட்டில் மக்கள் எவ்வளவு அபல வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பது அங்கு வாழ்ந்தவருக்கு புரியும். சிங்கள பகுதியிலிருந்து கடத்தபடும் பொருளுக்கு புலிபகுதியில் 10 மடங்கு விலை, மண்ணேண்ணெய் முதல் தீப்பெட்டி வரை


10% வியாபார வரி என வசூலித்துவிட்டு மக்களிடம் வாங்கும் வரி, உற்பத்தி வரி, அதற்கு வரி , இதற்கு வரி என புலிகள் கசக்கி பிழிந்ததில் மக்கள் பட்ட சிரமம் கொஞ்சமல்ல‌, மின்சாரமில்லை, பள்ளி இல்லை, பொருட்கள் இல்லை ஒன்றுமே இல்லை, அதுதான் புலிகளின் பொற்கால ஆட்சியாம்.


பணத்தை பிடுங்கி, நகையினை பிடுங்கி, பின் மகன் மகளை பிடுங்கி புலிகள் நடத்திய காட்டாட்சியின் பெயர் "நாட்டு பற்று, இன உணர்வு, புரட்சி அரசு" என ஏக பட்டம்


ஆனால் பணத்தினை முறையாக மாற்றுங்கள், வேறு ஒன்றும் சிக்கல் இல்லை, ஒரு பைசா குறையாது என மோடி
அரசு சொன்னால் அது சர்வாதிகாரம், காட்டாட்சி


திருமாவளவன், வேல்முருகன், சீமான், வைகோ போன்ற இம்சைகள் அந்த காட்டுதர்பார் பிரபாகரனின் ஆட்சியினை புகழ்ந்துவிட்டு, இன்று மோடியினை சாடும்பொழுது


இவர்கள் எப்படிபட்ட பிழைப்புவாதிகள் என அப்பட்டமாக தெரிகின்றது


பல நாடுகளில் ஒரு வீட்டின் சொத்து பத்திரமே 90 வருடம்தான் செல்லும், அதன் பின் எந்நேரமும் அரசு எடுக்கலாம். சில நாடுகளில் எந்த சொத்தையும் ஏன் வங்கிகளை கூட அரசு கைபற்றிவிட்டு மக்களை ஒன்றுமில்லாதவர்களாக்க சட்டம் வகை செய்கின்றது


அதாவது நாட்டிற்கு போகத்தான் மக்களுக்கு மீதி


அப்படி மிக கட்டுபாடான போக்கு இந்த திருநாட்டில் இல்லை, கொஞ்சம் சிரமம் அவ்வளவுதான். முறையான பணம் எதுவும் கைவிட்டு செல்லாது.


இதற்கு மேலும் இதனை அரசியலாக இந்த மம்தா பேனர்ஜி, முன்பு தமிழரையும் பின் பீகாரிகளையும் சீண்டி வளர்ந்த சிவசேனா,ஆட்சிக்கு வந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் தவிக்க்கும் கெஜ்ரிவால் , போன்றவர்கள் ஏதும் இடைஞ்சல் கொடுக்க முயன்றால்..


எமர்ஜென்சியினை அறிவித்துவிட்டு மோடி ஆட்சி செய்யலாம்


இந்திராவின் எமர்ஜென்சியில் தேசம் அழிந்தா விட்டது? இல்லை காங்கிரஸ்தான் அழிந்ததா?


அவரின் எமர்ஜென்சியில் சுயநலத்தோடு பொதுநலமும் அமைந்திருந்தது, மாநில கட்சிகளை ஒரு வழி செய்ய அவர் எடுத்த நடவடிக்கை அது, இன்றும் அந்த மாநில கட்சிகளை அதனைபற்றி கேளுங்கள், அலறுவார்கள்.


காரணம் ஆளாளுக்கு மாநில கட்சிகள் இஷ்டம்போல ஆடுவது இந்த தேசநலனுக்கு நல்லதே அல்ல. இந்திரா அதில்தான் கவனம் செலுத்தினார். மோடியும் அதனையே செய்தால் மிக நல்லது.


கொஞ்சம் சுயநலத்தோடு இந்திரா எடுத்த நடவடிக்கையினை, முழுக்க முழுக்க நாட்டுபற்றோடு மோடி எடுத்தால்தான் என்ன?


நாடு என்றால் என்ன? அரசின் பலம் என்ன? என ஒருமுறையாவது காட்டாமல் இங்கு ஒரு மாற்றமும் செய்ய முடியாது. நிச்சயம் முடியாது


போர் என்றால் நிச்சயம் இதே நிலை, சர்வதேச பொருளாதார நெருக்கடி என்றால் இதே நிலை. ஆக எந்நேரமும் இப்படி ஒரு நிலை வரலாம், நிச்சயம் வரலாம்


இப்படி ஒர் பொருளாதார போரினை நடத்த மோடி அதிகாரத்தின் எந்த உச்சத்திற்கும் செல்லட்டும்


வந்தே மாதரம்


(வெளிநாட்டில் இருப்பதால் சொல்லவில்லை, தாயும் தந்தையும் அங்குதான் இருக்கின்றார்கள், கரன்சி விஷயத்தில் சில சிரமங்களை அனுபவிக்கத்தான் செய்கின்றார்கள், வருத்தம்தான்


ஆனால்


"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவை வானினும் நனி சிறந்தனவே"


என்றவன் நெல்லை பாரதி,


தாயின் சிரமம் பெரிதுதான், ஆனால் தாய்நாடு அதனைவிட முக்கியம் அல்லவா?)
















நவம்பர் 20ம் தேதி ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டூடியோவில் மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கிறது.


ரஜினி மோடி அறிக்கையினை முதல் ஆளாக வரவேற்றதற்கும், இந்த மும்பை நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் இருக்காது என நம்புவோம்


சோழியன் குடுமி சும்மா ஆடினாலும், ரஜினி வாய் காரியமின்றி திறக்காது.







 

No comments:

Post a Comment