Thursday, November 24, 2016

பத்திரிகையாளர்களை மோடி சந்திப்பதே இல்லையாம்....

பத்திரிகையாளர்களை மோடி சந்திப்பதே இல்லை, அதனை எதிர்கொள்ள அவர் பயப்படுகின்றார் என பலர் கிளம்பியிருக்கின்றார்கள்


ஒரு பிரதமராக மோடி நாட்டு மக்களுக்கு அவ்வப்போது உரையாற்றுகின்றார், எல்லா நாட்டு சபைகளிலும் எல்லா நாட்டு அதிபர்களிடமும் பெரும் ஆலோசனைகளை நிகழ்த்தத்தான் செய்கின்றார்


நாட்டு மக்களுக்கான உரைகளை அந்தந்த நேரங்களில் நிகழ்த்திகொண்டே தான் இருக்கின்றார்


இதில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிகொண்டே இருக்க என்ன இருக்கின்றது? அரசின் அறிவிப்புக்கள் செய்திகளாக அவர்களுக்கு தரபடுகின்றன, இது இப்போதைய நிலைப்பாடு என அறிவிக்கபடுகின்றது


பின் ஒவ்வொரு பத்திரிகையாக அவர் அழைத்து சொல்ல என்ன இருக்கின்றது?


ஒரு பிரதமர் பார்லிமெண்டை கூட்டி பேசுவாரா? இல்லை ஒவ்வொரு பத்திரியாளையாக பார்த்து பேசுவாரா?


தொழிலதிபர்களும், நடிகர்களும், நடிகைகளும், போலி அரசியல்வாதிகளுமே பத்திரிகைகாரர்களை அழைத்து விழுந்து விழுந்து கவனித்து கெஞ்சுவார்கள்


அக்காலத்தில் இன்றிருக்கும் தகவல் தொடர்பு இல்லை, நேருவோ காமராஜரோ பத்திரிகைகள் மூலம் மக்களை தொடர்பு கொள்ளும் அவசியம் இருந்தது


இன்று நிலை என்ன?


டிவிட்டர் முதல் முகநூல் வரை ஒவ்வொருவருவரிடமும் தனிபட்ட முறையிலே பிரதமரின் செய்திகள் நொடியில் சென்றடைகின்றன‌


பத்திரிகை என்பது கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பிழக்கும் காலம், அப்படித்தான் சென்றுகொண்டிருக்கின்றது


மோடி என்ன செய்கின்றார், எங்கிருக்கின்றார், என்ன பேசுகின்றார் என நொடிக்கொரு முறை நமக்கெல்லாம் தெரிந்துகொண்டே இருக்கின்றது, இதில் தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு எதற்கு?


அடைமழை பெய்யும்பொழுது யாராவது செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவார்களா?


அப்படி எல்லாம் எல்லா மக்களுக்கும் தெரிந்துகொண்டிருக்கும் பொழுது,அவரின் அறிவிப்பும் கண்ணீரும் நொடியில் ஒவ்வொரு இந்தியனையும் பாதிக்கும் பொழுது எதற்கு தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு????


அவர் நாட்டிற்கு ஏதோ செய்கின்றார் அல்லது செய்ய முயற்சிக்கின்றார், நிச்சயம் சுயநலமோ அல்லது கட்சி நலமோ இருப்பதாக தெரியவில்லை


பார்க்கலாம், மிஞ்சி போனால் 3 ஆண்டுகள். அதன்பின் மக்கள் அவர் வேண்டும் என நினைத்தால் வருவார் இல்லாவிட்டால் ஓய்வாக அமர்ந்திருப்பார் அவ்வளவுதான்


விளைவுகளை பார்க்கலாம், நாட்டிற்கு நல்லதென்றால் பாராட்டலாம், சரி இல்லை என்றால் அவரை அடுத்த தேர்தலில் வீட்டிற்கு அனுப்பலாம்


அதனை விட்டுவிட்டு அவர் இப்படி செய்யவில்லை, பத்திரிகையாளரை சந்திக்கவில்லை என்பதெல்லாம் குதர்க்கம்


ஒன்று புரிகின்றது


அவர்மேல் தனிபட்ட குற்றசாட்டோ பெரும் குறைகளோ இல்லை, அவருக்கு குடும்பமும் இல்லை, குடும்பத்தார் அவருடனும் இல்லை


எந்த வகையில் அவரை விமர்சிக்கலாம் என பார்த்துகொண்டே இருக்கின்றார்கள்


அம்பானி, அதானி என்பார்கள், உலகம் சுற்றுகின்றான் என்பார்கள் (ஒரு பிரதமர் மற்ற நாடுகளுக்கு சென்று சில திட்டங்களை ஈர்ப்பது தவறா?), இன்னும் ஏராளம் சொல்வார்கள்


கருப்புபணம் ஒழிப்பில் அவரை நேரடியாக விமர்சிக்க முடியாது என்பதால் தகுந்த மாற்றுவழி செய்யவில்லை என கிளம்பிவிட்டார்கள்


இப்பொழுது பத்திரிகையாளர் மாநாடு நடத்தவில்லை என்கின்றார்கள்


அவர் சந்திக்கின்றாரோ இல்லையோ, மோடியின் ஆட்சி உள்ளங்கை நெல்லிக்கனி, மக்களுடன் அவர் தொடர்பிலே இருக்கின்றார், அடிக்கடி வேண்டுகோளோ கோரிக்கையோ வைத்தபடியே வலம் வருகின்றார்


இந்த அப்பல்லோவில் என்ன நடக்கின்றது என யாருக்காவது தெரியுமா? ஒரு தகவல் 100% உண்மையோடு வெளிவந்திருக்கின்றதா?


இவ்வளவிற்கும் மாநில முதல்வரின் உடல்நிலை செய்தி


இதனை பற்றி எல்லாம் கேட்கமாட்டார்கள், மாறாக மோடி ஏன் பத்திரிகையாளரை சந்திக்கவில்லை என குதிப்பார்கள்.


அப்படி பத்திரிகைகள் என்ன உண்மையினை எழுதுகின்றன?, தைரியமிருந்தால் அப்பல்லோ பற்றி எழுதட்டும் பார்க்கலாம்


இவர்கள் பத்திரிகையாளர்களாம், இவர்களிடம் மோடி பேசவில்லையாம் கவலை வேறு.

No comments:

Post a Comment