Monday, November 21, 2016

செய்தி சிதறல்கள்...




ஒரு சிலர் கருப்பு பணம் பதுக்கியதற்காக நாங்கள் எல்லாம் சிரமபடவேண்டுமா என பல குரல்கள்


மானிட யதார்த்தம் அப்படியானது, ஆதிகாலத்திலிருந்தே இது தொடர்கின்றது


சகுனி எனும் ஒரே ஒரு அயோக்கியனால் உருவானது பாரதபோர், அழிந்தவர்கள் கோடான கோடி நல்லவர்கள்




ஹிட்லர் எனும் ஒருவனால் போர் தொடங்கபட்டு அழிந்தது 5 கோடி பேர் அப்பாவிகள்


பிரபாகரன் எனும் தனிமனிதனால் அழிந்த அப்பாவி ஈழமக்கள் ஏராளம்


இப்படி ஒரு சிலரின் நடவடிக்கையால் பெரும் மக்கள் சமூகமே பாதிக்கபட்டது வரலாறெங்கும் நிரம்ப கிடக்கின்றது.


அதாவது ஒரு துளி விஷம் ஒரு குடத்து பாலினையும் கெடுத்துவிடுவது போல ஒரு சிலரின் நடவடிக்கை மொத்த மக்களின் நிம்மதியினையும் கெடுத்தே விடும்


மானிட வாழ்வின் பெரும் வியப்பான முரண் இது


அப்படி 20% கருப்பு பணம் பதுக்கியோர், 80% மக்களை கடும் வேதனையில் தள்ளியிருக்கின்றனர்.











விஜய் மல்லையா மோசடியாளர் அல்ல. அவர் தோற்றுபோன தொழில்முனைவர் - ஜெயமோகன்


ஜெயமோகன் என்பவர் பைத்தியம் அல்ல, மனம் குழம்பிபோன எழுத்தாளர் அவ்வளவுதான்.










பிறருடைய வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்தால் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

ஆனால் பிறருடைய கணக்கு வழக்கினை திருத்தி வரி கட்டாயல் ஏய்க்கும், கருப்பு பணம் பதுக்கும் வித்தையினை சொல்லிகொடுக்கும் சூத்திரதாரிகளான ஆடிட்டர்கள் மேல் எந்த நடவடிக்கையும் கிடையாது

விசித்திரமான நாடு இந்தியா.









கங்கையில் மூழ்கி தற்கொலை செய்வதாக எழுதி வைத்துவிட்டு தலைமறைவான மதன், திருப்பூரில் தோழி வீட்டில் கைது

பயவுள்ள மங்கையில் மூழ்கி சாகபோகிறேன் என்பதை கங்கையில் மூழ்கி சாகபோகிறேன் என மாற்றி எழுதியிருபார் போல, இதனால் காவல்துறைக்கு எவ்வளவு சிக்கல்.

ஏகபட்ட பணத்துடன் தலைமறைவான இவர், ஒருவேளை பணம் மாற்ற முடியாத சோகத்தில் சரண்டராகி இருப்பாரோ??












No comments:

Post a Comment