Monday, November 14, 2016

கரன்ஸி மாற்றமும், கருப்புப் பணமும்...

மோடியின் நடவடிக்கைகள் கருப்பு பணத்தினை ஒழிக்க வழி செய்யாது : ப.சிதம்பரம்


மோடி முதல்முறை மத்திய ஆட்சிக்கு வந்திருக்கின்றார், சரியோ குழப்பமோ ஏதோ ஒன்றை செய்கின்றார், முயற்சிக்கின்றார்


60 வருடமாக சேறுபடிந்திருக்கும் குளத்தினை தூர்வாரும்பொழுது கலங்கத்தான் செய்யும், சேறு வரும், சுத்தபடுத்தும் போது அப்படித்தான் இருக்கும்.




சீழ்பட்ட கட்டியினை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யும்பொழுது வலி இருக்கத்தான் செய்யும்


இந்த அசவுகரியங்களை கண்டால் நலம் பெறமுடியாது.


அப்படி மோடி முயற்சிக்கின்றார், பொறுத்திருந்து பலனை காணலாம், அப்பொழுதும் பலனழிக்காவிட்டால் அவரே சொல்லியிருப்பது போல விமர்சிக்கலாம், கேள்வி கேட்கலாம்


சரி, மோடி இப்படி பிடித்து உலக்கவாவது செய்கின்றார். எத்தனை முறையோ நிதி அமைச்சர் என அமரவைக்கபட்ட ப.சிதம்பரம்,


அதுவும் உலகநாடுகளால் மிகசிறந்த நிதியமைச்சர் என கவுரவிக்கபட்ட ப.சிதம்பரம் பதவியில் இருக்கும்பொழுது இந்த கருப்பு பண ஒழிப்பிற்கு செய்ததென்ன?


ஒன்றும் இல்லை என்றுதான் வரலாறு சொல்லும்


கலைஞர் கருணாநிதியினை அடிக்கடி சந்தித்ததின் விளைவில் செட்டியார் இப்படி மாறியிருக்கலாம், பேச தொடங்கி இருக்கலாம்.











தமிழகத்தில் ஏகபட்ட பிரச்சினைகள் உண்டு, கடந்த 50 நாட்களாக அது அப்படியேத்தான் இருந்தது, இன்னும் சொல்லபோனால் முதல்வர் இல்லா தமிழகமாக அது தத்தளிக்கின்றது

காவேரி முதல் கரன்சி சிக்கல்வரை தமிழக மக்களை வழிநடத்த முதல்வர் இல்லை. ஆளுநரும் இப்பொழுதெல்லாம் சத்தமில்லை. பன்னீர் செல்வம் முதல்வர் பொறுப்பினை கவனிப்பார் என்றபொழுதும் அவர் அதே ஸ்டையில் மகா அமைதி

அப்பொழுதெல்லாம் அப்பல்லோவில் இருந்து ஒரு சத்தமுமில்லை


இப்பொழுது 3 தொகுதிகளில் தேர்தலாம், உடனே கட்சியின் தலைவர் அப்பல்லோவில் இருந்து பெரும் அறிக்கை அனுப்பி ஆதரவு கேட்கின்றாராம்

இந்த தேர்தல் மட்டும் இல்லையென்றால் அந்த அக்ட்சியின் தலைவர் அப்பல்லோவில் இருப்பதே மறந்திருக்கும்

நினைவுபடுத்திய தேர்தல் வாழ்க..











மோடியால் சினிமா நாசமா போச்சு : மன்சூர் அலிகான் பேச்சு

கருப்பு பணம் மிக அதிகமாக புழங்கும் தொழில் சினிமா, மோடியின் இந்த நடவடிக்கையால் அது கடுமையாக பாதிக்கபட்டிருக்கின்றது என்கின்றார்கள்

ஆக சினிமாக்காரரான இந்த மன்சூர் போன்றோர்களின் பேச்சிலே மோடி நடவடிக்கையின் வெற்றி தெரிகின்றது.


அலறுங்கள்...சும்மா இல்லாத மாய உலகத்தை காட்டி கொஞ்சமா கறுப்புபணத்தில் ஆடினீர்கள்??

அந்த பணத்தில்தானே தமிழகத்தை பத்திரிகை, ரசிகர் மன்றம் என்றெல்லாம் கட்டுபடுத்தி வைத்திருந்தீர்கள்

அடித்த உடன் இன்று வலிக்கின்றதா? இதற்காகவே மோடியினை பாராட்டலாம்.








சொன்னார்கள்


மக்களை பற்றி சிந்திக்காமல் வாக்குகளை பற்றி சிந்திக்கிறார் ஜெயலலிதா.. ஸ்டாலின் குற்றச்சாட்டு!!


இவரும் இவர் தந்தையும் மட்டும் முக்காலமும் மக்களை பற்றி மட்டுமே சிந்திக்க அவதரித்திருக்கின்றார்கள் என நீங்கள் நம்பிகொள்ளவேண்டும்


மக்களை பற்றி மட்டும் கவலைபட்டு, வாக்குகள் பற்றி கவலைபடாமல் இருந்தால் கலைஞர் ஏன் பெரியாரை விட்டு அரசியலுக்கு வரப்போகின்றார் என இவரிடம் யாராவது கேளுங்கள்







அதிபர் பதவியில் இருக்கும்போது எனக்கு, ஆண்டுக்கு 1 டாலர் சம்பளம் போதும் : டொனால்ட் டிரம்ப்

தமிழக அரசியல் அமெரிக்கா வரை எப்படி கெடுத்துவிட்டது, சென்னையில் அமெரிக்க தூதரகம் வைத்தால் இப்படித்தான் ஆகும்.




 

No comments:

Post a Comment