Thursday, November 10, 2016

டொனால்ட் ட்ரம்ப் வெற்றி : எதிர்ப்பு, ஆர்பாட்டம்...

https://youtu.be/c9OhBLe62M4



அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல நகரங்களில் பெரும் ஆர்ப்பாட்டம், மிக தீவிரமான எதிர்ப்பால் அமெரிக்காவில் பரபரப்பு


இவர்கள் தான் ஜனநாயக வாதிகளாம், தேர்தல் நடந்திருக்கின்றது, ஒருவர் பெருவாரி மக்களால் தேர்வுசெய்யபட்டுவிட்டார், இதன் பின் பொறுக்கமுடியாத மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி அழிச்சாட்டியம் செய்கின்றனர்


மூத்த மக்கள் வாய்பொத்தி தலையில் அடித்துகொண்டு மூலையில் அமர்ந்தாகிவிட்டது


தலைமுறைகள் எப்படி எல்லாம் மாறிகொண்டிருக்கின்றன என்பதற்கு இது பெரும் எடுத்துகாட்டு


பெண் பித்தர், அதிகம் பேசுபவர், இனவெறியன் என்றெல்லாம் பெரும் முத்திரையினை ஊடகங்கள் உலகெல்லாம் குத்தியபொழுதும் அவர் எப்படி வென்றார்?


இங்குதான் சில விஷயங்கள் கவனிக்கபடுகின்றன‌


சர்ச்சைகள் இருந்தாலும், பழைய அமெரிக்கா ஆக்குவேன், கிறிஸ்தவத்தை உயர்த்துவேன், அந்நிய மதங்களையும் மக்களையும் வைக்கவேண்டிய இடத்தில் வைப்பேன் என்ற டிரம்பின் வசனங்கள் மக்களை கவர்ந்தன, கிறிஸ்துவத்தை பைபிளில் உள்ளது போல அமெரிக்காவில் பின்பற்ற செய்வேன் என அவர் சொல்லியபொழுது ஆதரவு கூடிற்று.


ஒழுக்கமான(?) வெள்ளை கிறிஸ்தவ பாரம்பரியத்தை காப்பேன் என்றபொழுது பெருவாரியான மக்கள் டிரம்பினை மனதிற்குள் தேர்வு செய்தார்கள்


ஹிலாரி ஒருபால் உறவுஆதரவு, கட்டற்ற உரிமை, லேடி காகா, கேட்டி பெர்ரி டான்சுடன் பிரச்சாரம் என்றபொழுதே ஓஓஓஓ அம்மையார் அந்த வழி அரசா? என சொல்லி ஒதுக்கிவிட்டார்கள்.


டிரம்ப் செல்லும் இடமெல்லாம் "ஹல்லேலூயா, ஓசான்னா" என சொல்ல சொல்ல கூட்டம் "ஆமேன்" என ஆமோதித்தது


அதனால் பின்னாளில் ஏவபட்ட பெண்பித்த முத்திரைகளை அவர் அழகாக துடைத்துவிட்டு வெற்றி பெற்றுவிட்டார்


எப்படியோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து டிரம்பிற்ற்கு வெற்றியினை கொடுத்துவிட்டார், அதுதான் மதவாதமான உள்ளூர்ந்த உணர்வில் மக்கள் அவரை தேர்ந்தெடுத்துவிட்டனர்


இன்னொன்று வெளிநட்டவர் பிரச்சினையும் அவர்கள் உள்மனதை உறுத்திற்று, எல்லோரும் அமெரிக்கா, அமெரிக்கா என செல்ல செல்ல எங்கே, வருங்காலத்தில் நம் வெள்ளை சந்ததிகளுக்கு ஆபத்தோ? இதனை ஆசியா போல மாற்றிவிடுவார்களோ எனும் ஒருவித சந்தேகமும், குடியேற்றத்திற்கு கடிவாளம் போட ஒரு தலைவனை அவர்கள் தேடினார்கள்


அப்படி வென்றுவிட்ட டிரம்பினை எதிர்த்து அமெரிக்கா எங்கும் கலவரம் வெடிக்கின்றது? செய்பவர்கள் யார்?


ஒருபால் உறவினர், கடவுள் நம்பிக்கை இல்லாதவர், மிக சுதந்திர உணர்வுகொண்டவர், ஹிலாரி இன்னும் ஏராளமான சுதந்திரத்தினை வழங்குவார் என எதிர்பார்த்தவர்கள், சில குடியேற்றக்காரர்கள், பக்கத்தில் இருக்கும் மெக்ஸிகோவில் சம்பந்தம் செய்தவர்கள், சில யூத தொழிலதிபர்களும் உண்டு


சரி யூதர்களுக்கு என்ன வந்தது?


அமெரிக்க அரசினை மறைமுகமாக லாபி செய்பவர்கள் அவர்கள், ஒரு கட்சிக்கு ஆதரவா என்றால் இல்லை. இரு கட்சியிலும் இருப்பார்கள், எக்கட்சி ஆளுங்கட்சியோ அதன்மூலம் இஸ்ரேல் நலனை காத்துகொள்வார்கள்.


நாளையே அமெரிக்கா இஸ்ரேலை கண்டித்தால், புட்டீனோடோ, சீனாவோடோ கை கோர்க்க அவர்கள் ரெடி, ஏன் என்றால் இஸ்ரேல் அவர்களுக்கு அவ்வளவு முக்கியம்.


பைபிள், ஜெபம், இயேசு, ஒழுக்கம் என சொல்லி டிரம்ப் வென்றுவிட்டார், அதாவது மோடிக்கு ராமர் போல, டிரம்ப்க்கு இயேசு கை கொடுத்திருக்கின்றார்


என்ன செய்வது? மக்களாட்சி அப்படியானது, எது பெருவாரி மக்களை கவருமோ அதன் மூலம் மக்களை நெருங்கி வாக்காக மாற்றுவது


இதனை இந்தியாவில் செய்தால் மதவாதம், இலங்கையில் செய்தால் இனவாதம்.


அமெரிக்காவில் செய்தால் ஜனநாயகம்


ஒரு விஷயம் கவனிக்கதக்கது


இந்தியாவில் எத்தனையோ பிரதமர் வந்தார்கள், சர்ச்சை என்றால் கோர்ட்டுக்கு போவோம், அதனை மீறி எமர்ஜென்சி வந்தால் தாங்குவோம்


ஒருநாளும் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசு செல்லாது என எந்த இந்தியனும் போராடவில்லை, போராடவும் மாட்டான்.


பிரதமர் இந்தியாவில் இல்லை என்றாலும், முதல்வர் நாற்காலியில் இல்லை என்றாலும் அவன் சத்தமிட மாட்டான். இது எங்களுக்கான பிரதமர் அல்ல என்றோ, இது எங்களுக்கான முதல்வர் இல்லை என்றோ யாரும் சொல்லமட்டான்


ஆனால் அமெரிக்காவில் சொல்கின்றார்கள்


உண்மையான ஜனநாயகம அங்கே சீரழிந்துகொண்டிருக்கின்றது


பெரும் சிக்கலை கரன்சி நோட்டு பிரச்சினை கொடுத்தபோதும் இந்த தேசம் மிக அருமையாக தாங்கி சமாளித்துகொண்டிருக்கின்றது, பெரும் சர்ச்சை என ஏதுமில்லை


இன்று அமெரிக்காவினை உலகம் ஒரு மாதிரி பார்க்க, இந்தியாவினை பொறாமையாக பார்க்கின்றன‌


மக்களாட்சியின் தத்துவத்தை உலகிற்கு சொல்லிகொண்டிருக்கின்றது இந்தியா, உலகின் மிகபெரிய ஜனநாயக நாடான இந்தியா.


அமெரிக்க ஆர்பாட்டங்கள் உலக கவனத்தை ஈர்க்கின்றன, "இதற்குத்தான் மக்களுக்கு ஓவர் சுதந்திரம் ஆகாது.." என வடகொரிய அதிபரே சொன்னாலும் சொல்லலாம்


சரி இனி அமெரிக்காவில் எப்படி இந்த கலவரங்களை சொல்வார்கள்?


தமிழ்நாட்டில் எல்லா கட்சியினரும் குறை சொல்ல கலைஞர் என்றொருவர் கிடைத்திருப்பது போல அமெரிக்கர்களுக்கும் ஒருவர் கிடைத்திருக்கின்றார். அவர் பெயர் புட்டீன்


விரைவில் அமெரிக்க தலைவர்கள் சொல்லலாம், இந்த கலவரங்களுக்கு காரணம் ""ரஷ்ய அதிபர் புட்டீனின் சதி"









Image may contain: 13 people , crowd and outdoor







No comments:

Post a Comment