Thursday, November 24, 2016

கரன்ஸி விவாதம் ...

கரன்சி பிரச்சினை குறித்து பொதுவாக விவாதிக்க தயாரா என அருண்ஜெட்லி கேட்டிருந்தார், மன்மோகன் சிங்கினையே பங்கெடுக்க சொல்லுங்கள் என அவர் அழைப்பும் விடுவித்திருந்தார்


மன்மோகன்சிங்கின் பேச்சினை கேட்க தேசமே ஆவலாக இருந்த பொழுது இன்று அவர் பேசினார்


பெரும் பிரச்சினையில் மன்மோகனையே பேச அழைத்தார்கள், அவரும் பேசியாகிவிட்டது, நல்ல அரசியல் மாண்பு தெரிகின்றது




சுருக்கமாக ஆனால் யதார்த்தத்தை பேசினார் மன்மோகன் சிங்


அவர் பேச்சின் சாரம்சம் இதுதான்


இந்த திட்டத்தினை வரவேற்கின்றோம், ஆனால் நிர்வாக தரப்பில் ஏற்பட்ட பெரும் குழப்பத்தில் ஏழை மக்கள் பாதிக்கபடுகின்றனர், ரூபாயின் மதிப்பு வீழ்கின்றது, இனி மக்களுக்கு பாதிப்பில்லா திட்டங்களை அறிவிக்கலாம் என சொல்லியிருக்கின்றார் மன்மோகன்சிங்


சரி அவ்வளவு பெரிய அறிவாளியான மன்மோகன்சிங், இப்படி செய்திருக்கலாம் என ஒரு ஆலோசனை சொல்லியிருக்கின்றாரா? அல்லது சிக்கிகொண்ட அரசுக்கு இப்பொழுதாவது ஒரு நல்ல ஐடியா கொடுத்திருக்கின்றாரா என்றால் இல்லை


அதாவது இதனை செய்யவேண்டும், செய்தால் இப்படித்தான் நடக்கும், சில சர்சைகள் கஷ்டங்கள் வரும், வந்துவிட்டது என சொல்லியிருக்கின்றார், ,மாற்றுவழி சொல்லவில்லை


மாற்றுவழி இருந்தால் இந்நேரம் சொல்லி காங்கிரசார் அசத்தி இருக்கமாட்டார்களா?


நம்பிக்கை இல்லா தீர்மானம், ஆட்சி கவிழ்ப்பு எல்லாம் சாத்தியமே இல்லை என்பதால் இந்த எதிர்கட்சியினர் இவ்வளவுதான் செய்யமுடியும், செய்திருக்கின்றார்கள்


இத்தோடு முடியும் சங்கதி அல்ல, இனி ஜிஎஸ்டி அமல்படுத்தினால் சட்டென அடுத்ததொரு அதிர்வு வரும், பல விலைகள் கூடும். ஆனால் அது காங்கிரசாலே அறிமுகபடுத்த்தபட்ட சீர்திருத்தம்


நெருப்பாற்றினை கடந்துகொண்டிருக்கின்றது மோடி அரசு, இன்னும் ஏராளம் வரும்


அவற்றிற்கெல்லாம் அசைந்துகொடுப்பவராக மோடி தெரியவில்லை.


சரி ஒரு பிரச்சினையில் ஒரு அனுபவஸ்தரை எதிர்கட்சி பிரமுகரை அழைத்து பேச சொல்லி ஜனநாயக நாட்டு மாண்பினை காத்திருக்கின்றது மோடி அரசு


தமிழக அரசு என்ன செய்கின்றது?


ஒரு முதல்வர் நோயுற்றிருக்கும்பொழுது என்ன செய்யவேண்டும் என வழிகாட்ட, அண்ணா காலத்து கலைஞரும் எம்ஜிஆர் காலத்து பிரமுகர்களும் இன்னமும் உண்டு


அக்கட்சியினர் யாராவது இவர்களை அழைத்து என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்கின்றார்களா? அப்படி எதிர்பார்க்க முடியுமா?


ஒரு காலமும் இல்லை


இந்த விஷயத்தில் அருண்ஜெட்லியின் அழைப்பும், மன்மோகன் சிங்கின் பெருந்தன்மையும் நல்ல வழிகாட்டும் உதாரணங்கள்.






கொசுறு


நான் இந்தி கற்றுக்கொண்டால் என்ன? - மனுஷ்யபுத்திரன்

இவர் இந்தியில் மட்டும் எழுத தொடங்கிவிட்டால் இந்தி தெரிந்தவர்கள் பாடு அதோ கதிதான், மனிதர் கவிதை எழுதியே அவர்கள் இந்தியினை மறக்கடித்துவிட மாட்டாரா?

இதனை கட்சி தலமையிடம் அல்லவா சொல்லவேண்டும்? ஏன் தனியாக புலம்பிகொண்டிருக்கின்றார்?


ஓஹோ இவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி மீது ஆசை வந்துவிட்டது,

பதவிக்காக எல்லாம் திமுகவினர் இந்தி படிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார்களா? கட்சியின் கொள்கை வளர்ச்சி அப்படி இருக்கின்றது.




 


No comments:

Post a Comment