திப்பு சுல்தானை பற்றி சொன்னால், எங்கெல்லாமோ சுற்றுகின்றார்கள், அதாகபட்டது அவன் வெள்ளையரை விரட்டியிருந்தால் இஸ்லாமிய ஆட்சி நடத்தியிருப்பான் இம்மக்களை எல்லாம் கொன்று குவித்திருப்பான், இந்து அடையாளங்களை அழித்திருப்பான் என ஏக குதிப்புகள், கொதிப்புகள்
உதாரணம் தஞ்சை விவசாயிகளுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொண்டதை சொல்கின்றார்கள், அதாவது தஞ்சாவூர் இந்து விவசாயிகளுக்கு எதிராக மதகினை உடைத்தான் என செல்கிறது ஒரு பிரிவு கதை
அவர்கள் காதை திருகி இப்படி சொல்லலாம், பெருமக்களே அந்நாளில் கன்னடத்தில் பெரும் அணை இல்லை 90 சதவீத காவேரி தஞ்சைக்கு வந்தது, இதில் வெள்ளம் வந்து பயிர்கள் அழிந்தால் தஞ்சையர்கள் மைசூர் மன்னரிடம் நஷ்ட ஈடு வாங்குவது வழக்கம்
இது திப்பு காலத்தில் தொடர்ந்தது, அதாவது மைசூர் சமஸ்தானமே காவேரி வெள்ளத்திற்குபொறுப்பு என தஞ்ச்சாவூர் கொடிபிடித்த காலம், வெள்ளையர் இதில் தூண்டியும் விட்டனர், விடாதீர்கள் அவனை பிடித்து நஷ்ட ஈடு வாங்குங்கள், அவன் காவேரி உங்கள் பயிரை அழிப்பதா, ம்ம் கூடாது, நஷ்ட ஈடு தரவில்லை எனில் எம்மோடு வாருங்கள் அவனை அழிப்போம்
கிட்டதட்ட சதாம் உசேனை பின்னாளில் அமெரிக்கா திரித்தது போல அந்நாளில் திப்பு சித்தரிக்கபட்டார்
இருக்கட்டும், காவேரி என்னாயிற்று? இந்த நஷ்ட ஈடு பின்னாளில் தொடர்ந்து வந்து மைசூர் திவான் விஸ்வேசரய்யார் இந்த நஷ்ட ஈட்டிற்கு பதிலாக நாமே அணைகட்டுவோம் என கட்டி இன்று காவேரியினை அங்கே முடக்கியாயிற்று
ஆக இந்த பிரச்சினை இந்து விவசாயி பிரச்சினை அல்லவே அல்ல, சமஸ்தானங்களுக்கு இடையிலான வெள்ள பிரச்சினை. திப்பு மதவெறியன் என்றால் சாமூண்டிஸ்வரி ஆலயம் ஸ்ரீரங்கபட்டினத்தில் இருந்திருக்கும்?
இவர்கள் என்ன சொல்லவருகின்றார்கள் என்பது புரிகின்றது,
அதாவது வெள்ளையன் வருமுன் இது இஸ்லாமியரால் ஆளபட்டது, எனவே வெள்ளையன் வரவில்லை எனில் முழு இஸ்லாமிய தேசமாக இருந்திருக்கும், திப்பு போன்ற இஸ்லாமிய மன்னர்களிடமிருந்து இந்த நாட்டை மீட்டது வெள்ளையனே
அப்படியானால் காந்தி சுதந்திரம் வேண்டி போராடியது தவறா? இருக்கலாம்
அதனால்தான் கோட்சே போற்றி எனும் புகழ்மாலை ஆங்காங்கே கேட்கின்றது,
நாட்டுபற்று என எதுவுமில்லை, இஸ்லாமிய எதிர்ப்பு கண்ணோட்டமென்றே பிராதனம் என விபரீதமாக வரலாற்றினை திணிக்கின்றார்கள்
ஆக இந்த சுதந்திரபோராட்ட வீரர்களையும் இவர்கள் மத வெறியர்களாக பார்ப்பார்கள். திப்புவும், காந்தியும் வெள்ளையனை எதிர்த்ததால் துரோகி,
மதத்தை காக்க புறப்பட்ட தியாகி கோட்சே
விரைவில் இந்தியாவினை காத்த மாவீரன் என ராபர்ட் கிளைவிற்கும், பிரெஞ்ச் தளபதி டூப்ளேவிற்கும் பாராளுமன்றத்தில் சிலை வைக்கபட்டாலும் ஆச்சரியமில்லை
மொத்தத்தில் உலகிற்கு ஒரு வரலாறு என்றால் இவர்களுக்கு தனி வரலாறு, வித்தியாசமான ஆசிரியர்கள் இப்பொழுது வரலாற்று பாடம் எழுதுகின்றார்கள்.
No comments:
Post a Comment