Tuesday, November 1, 2016

தீபாவளி கொண்டாட்டமா? காசை கரியாக்கலாமா? : வீரமணி கேள்வி

காவிரி நீர்ப் பிரச்சினை உள்பட பலவற்றையும் திசை திருப்பிட தீபாவளி கொண்டாட்டமா? காசை கரியாக்கலாமா? : வீரமணி கேள்வி


காவேரி பிரச்சினை 30 ஆண்டுகால பிரச்சினை, இன்றா வந்தது?


அந்த வளர்ப்புமகன் திருமணம் சென்னையில் பலகோடி செலவழித்து நடக்கும் பொழுது வராத அக்கறை, எத்தனையோ திமுக மாநாடுகள் கோடிகணக்கான பணம் கொட்டி நடத்தபட்டபொழுது வராத அக்கறை




கட்சிகளும், மாநாடுகளும் நடத்தபடும்பொழுது இவர் அமைதியாக இருப்பாராம், தேர்தலில் கட்சிகள் கொட்டி கொடுக்கும்பொழுதும் அமைதியாக இருப்பாராம்


புலிகள் அக்காலத்தில் தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தியபொழுதும் அமைதியாக இருப்பாராம்


அவ்வளவு ஏன்? அன்று ஜெயலலிதா ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் வைக்கபடும் தோரணங்கள் செலவு என்ன? பேனர்கள் செல்வு என்ன?


அவ்வளவு ஏன் அஞ்சுகம் பெற்ற செல்வனே , அஞ்சுகம் பேரனே என ஊரெல்லாம் சொல்லும் விளம்பர செலவென்ன?


கிரிக்கெட் போட்டிக்கு நடக்கும் செல்வுகள் என்ன?


சில சினிமாவுக்கும், அதன் விளம்பரங்களுக்கும் நடக்கும் வெட்டி செலவுகள் என்னென்ன?


அதனை எல்லாம் பார்க்கும்பொழுது இப்படி காசினை கரியாக்குகின்றார்களே, தமிழகத்தில் என்னென்ன பிரச்சினை இருக்கின்றது என இவர் சொன்னதுண்டா?


ஏய் தமிழர்களே,காவேரி நீர் வராத தமிழகத்தில், ரஜினி, அஜித்,விஜய், தனுஷ் படங்கள் வரலாமா?


மானம், வெட்கம், எல்லாம் தமிழனுக்கு இல்லையா? என கேட்டிருப்பாரா? அல்லது கேட்கபோகின்றாரா என்றால் இல்லை


ரம்ஜானுக்கு வெட்டபடும் ஆடுகள் மதிப்பென்ன? கிறிஸ்மஸ்க்கு கேக் வகைகளுக்காகவும் ஒயின் வகைகளுக்காகவும் கொட்டபடும், கரியாக்கபடும் பணம் என்ன?


அப்படி எல்லா விஷயங்களிலும் இருட்டு அறையில் குருட்டு பூனைபோல இருந்துகொள்வாராம்


தீபாவளியினை கண்டுவிட்டால் மட்டும் அன்னாருக்கு கோபம் பொத்துகொண்டு வருமாம்


இதுதான் பெரியார் சொல்லிகொடுத்த பகுத்தறிவும், சுயமரியாதையும்


வெரி பேட் ஓல்டு மேன்..



No comments:

Post a Comment