Saturday, June 17, 2017

சபர்மதி ஆசிரமம்



Image may contain: house, plant, outdoor and natureஇந்திய சுதந்திர போராட்டத்தின் தலமையகமாக இருந்த இடங்கள் சில, அவற்றில் ஒன்றுதான் சபர்மதி ஆசிரமம்


மகாத்மா காந்தி சபர்மதி ஆற்றங்கரையில் அதனை 100 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் தொடங்கினார், இந்திய ஞானமரபு படி வெள்ளையனை எதிர்க்க அதில்தான் சிந்தித்தார்


'என்னை வருத்தி உன்னை திருத்துவேன்.." என்ற இந்திய ஞான தத்துவம் அது, புத்தன் எனும் பெரும் ஞானியும், இயேசுவும் சொன்ன தத்துவம் அது, வெள்ளையனை ஆயுதம் மூலம் ஒரு காலமும் விரட்டமுடியாது என்பதை உணர்ந்த காந்தி, அஹிம்சை எனும் அற்புத தத்துவாயுதத்தை அங்குதான் எடுத்தார்


நாள்தோறும் பகவத் கீதையும், இந்து தத்துவங்கள் உட்பட சர்வமத பிரார்த்தனையும் , சுயேசி கைராட்டை தத்துவங்களும் முழங்கிய இடம் அது, அதுதான் கிட்டதட்ட 30 ஆண்டுகாலம் சுதந்திர போராட்டத்தை நடத்தியது


அந்த வரலாற்று சிறப்புமிக்க ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா இன்று


ஆனால் வெகுசிறப்பாக கொண்டாடவேண்டிய அந்த அடையாளம், உலகின் ஒப்பற்ற பெரும் தத்துவத்தை சொன்ன அந்த சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா சத்தமின்றி சிறப்பிக்கபடுகின்றது


எவ்வளவு பெரும் அவமானம் இது?


இந்த உலகெமல்லாம் இந்தியாவின் அடையாளம் என சொல்லபடும் தலைவர்கள் வெகுசிலர், காந்தி, விவேகானந்தர் என அந்த பட்டியல் மிக மிக குறுகியது


அதிலும் காந்தி எல்லா நாட்டு மக்களாலும் வணங்கபடுபவர், உலகில் இந்திய தலைவன் ஒருவனுக்கு ஏராளமான நாடுகளில் சிலை உண்டென்றால் அது காந்தி ஒருவருக்குத்தான்


அப்படி உலகமே மதிக்கும் ஒருவர் வாழ்ந்த இடத்தின் நூற்றாண்டுவிழா சத்தமே இல்லாமல் நகர்கின்றது என்பது பெரும் வேதனை


இந்திய அரசு அப்படியான காரியத்தில் இறங்கியிருகின்றது, சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டிய அரசு, அம்மகானுக்கு சாதி சான்றிதழ் கொடுக்கின்றது, அவர் என்ன சாதி என அமித்ஷா சொல்லிகொண்டிருக்கின்றார்.


தமிழக அரசு ராமசந்திரன் என்பவருக்கு நூற்றாண்டு விழா என சொல்லிகொண்டிருக்கின்றது, அது இன்னொரு பெரு கொடுமை..


எப்படிபட்ட புகழ்வாய்ந்த மனிதன் காந்தி?


உலகிற்கு இந்தியா கொடுத்த கொடைகள் பட்டியலில் காந்தியும் உண்டு, பசுமாடு அந்த பட்டியலில் இல்லை


பசுமாடு என்ன இந்தியா கொடுத்த கொடையா? உலகில் எங்குமே பசுமாடு இல்லையா?


உலகெல்லாம் பசுமாடு கிடைக்கும், ஒரு காந்தி கிடைப்பாரா? அவரின் அஹிம்சை எனும் ஒப்பற்ற தத்துவமும், அவர் காட்டிய வழியும், அவர் பெற்ற வெற்றியும் கிடைக்குமா?


இந்த உலகிற்கே அமைதியும், அன்பும் காட்டிய அந்த சபர்மதி ஆசிரமத்திற்கு இன்றும் வயது 100


அவரால் சுதந்திரம் பெற்ற இந்தியா அதனை மறக்கலாமா? நிச்சயம் கூடாது , ஆனால் இந்த மதவாத அரசு அந்த படுபாதகத்தை செய்கின்றது.


செய்யகூடாத தவறு அது, வந்த பாதையினை இந்நாடு மறந்துவிட்டால் செல்லும் பாதையும் அதற்கு தெரியாது, இருட்டில் காட்டில் தவிக்கும் நிலை அதற்கு வந்துவிடும், இந்த அரசு அதற்குத்தான் ஆசைபடுகின்றது


காந்தியினை அடுத்த தலைமுறை தெரிந்துகொள்ள கூடாது, அவர் அப்படியே மறக்கபடவேண்டும் என்பதில் அதற்கு அவ்வளவு அக்கறை


ஆனால் நன்றியுள்ள இந்தியர்களானால் அந்த மகானை நினைத்து பார்க்க வேன்டும் , 40 கோடி மக்களை கத்தி எடுக்காமல், அகதியாய் ஓட வைக்காமல், சாகடிக்காமல் பெரும் அமைதி புரட்சி மூலம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிய அற்புத மனிதர் அவர்


அவரை போற்றுவொம், அந்த சபர்மதி ஆசிரம நூற்றாண்டு விழாவினை இந்தியராய் கொன்டாடுவோம்


இந்திய சுதந்திர போராட்டத்தில் அது தவிர்க்க முடியாத தலமையகம், ஒரு அற்புதமான இனி வரமுடியாத ஒரு ஒப்பற்ற இந்திய தலைவன் வாழ்ந்த இடம்


இந்த நூறாவது ஆண்டில் எங்கிருந்தாலும் அத்திசை நோக்கி வணங்க வேண்டியது இந்தியரின் கடமை


நான் என் கடமையினை செய்துகொன்டிருக்கின்றேன்..













 


 

No comments:

Post a Comment