Friday, June 23, 2017

யோகா மானிடரின் ஆரோக்கியத்திற்கு அது மிக பெரும் விஷயம்

யோகா அற்புதமான விஷயம், மானிடரின் ஆரோக்கியத்திற்கு அது மிக பெரும் விஷயம்


அன்று இந்தியா கடைபிடித்த அந்த விஷயம் தான் பின்பு தென்கிழக்கு ஆசியா எங்கும் பரவியது, கிழக்காசியாவின் பல இனங்களில் யோகாவின் தாக்கம் உண்டு, சீனாவில் அது அதிகம்


புத்தம், சமணம் என எல்லா மதங்களிலும் தியானமும் , பயிற்சியும் உண்டு. அதாவது யோகா அங்கு வேறுபெயரில் அழைக்கபடும்.




யோகாவினை கற்பிப்பதும், இளம் தலைமுறைக்கு சொல்லிகொடுப்பதும் நல்ல விஷயமே


திருகுறள் போல அது மானிடர்க்கு தேவையான விஷயம் என்பதில் மாற்று கருத்தில்லை


ஆனால் அது ஒன்றுதான் இந்நாட்டின் பெரும் பிரச்சினை போலவும், யோகாவினை இவர்கள்தான் கண்டுபிடித்தது போலவும் அரசியல் செய்வதுதான் எதிர்க்க வேண்டிய விஷயம்


மத அடையாளமாக யோகாவினை சொல்லமுடியாது, சித்தர்கள் கூட அதனை செய்திருக்கின்றார்கள், பெரும்பான்மையான சித்தர்கள் மத வரையறையில் வரமாட்டார்கள்,


யோகா இந்திய அடையாளம், இந்துக்களின் அடையாளம் அல்ல‌


யோகாவினை வரவேற்கலாம், ஆனால் யோகாவினை வைத்து அரசியல் செய்வது ஏற்றுகொள்ளமுடியாது


மதிமாறனும், பாஜக உறுப்பினரும் மல்லுகட்டினார்கள் என சில செய்திகள் வருகின்றன‌


மதிமாறன் எல்லா விஷயத்தையுமே பெரியார் எனும் கண்கொண்டு பார்ப்பவர், அவரின் எல்லா பார்வையுமே பெரியாரிசமாகவே இருக்கும்


பாஜகவினர் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. அன்று இந்தியா இந்தியர்களுக்கானது என காங்கிரஸ் போராடியது அதில் இருந்தவர்கள் தேசபக்தர்கள்


இன்று இந்தியா இந்துக்களுக்கே என சொல்பவர்கள் இவர்கள், இந்துக்கள்தான் தேசபக்தர்கள் என்பது இவர்கள் நிலைப்பாடு


இந்த இருவரையும் பேசவைத்ததே தவறு, கேட்போரை குழப்பிவிட்டு சென்றுவிடுவார்கள், அதுதான் நடந்திருக்கின்றது


அரசியலில் நாட்டுபற்று கலக்கவேண்டும், மக்கள் நலன் கலக்க வேண்டும். யோகா போன்ற பாரம்பரியங்கள் இந்து அடையாளாமாக கலந்தது போல , அரசியலில் மதம் கலந்தால் அது பெரும் ஆபத்து


அவ்வளவுதான் விஷயம்..



No comments:

Post a Comment