Friday, June 23, 2017

கலைஞர் பங்களிக்காத ஜனாதிபதி தேர்தல்





Image may contain: 1 person, smiling, sunglasses and close-up

60 ஆண்டுகாலத்திற்கு பின்பு கலைஞர் பங்களிக்காத ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்றது


விவி கிரி போல எத்தனை ஜனாதிபதிகள் அவரை வாழ்த்தியிருக்கின்றனர், எத்தனை ஜனாதிபதிகள் அவர் அரசை காரணமின்றி டிஸ்மிஸ் செய்திருக்கின்றனர்


இரண்டையும் ஒன்றாகவே எடுத்துகொண்டு அரசியல் நடைபோட்டவர் கலைஞர்..





காலம் எவ்வளவு வேகமாக ஓடியிருக்கின்றது என்பதை நினைத்துபார்க்க முடிகின்றது

எவ்வளவு பெரும் சகாப்தம் ஒய்ந்திருக்கின்றது என்பதை நினைக்கும் பொழுதே மனதில் ஒரு சிலிர்ப்பு வந்துவிட்டுத்தான் போகின்றது

அவரிடம் "ராம்நாத் கோவிந்த்" பற்றி சொல்ல சொன்னால் எப்படி சொல்வார் தெரியுமா?

"கோவிந்தா கோவிந்தா" கோஷம் போடத்தானே இந்த ஆட்சி இருக்கின்றது, முன்பு ராமர் என்றார்கள் இப்பொழுது கோவிந்தனையும் சேர்த்துகொண்டார்கள்

அது ஆச்சரியமல்ல‌

ஆச்சரியம் எது என்றால் "அம்மா" என அழுதவர்கள் எல்லாம் "கோவிந்தா" என கிளம்பிவிட்டார்கள்.

மொத்தத்தில் இந்த திருநாட்டிற்கு "கோவிந்தா", தமிழ்நாட்டிற்கு "கோவிந்தா"













 


 

No comments:

Post a Comment