Wednesday, June 21, 2017

எங்களுக்கு வழிகாட்டிய ஹேட்கேவர் : மோடி





Image may contain: 1 person, beard and hatயோகாவிற்கான நாள் எது? எந்த முனிவர் இந்த நாளில் யோகாவினை கொண்டாட சொன்னார்? சாஸ்திரங்களும் புராணங்களும் வானியல் கோள்களும் இந்நாளை சொன்னதா என்றால் பதில் தரமாட்டார்கள்






மாறாக இதே நாளில் யோகா தினமாக கொண்டாட காரணம் என்னவென்றால் அது ஆர்.எஸ்.எஸ் பிதாமகனின் நினைவு நாள்

இந்நாளில்தான் ஹேட்கேவர் காலமானார், முதலில் காங்கிரஸ்காரராகவும் பின் இந்து மதத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்ற கிளம்பிய அந்த ஹேட்கோவர்தான் ஆர்.எஸ்.எஸஐ 1925ல் நிறுவினார்


இந்தியா முழு இந்துநாடு, இந்தியா இந்துக்களுக்கே, ஆகமவிதிபடியே எல்லாம் அமையவேண்டும், பசுமாடு தெய்வம், அகண்ட இந்தியா வேண்டும் என பல கருத்துக்களை முன் வைத்தவர் அவர்தான்

அந்த கோஷா இன்னபிற வகுப்புகள், கால்சட்டை, எல்லாம் இவரின் சிந்தனைகள், அதில் யோகாவும் ஒரு பாடமாக உண்டு

இவர் காட்டிய வழியில்தான் பின் பலர் உருவானார்கள், கோல்வால்கர், அத்வானி, மோடி எல்லாம் அன்னாரின் சீடர்கள்

சுதந்திரம் கிடைக்கும் முன்பாகவே 1940 , ஜூன் 21ல் அவர் காலமானார், இவரும் யோகா பயின்றவர், சொல்லிகொடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது ஆனாலும் 50ம் வயதில் காலமானார்

யோகா அவருக்கு மட்டும் ஆரோக்கியத்தை ஏன் கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை.

இன்று ஆர்.எஸ்.எஸ் நாடாள இவர்தான் காரணம், சங்கத்தின் பிதாமகன் அல்லவா? அத்வாணிக்கு நன்றி காட்டினால் குடியரசு தலைவராவேன் என அடம்பிடிப்பார், அதனால் செத்துபோன ஹேட்கோவருக்கு காட்டலாம்

அதனால் யோகா தினம் என கிளம்பிவிட்டார்கள், அதுதான் ஜூன் 21ஐ மிக சரியாக தேர்ந்தெடுத்த காரணம், மற்றபடி ஒன்றுமல்ல‌

எங்களுக்கு வழிகாட்டிய ஹேட்கேவர் வாழ்க , என்பதைத்தான் லக்னோவில் தலைகீழாக நின்று சொல்லிகொண்டிருக்கின்றார் மோடி








No comments:

Post a Comment