Sunday, June 11, 2017

இப்பொழுது உண்மை புரிகின்றது...

தமிழகத்தில் கடும் வறட்சி, காவேரி டெல்டா பொய்த்துவிட்டது, கொஞ்சமும் விளைச்சல் இல்லை


மற்ற பகுதியில் நிலத்தடிநீர் 1000 அடிக்கு கீழ் சென்றுவிட்டது, குடிக்கவே நீருக்கு பஞ்சம்


இப்படியான நிலையில் பெரும் உணவு பஞ்சம் எற்பட்டிருக்க வேண்டும், ஆனால் அப்படி செய்திகள் இல்லை, பெரும் குழப்பம் ஏற்படுத்திய கேள்வி அது




இப்பொழுது உண்மை புரிகின்றது,


பிளாஸ்டிக் அரிசியும், சோப்பு நுரை பாலும் புரண்டோடும் தமிழகத்தில் எப்படி உணவுபஞ்சம் வரும்???


விவசாய வீழ்ச்சி உணவு தட்டுப்பாடு எனும் உண்மைதான் பிளாஸ்டி அரிசியாகவும், சோப்பு பாலாகவும் செய்திகளாக வருகின்றன‌


இன்னும் என்னென்ன ஆபத்துக்கள் எல்லாம் எழுமோ தெரியாது


வரும் காலத்தில் கோடிரூபாய் சம்பளம் வந்தாலும் ஆரோக்கியமான உணவுக்கே செலவழிக்கும் நிலை வரும்


அந்த கோடி ரூபாய் சம்பாதித்து உணவுக்கே செலவழிப்பதை விட, நேரடியாக விவசாயமே செய்யலாம் என்றொரு நிலை பிற்காலத்தில் நிச்சயம் வரும்


உலகம் அதனை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றது..


நமது சந்ததிக்கு கொஞ்சம் விவசாய நிலங்களையும், விவசாய பாடங்களையும் விட்டு செல்வது நல்லது போல தெரிகின்றது



No comments:

Post a Comment