Sunday, June 25, 2017

கலைஞர் மேல் இவர்களுக்கு என்ன கோபம்?

ஒரு சில அறிவு ஜீவிகள் அலைகின்றன, எங்காவது மோடி அரசு மத நல்லிணக்கத்திற்கு எதிராக சில காரியங்களை செய்கின்றது என்றால்,

ஏய்... கலைஞர் என்ன விநாயர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்தாரா? கார்த்திகை தீபம் அன்று சொக்கபனை கொளுத்தினாரா? தீபாவளிக்கு அச்சுமுறுக்கு சுட்டாரா? ஓலைபட்டாசு கொளுத்தினாரா? என பதிலுக்கு கேட்கின்றார்கள்

கலைஞர் என்பவர் இந்நாட்டு பிரதமராகவா இருந்தார்? ஒரு மாநிலத்தின் முதல்வர் அவர். சில மூட பழக்கங்களில் அதாவது தீ மிதித்தல், மண்சோறு உண்ணுதல் , தீண்டாமை இவற்றை எதிர்த்தாரே அன்றி அவரால் என்ன மதகலவரம் வந்தது?


கோயில்களை எல்லாம் இடித்தாரா? ஆறுகால பூஜையினை தடுத்தாரா?

சிறுவயதில் இருந்தே சாதிகொடுமையினை உணர்ந்து வளர்ந்ததால் அவருக்கு ஆலய‌ நம்பிக்கை இல்லை, கரப்பானும், பூரானும் போகும் கருவறைக்குள் தாழ்த்தபட்ட மனிதன் செல்ல கூடாது என்பதில் அவருக்கு ஒப்புதல் இல்லை

ஆனால் அந்த நம்பிக்கையினை தன்னோடு வைத்துகொண்டார். மக்களின் அல்லது தொண்டர்களின் மத நம்பிக்கைக்கு என்றாவது அவர் இடைஞ்சல் செய்தாரா?

கட்டாய மதமாற்ற சட்டம், ஆலயங்களில் ஆடு கோழி வெட்ட கூடாது இன்னபிற சர்ச்சை சட்டங்களை எல்லாம் அவரா கொண்டுவந்தார்?

மதத்தின் பெயரால் தமிழகத்தில் ஒரு சிறு கலவரம் அவரால் ஏற்பட்டிருக்கும்? ஏதும் ஆலயம், மசூதி, தேவாலயம் உடைக்கபட்டிருக்கும்?

ஏதும் மத போதகர்கள் அவரால் கொழுத்தபட்டிருப்பார்கள்?

எத்தனையோ ஆலய தேர்கள் அவராட்சியில் புதுப்பிக்கபட்டன, எத்தனையோ ஆலய கும்பாபிஷேகம் அவர் ஆட்சியில் நடந்தது

மகாமகம் போன்ற குளங்களில் குளிக்க சென்று 50 பேரை கொல்லாவிட்டால் அவர் இந்துக்களுக்கு எதிரானவரா?

நமது கொள்கை என்பது வேறு, ஆட்சி என்பது வேறு. து, ஆட்சி என்பது மக்களுக்கானது அதில் நம் கொள்கை திணிக்கபட கூடாது என்பதில் மிக கருத்தாக இருந்தவர் அண்ணா

கலைஞரும் அதில் மிக கருத்தாக இருந்தார், மூட நம்பிக்கைகளை சாடினாரே அன்றி மக்களின் அடிப்படை நம்பிக்கையினை அல்ல‌

இந்தியாவின் ஒரு மாநில முதல்வரை , பாரத பிரதமர் எனும் பெரும் பொறுப்பான பதவியில் இருக்கும் மோடி செய்யும் அழிச்சாட்டியங்களுடன் ஒப்பிடுவது எப்படி சரியாகும்?

கலைஞர் என்ன பாரத பிரதமராகவா இருந்தார்?

பின்னும் ஏன் கலைஞரை திட்டுகின்றார்கள்?

அவர்கள் அப்படித்தான், 1991ல் ராஜிவ் கொல்லபட்டவுடன் கொன்றது யாரென்றே தெரியாத மே 21 நள்ளிரவில் கலைஞர்தான் காரணம், அவர் வளர்த்த புலிகள்தான் காரணம் என சொல்லி பெரும் கலவரத்தை வளர்த்தவர்கள் அல்லவா?

விசாரணை நடந்து 1 மாதம் கழித்து புலிகள்தான் கொலைகாரர்கள் என சொல்லுமுன், கொலை நடந்த 10 நிமிடத்திலே கலைஞர் மீது பழிபோட்ட கும்பல் அது

இப்படி ஏராள சம்பவங்களை சொல்லலாம்

கலைஞர் மேல் இவர்களுக்கு என்ன கோபம்?

கலைஞர் பிரதமர் பதவியில் இருந்திருந்தால் எப்படி எல்லாம் நல்லிணக்க கட்டுரை எழுதியிருப்பார் , எத்தனை அர்த்தமுள்ள விஷயங்களை மிக உருக்கமாக சொல்லியிருப்பார்.

அந்த வித்தை மோடிக்கு வராது, சுட்டுபோட்டாலும் வராது அந்த கோபம் தான் அவர்களுக்கு..

No comments:

Post a Comment