Saturday, June 17, 2017

பல தலைவர்கள் ஒழிந்து ஒரே தலைவர் ஆகட்டும்

கிட்டதட்ட 47 ஆண்டு காலம் கழித்து திமுகவில் பல தலைவர்கள் உருவாகின்றார்கள்


சமீபத்தில் "செயல் தலைவர்" என ஸ்டாலினை சொன்னார்கள், இப்பொழுது 'இளம் தலைவர்' கனிமொழியாம்


அடுத்து யார்? அழகிரி விரைவில் "கடும் தலைவர்" ஆகலாம், அன்பழகன் "பழம் தலைவர்" ஆகலாம், தயாநிதி மாறன் "மன‌ தலைவர்" ஆகலாம்




மு.க தமிழரசு "ஒதுங்கிவிட்ட தலைவர்", முரசொலி செல்வம் "பேப்பர் தலைவர்" என ஆகலாம்.,


மு.க முத்து "விரட்டபட்ட தலைவர்" ஆகலாம்


துரைமுருகன் "மகிழ்ச்சி தலைவர்", ஆற்காடு வீராசாமி "தொலைந்த தலைவர்" ஆகலாம், பொன்முடி "அமைதி தலைவர்", கே.என் நேரு "அழும் தலைவர்" , எ.வ வேலு "அதிரடி தலைவர்" என ஆகலாம்


சபரீசன் "மறைமுக தலைவர்" ஆகலாம், இன்னும் எத்தனை தலைவர்கள் வருவார்களோ தெரியாது ஆனால் வருவார்கள்


ஒரு பெரும் தலைவன் ஓயும் காலத்தில் இப்படியான பல தலைவர்கள் வருவது இயல்பு..


கலங்கித்தான் இனி தெளியும் காட்டாறு, முன்பு நிதிக்கு பஞ்சமில்லாமல் ஏகபட்ட நிதிகள் இருந்தது, இப்பொழுது தலைவர்கள் நிறைகின்றார்கள்..


ஆனால் இம்மாதிரி இம்சை தலைவர்கள் எல்லாம் இப்பொழுது தேவையில்லை, ஜெயா இல்லை இனி வெற்றி நமதே என அசட்டு குருட்டு தைரியத்தில் சவால் எடுப்பார்கள் என்றால் அது திமுகவிற்கு நல்லதே அல்ல‌


இந்த பல தலைவர்கள் ஒழிந்து ஒரே தலைவர் ஆகட்டும்



No comments:

Post a Comment