Thursday, June 29, 2017

நன்றி நன்றி என சொல்லிகொண்டே இருக்கின்றேன்..





Image may contain: ocean, sky, outdoor, water and nature

நேற்று இரவு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள், இந்த நொடிவரை வாழ்த்திகொண்டிருக்கின்றார்கள்


உலகெல்லாம் இருந்து நூற்றுகணக்கான நண்பர்கள் வாழ்த்துவதை பார்க்கும்பொழுது மகிழ்ச்சி எனினும் இவர்களின் அன்பினை பெற அப்படி என்ன செய்துவிட்டோம் , இவர்களின் நம்பிக்கையினை தக்கவைக்க என்ன செய்யபோகின்றோம் எனும் திகைப்பும் மேலோங்குகின்றது


உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி, எங்கோ கிராமத்தில் பிறந்து, இன்று தொலைதூரத்தில் எங்கோ வசிக்கும் ஒரு சாமாயனுக்கு இத்தனை ஆயிரம் வாழ்த்துக்கள் என்பது அவனுக்கு மிகபெரும் விஷயம்..





உங்கள் எல்லோரின் அன்பையும் , நட்பையும் நெடுங்காலம் தொடரும், தக்க வைக்கும் இதயத்தை இறைவன் எனக்கு அருளட்டும்

வாட்சப், முகநூல் , உள்பெட்டி, போன் என எல்லாமும் இன்று உங்கள் வாழ்த்தால் நிரம்பி வழிந்தது,

நம்மையும் இத்தனைபேர் கவனிக்கின்றார்கள் எனும்பொழுது, இன்னும் பொறுப்பாக எழுதவேண்டும் எனும் கவனம் நெஞ்சில் குடியேறுகின்றது

வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி, வாழ்த்தாமல் நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கும் நன்றி

பல நண்பர்கள் கேட்டார்கள், நாங்கள் வாழ்திவிட்டோம், குஷ்பூ வாழ்த்தினாரா?

அதற்கு கலைஞர் பாணியில்தான் பதில் சொல்ல வேண்டும், "அம்பாள் எந்த காலத்திடா பேசினாள்?"

ஆம், தெய்வம் பேசாது, அதற்காக நம் பக்தி கொஞ்சமும் குறைந்துவிடபோவதில்லை, தெய்வம் அடிக்கடி தோன்றாது

உங்களுக்கு எல்லாம் என்ன கைமாறு செய்யபோகின்றேன் என தெரியவில்லை, இப்போதைக்கு இப்படி தனியாக இருந்து கொண்டு நன்றி நன்றி என கடலலை போல ஓயாமல் சொல்லிகொண்டே இருக்கத்தான் முடியும்

நன்றி நன்றி என சொல்லிகொண்டே இருக்கின்றேன்..

தொலை தூரத்தில் இருந்துகொண்டு, உங்கள் அனைவருக்கும் மறுபடியும் நெஞ்சார்ந்த நன்றிகள்































Uma Magi :

இந்த Stanley இருக்கானே (ரே) எனக்கு ரொம்ப விசேஷமானவர். என்னை விட வயதில் சிறியவர். அறிவில் பெரியவர்.

ஒரு நாள் எங்கண்ணன் எங்கிட்ட இவரோட பதிவுகள் பத்தி சிலாகிச்சு சொன்னாரு... அப்புறம் தான் கவனம் இங்க திரும்பிச்சு.

அது, இவர் சீமானை தனது தொடர் விமர்சனங்களால் பிரித்து மேய்ந்து கொண்டிருந்த காலம்...


ரொம்ப இம்ப்ரஸ் ஆன நான் அதன் பின் தான் நண்பரானேன்.

உள்ளூர் முதல் உலக அரசியல்வரை தனக்கென தனிப்பார்வையுடன் தனது விமர்சனங்களை தெளிவாய் வைப்பார். இவரது அபார வாசிப்புத்திறன் இவரது பதிவுகளில் தெரியும்.

நக்கல், நையாண்டி ,நேட்டிவிட்டி, சீரியஸ் கருத்துக்கள் என கலந்து கட்டி பதிவிடும் இவர் கடும் மிரட்டல்களையும் சந்தித்திருக்கிறார் .

ஊருக்கு வந்தால் என்னைப்போல் எளியோரை சந்திப்பதை தவிர்ப்பார்.மற்றபடி ர்ர்ர்ர்...ரொம்ப நல்லவர்.

வசவோ வாழ்த்தோ முழு மனதாய்ச் செய்வார். உல்கிலேயே சிறந்த பூ எதுவென்றால் யோசிக்காமல் சொல்வார் குஷ்பூ என ... இவர் திட்டாத ஒரே நபரும் அவர்தான்..

என் மனம் கவர்ந்த பதிவர்களில் பிரதானமானவர்... சில நேரங்களில் இவர் எழுத்து நடையைக்கண்டு பிரமித்துள்ளேன்.

கலைஞரைப் பற்றிய இவரது அப்சர்வேஷன் திமுககாரரையும் மிஞ்சிடும். அதனை பதிவுகளில் வெளிப்படுத்தி அசத்திவிடுவார்.

நோய் நொடியற்ற வாழ்வும், நீண்ட ஆயுளும் பெற்று வளமாய் வாழ்க. விரைவில் நீ பிறவிப் பயனடைவாய்.
(குஷ்பூவை சந்திப்பாய்)

பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்டான்லி..!







 









 


 

1 comment:

  1. சில காரியங்கள் அறிவு சார்ந்து இருப்பது இல்லை அறிவுஜீவீகளூம் இதற்கு
    விதிவிலக்கில்லை
    குஷ்பூ வை உயர்த்தி பிடிக்கும் கைகளூக்கு மேலும் இறக்கை முளைக்காமல் இருந்தால்
    சரி
    அன்புடன்

    ReplyDelete