Monday, June 19, 2017

ஒரு விபரீத செய்தி சே குவாரே பற்றி ....

ஒரு விபரீத செய்தி சே குவாரே பற்றி சுற்றி வருகின்றது, அதாவது அவர் ஒரு வெறியர், போதை பிரியர், பெண்களை கண்டால் விடவே மாட்டார் போன்ற பெரும் புரட்டு செய்திகள்


இவை எல்லாம் எங்கிருந்து கிளம்புகின்றது என்றால் சாட்சாத் அமெரிக்க சி.ஐ.ஏயிடமிருந்து


தனக்கு பிடிக்காதவன் ஆண்டவனே ஆனாலும் அவர்கள் அள்ளிவிடும் கதைகள் அப்படி, ஒரு மனிதன் எதிரி என தீர்மானித்துவிட்டால் முதலில் அவனின் இமேயினைத்தான் கொல்வார்கள்




உலகம் முழுக்க உள்ள அவர்களின் கைப்பாவை ஊடகங்கள் அவற்றை பெரிதாக்கும்,


லிபிய அதிபர் கடாபி பெரும் பெண் பித்தர் என்றார்கள், உண்மையில் அவர் அப்படி அல்ல, நாட்டிற்காய் வாழ்ந்த ஒரு நல்லவன்


முன்பு இந்தோனேஷிய அதிபர் சுகர்தோவினை போல ஒருவரை வைத்து புளுபிலிம் எல்லாம் எடுத்து இதோ சுகர்தோவின் யோக்கியதை என உலகிற்கு சொன்னது அமெரிக்கா


இதோ வடகொரிய தலைவன் குடிகாரன், போதை பித்தன் என்றார்கள், அந்த குடிகாரன் நாட்டை ஏன் இன்னும் தாக்கமுடியவில்லை அல்லது அவனை நெருங்கமுடியவில்லை என்றால் பதிலிருக்காது, இதுதான் அமெரிக்கா


சதாம் பெரும் முரடர், கொலை வெறியன் என்றெல்லாம் அவர்கள் கட்டிய கதை உண்டு


ஈரானின் புரட்சியாளர் அயதுல்லா கோமேனிபற்றி அவர்கள் செய்யாத பிரச்சாரமா?


300 முறை கொல்ல முயன்றும் தோற்ற காஸ்ட்ரோ பற்றி அவர்கள் அள்ளிவிடாத கட்டுகதைகளா?


ரஷ்யாவின் ஸ்டாலின் பற்றி அவர்கள் செய்யாத பொய் பிரச்சாரமா? இன்றுவரை அது நீடிக்கின்றது


அப்படி சே பற்றியும் சில கொடூர கதைகளை திரித்துவிட்டார்கள், அதில் ஒரு சில வரிகளை படித்துவிட்டு பலர் பக்கம் பக்கமாக பேசும் இம்சை தாளவில்லை


உண்மையில் இவை எல்லாம் திட்டமிட்ட பெரும் சதி, உலகம் ஒருவனை தூற்றவேண்டும், அவனை நல்லவனாக நினைத்துவிட கூடாது எனும் பெரும் சதியில் தீட்டபடும் திட்டம்


சே எனும் பெயர் அவர்களுக்கு அவ்வளவு பயங்கர‌ அருவெருப்பு.


அமெரிக்கர்கள் பிரிட்டிசாரின் வம்சாவழி, பிரிட்டிசார் எப்படி?


கட்டபொம்மனையே கொள்ளைக்காரன் என எழுதி வைத்த உத்தம சிகாமணிகள், அவர்களின் வாரிசுகள் சே குவேராவினை விடுமா?


உண்மை அறிந்தவர்கள் இதனை எல்லாம் தள்ளிவிட்டு புன்சிரிப்போடு நகர்வார்கள்


ஆனானபட்ட கென்னடிக்கு மர்லின் மன்றோவோடு இருந்த தொடர்பு உலகறிந்தது, கிளிண்டனின் அட்டகாசம் எல்லோருக்கும் தெரியும்


ஆனால் இவர்கள் தூற்றுவது சே எனும் மாமனிதனை, அவன் போதை பித்தனாகவும், பெண் பொறுக்கியாகவும் இருந்திருந்தால் கியூப நாட்டின் நிதியமைச்சர் பதவி கிடைத்தவுடன் அதில் அமர்ந்திருக்கமாட்டானா?


ஏன் ஒவ்வொரு நாடாக சென்று புரட்சி தீ ஏற்றபோகின்றான்?


புரட்சி என்றவுடன் தமிழகத்து இம்சை ஒன்று எல்லோர் மனதிலும் வந்துவிடும் போல, உடனே புரட்சியாளர் என்றால் இவனைபோல்தான் இருப்பார்கள், சே வும் அப்படித்தான் என இவர்களாக நினைத்து கொள்கின்றார்கள்


அதனை பரப்பவும் செய்கின்றார்கள்


கியூப வெற்றிக்கு பின் சே காங்கோ சென்று தலைமறைவு போராட்டம் நடத்தினார், அந்நேரம் சேயினை பதவிக்காக‌ காஸ்ட்ரோ கொன்றுவிட்டதாக அமெரிக்கா அள்ளிவிட்டது சேவும், காஸ்ட்ரோவும் ஆளாளுக்கு ஒரு பக்கம் இருந்து சிரித்துகொண்டிருந்தார்கள்


அப்படி இந்த பதர்களை கண்டு நாமும் சிரித்துவிட்டு செல்ல வேண்டியதுதான்..



No comments:

Post a Comment