Saturday, June 24, 2017

ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய் என ஒப்பாரி வைப்பது ஏன்?




தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு சோதனை கொடுக்கும் விஷயங்கள் பல உண்டு, அதில் ஒன்று ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய் என ஒப்பாரி வைப்பது


இதில் ஒளிந்திருக்கும் அரசியல் வேறுமாதிரியானது


அதாவது ராஜிவ் கொலை தேசிய குற்றம், இந்நாடு அதன் வீரியத்தை அப்படித்தான் பார்க்கின்றது, இவர்களை வெளியே விட்டால் வடக்கே பெரும் சிக்கல் வரும்


கோட்சே முதல் அப்சல் குரு வரை எல்லோர் தண்டனையும் கேள்விகுறியாகும், பெரும் பிரளயம் வரும், 
இதனால்தான் இதனை வைத்து மத்திய அரசோடு அடிக்கடி தமிழகம் விளையாடும், ஜெயலலிதா அந்த தந்திரத்தில் கைதேர்ந்தவர்,


இப்பொழுது யாரோ மத்திய அரசோடு மறைமுக கோரிக்கை வைக்க விரும்புகின்றார்கள், புகை கிளம்புகின்றது. இனி கோரிக்கையின் நிலவரம் பொறுத்து புகை அடங்கும்


உண்மையில் அவர்கள் மீது யாருக்கும் அனுதாபமில்லை, அக்கறையும் இல்லை, அரசியலுக்காக ஆடும் ஆட்டம்.


இப்பொழுது விவகாரம் பேரரிவாளன் விஷயத்தில் வருகின்றது, அவரின் தந்தைக்கு உடல் சரியில்லை பரோலில் விடவேண்டும் என்கின்றார்கள்


சட்டம் விட மறுக்கின்றது


பேரரிவாளன் ஒன்றும் குற்றமற்றவர் அல்ல, யாழ்பாணம் சென்று புலிகளை சந்தித்தது, இந்திய அமைதிபடைக்கு எதிரான புலிகளின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் உதவியது, சிவராசனுக்கு வயர்லெஸ் தொடர்பிற்காக‌ சக்திவாய்ந்த கார் பேட்டரி வாங்கி கொடுத்தது என ஏராள குற்றம் உண்டு


அதாவது இவர் ஒரு புலி, 100% விடுதலை புலி, அதில் சந்தேகமே இல்லை, அதுதான் சிக்கல்


ராஜிவ் கொலையில் செத்துபோன ஹரிபாபு , ஈழபுலிகளுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்பதும், அவர் ராஜிவ் கொலைக்கு பின் ஈழத்தில் குடியேற இருந்ததும் அவரின் காதலி எழுதிய கடிதத்தில் தெரிகின்றது


அவரின் பங்களிப்பு போன்றதுதான் பேரரிவாளனின் பங்களிப்பும், குற்றத்திற்கு துணை சென்றவர் என்பதில் சந்தேகமில்லை


அவர் பரோலில் வரலாம், தந்தையினை சந்திக்கலாம், அல்லது அக்காலம் முழுவதும் வீட்டு காவலில் வைக்கபடலாம், சட்டத்தில் இடமிருந்தால் செய்யலாம்


அவர் குற்றவாளி இல்லை என்பதெல்லாம் பெரும் பொய், வறட்டு வாதம். ஆனால் தந்தையின் உடல்நிலை மோசமான நிலையில் தந்தையினை அவர் வந்து பார்த்து செல்ல அனுமதி கொடுக்கலாம்


இந்த பிரச்சினை ஒடி கொண்டிருக்க, அங்கிள் சைமன் தன் டிரேட் மாரக் காமெடியினை தொடங்கிவிட்டார்


7 தமிழர்களையும் பரோலில் விடவேண்டுமாம், பேரரிவாளன் தந்தையினை பார்க்க வரவேண்டும், மீதி 6 பேர் எதற்காக பரோலில் வரவேண்டும்?


கேட்டால் என்னை பார்க்க என சிரிக்காமல் சொல்வார்


7 தமிழர் என்பதே மோசடி, 3 இந்தியர் 4 இலங்கையர் என்பதுதான் சரி, 3 இந்தியர்களை பரோலில் விட சொல்லி கேட்கலாம், ஓரளவு நியாயம்


4 அந்நிய நாட்டவர்களை பரோலில் விடு என்பது எப்படி சரியாகும்? கேட்க வேண்டிய நாடு இலங்கை, அது சத்தமே இல்லை


பேரரிவாளனின் பரோல் வேறு விஷயம், அதற்காக மீதி 6 பேருக்கும் பரோல் என்பது முதுகில் சாத்தவேண்டிய விஷயம்


ஒரு விஷயம் கவனித்தீர்களா?


முன்பெல்லாம் 7 பேர் விடுதலை என காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பாரி வைத்தார்கள், இப்பொழுது பாஜக ஆட்சியில் 7 பேருக்கும் பரோல் என குரலை மாற்றிவிட்டார்கள்


ஏன் என்றால் அப்படித்தான், இந்த பெரும் பிரச்சினையில் காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றுதான்


ஆனால் இவர்களுக்கு காங்கிரஸ் என்றால் பெரும் கசப்பு, பாஜக என்றால் கொஞ்சம் இனிப்பு


அதனால் விடுதலைக்கு பதிலாக பரோல் கேட்கின்றார்கள்


அங்கிள் சைமன் , பேரரிவாளனை தவிர வேறு 6 பேருக்கும் எதற்கு பரோல், யாரை வந்து சந்திப்பார்கள் உங்களை தவிர?


6 பேர் வெளிவருவதற்கு பதிலாக நீங்கள் உள்ளே சென்றால் என்ன?


பேரரிவாளனுக்கு பழ.நெடுமாறன் உட்பட பலர் பரோல் கோரிக்கை வைக்கின்றார்கள், ஒன்று செய்யலாம்


பேரரிவாளன் பரோலில் இருக்கும் வரை பிணையாக பழ.நெடுமாறனையும் அவரோடு ஒப்பாரி வைப்பவர்களையும் சிறையில் வைக்கலாம், பேரரிவாளன் திரும்பி வந்த பின் விடுவிக்கலாம்


இந்த தியாகத்தை செய்கின்றீர்களா என கேட்டால், அதன் பின் பழ.நெடுமாறன் போன்ற கும்பல் வாய் திறக்கும்??




 

 



 

No comments:

Post a Comment