Tuesday, June 20, 2017

தமிழனாக இருந்தால் 'வனமகன்' படத்தை இணையத்தில் போடாதீர்கள்: ஜெயம் ரவி

தமிழனாக இருந்தால் 'வனமகன்' படத்தை இணையத்தில் போடாதீர்கள்: ஜெயம் ரவி

ஆக தமிழன் என்பது யார் எனும் விஷயம் வனமகன் படத்தினை இணையத்தில் பார்க்காததில்தான் இருக்கின்றது என்பது அன்னாரின் தீர்ப்பு

அதாவது இவர்கள் சொல்லும்படி படம் பார்ப்பவன் மட்டும்தான்த தமிழன், அல்லாதவன் தமிழனே அல்ல‌


அன்னார் தமிழ் வம்சாவழி அல்ல என்பது குறிப்பிடதக்கது, ஆனால் அவர்தான் எப்படி படம் பார்ப்பவன் ஒரிஜினல் தமிழன் தெரியுமா? என சொல்லிகொண்டிருக்கின்றார்

இன்னொருவர் சொல்லியிருந்தால் இந்நேரம் எங்கிருந்தாவது பல்டியத்து மைக் முன்னால் வரும் சீமான், "ஏய் தெலுங்கு வந்தேறி....என்ன சொன்னாய் என் வீர தமிழினத்தை..." என சீறுவார்

ஆனால் ஜெயம்ரவி போல‌ சினிமாகாரன் சொன்னால் சீமான் ஒன்றும் சொல்லமாட்டார், காரணம் அவரும் சினிமாக்காரன்.

சினிமாக்கார தமிழன் எவனும் இதில் வாய்திறக்கமாட்டான், அப்படி திறந்தால் அது இணைய வெளியீட்டு ஆதரவு எனும் சர்சையில் வரும்

திரையுலக வசூல் எனும் நிலை வரும்பொழுது தமிழனாக, தெலுங்கனாக இருந்தால் என்ன? எஸ்கிமோவாக இருந்தால் என்ன? அவர்களுக்கு பிரச்சினையே இல்லை, மகா அமைதி

அதனால் இந்த "யார் தமிழன்?" பிரச்சினையில் ஜெயம் ரவி ராமதாஸ் கோஷ்டியிடம் சிக்க வாய்ப்பிருக்கின்றது அல்லது சில "வசூல்" தமிழர்களிடம் வசமாக சிக்க வாய்பிருக்கின்றது.

No comments:

Post a Comment