Sunday, June 18, 2017

இந்தியன் காண கூடாத‌ பாகிஸ்தான் அதிரடி





இந்த ஞாயிற்று கிழமை மாலை எல்லா தெய்வத்திடமும் ஜெபித்துவிட்டு, பாரதமாதாவிடமும் இந்திய அணிக்காக வேண்டிகொண்டு டிவி பக்கம் செல்லும்பொழுதுதான் அந்த அபாய அழைப்பு வந்தது


சில தமிழக‌ போதகர்கள் வந்திருப்பதாகவும், தமிழில் ஜெபிப்பதாகவும் என்னை அழைத்தார்கள்.


அதாகபட்டது இங்குள்ள லோக்கல் ஜெபவீரர்கள் சபையில் தமிழ் பேசுவார்களே அன்றி தமிழை வாசிக்க சரிவர தெரியாது, அதனால் நம்மை அழைத்து வாசிக்க வைப்பார்கள்,





இந்த தமிழக போதகர்கள் போதிக்கும் பொழுது நீர் இருநதே ஆகவேண்டும் என அழைத்ததால் மறுக்க முடியவில்லை.

நாம் ஒன்றும் தீவிர கிறிஸ்தவர்கள் அல்ல, ஆனால் தமிழுக்காய் அழைத்ததால் சென்றாக வேண்டும்

இந்த இந்தியா பாகிஸ்தான் மேட்சை பார்க்காதவன் ஒரு இந்தியனாக இருக்க முடியுமா? மனதில் இந்தியனாக அந்த கோபம் எழுந்தது பைபிளை எவன்டா எழுதினான்?

வைகோவினை தடுத்தவர்கள் இந்த போதகர்களை ஏன் நாட்டிற்குள் அனுமதித்தார்கள் என முணகியபடியே சென்றேன்

போதகர்கள் விடுவார்களா? பைபிளை குலுக்கு அமுக்கி பல கருத்துக்களை அவர்களாகவே சொல்லி அறுத்தார்கள், ஒரு வழியாக தப்பி ஓடிவந்து மேட்சை பார்த்தால்..

நல்ல வேளையாக பாகிஸ்தான் அதிரடியினை காணும் வாய்ப்பு இல்லை, இருந்திருந்தால் இதய துடிப்பு ஏறி இதய வெடிப்பே வந்திருக்கும்

இந்த பெரும் கொடுமையினை பார்த்து நான் சாகாமல் இருக்க இந்தியாவின் தமிழகத்தில் இருந்து சில போதகர்களை அனுப்பி இயேசு என்னை காத்திருக்கின்றார்

என் மேல் என்ன கருணை அந்த இயேசுநாதருக்கு?, சும்மாவா உலகமெல்லாம் அவரை கொண்டாடுகின்றார்கள்

இந்த மேட்சை பார்த்து நான் சாகமலோ, என் வீட்டு டிவி உடையமலோ காப்பாற்றியதற்காக கோட்டான கோடி நன்றி இயேசப்பா, கோட்டான கோடி நன்றி

அஸ்வின் , ஜடேஜா இருவரையும் "இனி பந்தை தொடுவியா? தொடமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டுபோ.." என பாகிஸ்தான் அணி சொல்லாமல் சொல்லிவிட்டது.

இனி இந்தியாவில் நாம் கிரிக்கெட் மட்டையினை தொடமாட்டேன் என சத்தியம் செய் என நமது வீரர்களிடம் தான் கேட்க வேண்டும், அல்லாவிட்டால் மட்டையினை நாமே பிடுங்கிவிட வேண்டும்,

ஆளுக்கு முன்பு பேட்டை தூக்கிகொண்டு சென்ற கோலியும், ரோகித் சர்மாவும் அவ்வகை, இனி அவர்கள் பேட்டை பிடுங்கியே ஆகவேண்டும்

எங்களை விட்டிருந்தால் கூட பாகிஸ்தானை அடித்து போட்டு கோப்பையினை தூக்கியிருப்போம், இந்த அவமான தோல்விக்கா பைனலுக்கு சென்றீர்கள் என வங்க நண்பர்கள்
கண்களால் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை

இனி பாகிஸ்தான் கோப்பையினை வாங்கிய பின், மாட்டுகறி தான் எங்கள் வெற்றிக்கு காரணம் என சொன்னால் இந்திய மானம் என்னவாகும்?

எப்படியோ, ஒரு இந்தியன் காண கூடாத‌ பாகிஸ்தான் அதிரடியினை பார்க்க முடியாதபடி என்னை தடுத்த இயேசுபிரானுக்கு கோட்டான கோடி நன்றி.

பாகிஸ்தான் அணியினை இந்தியாவில் விளையாட அனுமதிக்க முடியாது என மத்திய அரசு சொல்வதிலும் அர்த்தம் இருக்கின்றது, இதுதான் ராஜதந்திரம்..




 

 



 

No comments:

Post a Comment