Tuesday, June 20, 2017

தனியரசு, கருணாஸ், அன்சாரி ஆகியோர் வெளிநடப்பு ...


எடப்பாடி பழனிச்சாமியின் பதிலில் திருப்தி இல்லாததால் தனியரசு, கருணாஸ், அன்சாரி ஆகியோர் வெளிநடப்பு


சட்டபேரவையில் பழனிச்சாமி பதில் சொன்னதில் இவர்களுக்கு திருப்தி இல்லையாம்


இதனையெல்லாம் யாராவது நம்புவார்களா?




ஆனால் எதில் "திருப்தி" இல்லை என்பதை சொல்லி புரிந்துகொள்ளும் அளவுக்கா தமிழகம் இருக்கின்றது, அதுவும் இந்த 3 பேரை பற்றியுமா தெரியாது?






ஜூன் 30 நள்ளிரவில் ஜி.எஸ்.டி. தொடக்க விழா - மன்மோகன் சிங், தேவ கௌடா பங்கேற்பு: அருண் ஜெட்லி தகவல்


வரி போடுவதற்கும் ஒரு விழாவா? இப்படி ஒரு காட்சியினை எந்த நாட்டிலாவது பார்க்க முடியுமா?


ஒருவேளை இப்படி சிந்திக்கலாம்?





ஜிஎஸ்டி வரிவிதிப்பு வெற்றியாக முடிந்து அதனால் நாடு சுபிட்சம் அடைந்து விழா கொண்டாடுவதுதான் முறை

நமது ஆட்சியில் அதற்கு வாய்ப்பே இல்லை

அதனால் தொடக்கத்திலே கொண்டாடுவோம், யாரும் கேட்க முடியுமா?





சீனாவின் அதிநவீன விண்கலம் சீன அதிபரின் நேரடி பார்வையில் விண்ணில் நிலைநிறுத்தபட்டது!


பிரான்ஸ் அதிபர் மேக்ரன் தலமையில் பெரும் மாற்றத்திற்கு தயாராகின்றது பிரான்ஸ்!


எர்டோகன் தலமையில் புதிய எழுச்சி காண்கின்றது துருக்கி, கத்தார் பிரச்சினையில் எர்டோகன் மத்தியஸ்தம்!




உலக செய்திகள் இப்படி இருக்க, இந்திய செய்தி எப்படி இருக்கின்றது?
பிரதமர் மோடி தலமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நாட்டிற்கு எவ்வளவு அவசியம்?


விரைவில் மோடி தலமையில் பிரமாண்ட பூனூல் விழா, பிரமாண்ட காதுகுத்துவிழா, பிரமாண்ட மாட்டுக்கு மணி சூட்டும் விழா என நிறைய நடக்கலாம்






 




No comments:

Post a Comment