Friday, June 16, 2017

நியூட்ரினோ திட்டம் விரட்டியடிக்கபட்டுள்ளது

ஒரு வழியாக நியூட்ரினோ திட்டம் விரட்டியடிக்கபட்டுள்ளது, தமிழகத்தில் இதுவரை நடந்த எதிர்ப்பு போராட்டத்தில் இது ஒன்றுதான் நிறைவேறியுள்ளது


இந்த வெற்றிக்கு யார் உரிமை கொண்டாட போகின்றார்களோ தெரியாது? ஆனால் என்னால்தான் விரட்டமுடிந்தது என விரைவில் சில கும்பல்கள் பெரும் யுத்தம் புரியும் என்பது மட்டும் உண்மை


அடுத்த போராட்டம் எங்கே? குலசேகர பட்டினத்தில் அமைய இருக்கும் ராக்கெட் ஏவுதளத்திலா?


அந்த ராக்கெட் நிலையம் அமைவதில் ஒரு பிரச்சினையும் இருக்க முடியாது, அப்துல் கலாம் பெயரில் அது அமையுமானால் நிச்சயம் வரவேற்கலாம்


ஆனால் விடுவார்களா? நம்மவர்கள் எப்படிபட்டவர்கள்?


ஆனால் விரட்டவேண்டிய கூடங்குள அணுவுலை அதன் அருகில்தான் இருக்கின்றது, அதற்கு ஒன்றும் சொல்லமாட்டார்கள்


ஆனால் ஆபத்து இல்லாத ராக்கெட் ஏவுதளத்திற்கு இப்பொழுதே சிலர் முணுமுணுக்கின்றார்கள், அடுத்த தமிழ் உணவாளர்களை அங்கே காணலாம் போல தெரிகின்றது

No comments:

Post a Comment