Friday, June 23, 2017

சஞ்சய் காந்தி மறைந்த தினம்....



Image may contain: 1 person, sunglasses, glasses and close-up


கட்சியின் எந்த பதவியிலும், அரசின் எந்த பதவியிலும் இல்லாத ஒருவன் தன் குடும்ப அரசியல் பலத்தால் பெரும் நாட்டையே ஆட்டி வைக்கலாம் என இந்தியாவிற்கு புது இலக்கணம் எழுதியவர் சஞ்சய் காந்தி


இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி, 1971 முதல் 1980 வரையான காலகட்டங்களில் இந்தியாவினை ஆட்டிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி.


வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, கட்டாய கருக்கலைப்பு திட்டம், சில துப்பாக்கி சூடுகளுக்கு காரணம், டெல்லியினை ஆட்டிவைத்த சில சம்பவங்கள் என ஏராளமான திகில் கதைகள் உண்டு.


காங்கிரஸ் மூத்த தலைவர்களே அவரிடம் அஞ்சி ஒடுங்கி இருந்தார்கள் என்கிறது காங்கிரஸ் வரலாறு, நிச்சயமாக அப்படியும் காங்கிரசில் ஒரு பக்கம் இருக்கின்றது


Image may contain: 5 people, weddingஇவ்வளவிற்கும் கட்சியில் சஞ்சய்காந்தியின் பதவி என்னவென்றால் ஒன்றுமே இல்லை. ஆனால் கட்சி விவகாரங்களில் அவரின் கை ஓங்கியே இருந்திருக்கின்றது.


இந்திரா பல இடங்களில் அவரை கையாளமுடியாமல் தடுமாறி இருக்கின்றார், பிள்ளைபாசம் அவரையும் தடுமாற வைத்திருக்கின்றது


மிசா காலங்கள் சஞ்சய் காந்தியின் உச்ச ஆட்சி காலம், மிசாவினை கொண்டுவந்து இந்தியாவினை மிரட்டியது உண்மையில் சஞ்சய்தான்


அதனிலிருந்தே இந்திராவின் நிம்மதி போயிற்று, பெரும் அரசியல் நெருக்கடி அவருக்கு ஆரம்பமாயிற்று, என் அன்னையின் மன உளைச்சலுக்கு சஞ்சய்தான் காரணம் என வாய்விட்டு சொன்னார் ராஜிவ்காந்தி


இந்திராவினையும் பல இடங்களில் மீறி பெரும் அசாதரண மனிதனாக பெரும் மிரட்டலான தலைவனாக சஞ்சய் உருவாகிகொண்டிருந்த பொழுதுதான் அந்த விமான விபத்து நடந்தது


அது இதே ஜூன் 23,


சஞ்சய் எதிர்பாரா விதமாக விமான விபத்தில் இறந்தார். நாள்தோறும் சிறிய விமானத்தில் பறந்துவிட்டு வருவது அவரின் வாழ்க்கை முறையில் ஒன்று, அன்று அப்படி பறந்த விமானம் விபத்துகுள்ளாகி இறந்தார் சஞ்சய்.


அன்று மேனகாவின் வயது 24, இந்த வருண்காந்தி 3 மாத குழந்தை.


அந்த விபத்து இந்திய அரசியலை புரட்டி போட்டது, இந்திராவிற்கு பின் சஞ்சய் வந்திருந்து இன்று மேனகா பிடித்திருக்க வேண்டிய இடத்தை சோனியா பிடித்துகொண்டார்


வருண் காந்தியின் இடம் ராகுலுக்கு சென்றுவிட்டது


சஞ்சய் இருந்திருந்தால் என்னென்ன பிரளயம் எல்லாமோ ஏற்பட்டிருக்கும், பாரதீய ஜனதா கூட எழும்பியிருக்க முடியாது.


ஆனால் விதி அது அல்ல. காலம் எப்படி எல்லாம் விளையாட்டு காட்டிகொண்டிருக்கின்றது.


இன்று சஞ்சய் காந்தி நினைவு நாள். அவர் கட்சியிலும் ஆட்சியிலும் எந்த பொறுப்பிலுமில்லை, ஆனால் இந்தியாவினை ஆட்டி வைத்திருந்தார்.


இன்றைய அதிமுக தலமை அட்டகாசங்களுக்கு அவர்தான் முன்னோடி, எப்படி எல்லாம் அம்மா, சின்னம்மா என்ற பெயரை பயன்படுத்தி ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடலாம் என சொல்லிகொடுத்தவர் அவர்


அதனைத்தான் இன்று அதிமுகவும் செய்கின்றது


காங்கிரசார் அவரை நினைக்கின்றார்களோ இல்லையோ, மன்னார்குடி குடும்பம் சஞ்சய் காந்தியினை நன்றியோடு நினைக்கத்தான் வேண்டும்


அவர் காட்டிய வழியில் சென்றவர்கள், சென்று கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்


அது இருக்கட்டும்


என்ன சாபமோ தெரியவில்லை இந்திரா, ராஜிவ், சஞ்சய் என மூன்றுபெருமே கோரமாக கொல்லபட்டது இந்தியாவின் பெரும் சோகம், தீராத சோகம்.


ஆனால் இந்தியாவின் துணிச்சலான அரசியல்வாதிகள் அவர்கள்தான்


அதனால்தான் என்னமோ அவர்களுக்கு பின்னரான எந்த தலைவர்களுக்கும் அந்த துணிச்சல் வரவே இல்லை


மிக எதிர்பார்க்கபட்ட மோடியும் பாய்வார் என்றால் அவர் யோகா செய்து முனிவர் போல மாறிகொண்டிருக்கின்றார், ஒருவேளை தவ வலிமையால் உலகினை மிரட்டுவார் போல‌


சஞ்சயின் எதிர்பாரா மரணம், இந்திய அரசியலை புரட்டிபோட்ட சம்பவம் என்பது மட்டும் நிச்சயம்..














 


 

No comments:

Post a Comment